தங்கம் இப்போ வாங்கினால்.. தீபாவளிக்கு செம லாபம்? 2025 முடிவில் ஜாக்பாட்.. நிபுணர்கள் கணிப்பு..!!

இந்தியாவின் மிக முக்கியமான தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை சந்தையில் ஆரவாரம் அதிகரித்துள்ளது. இதேவேளையில் அச்சமும் அதிகரித்துள்ளது, இந்த ஆண்டு இதுவரை தங்கம் விலை 47 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது, வெள்ளி விலை 52 சதவீதத்திற்கும் மேல் ஏற்றம் கண்டுள்ளது.

இந்த அதீத விலையில் தங்கம், வெள்ளியை வாங்குவோர் எண்ணிக்கை குறையும் என நகை கடை உரிமையாளர்கள் கருதுகின்றனர். இதேவேளையில் பழைய தங்க நகையை மாற்றி புதிய நகையை பெறுவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளதால் நாடு முழுவதும் அனைத்து நகை கடைகளும் இதற்கு தயாராகி வருகிறது.

பொதுவாகவே இந்தியாவில் தீபாவளி மற்றும் தீபாவளி பண்டிக்கைக்கு பின் துவங்கும் திருமண சீசனின் போது தங்கம், வெள்ளி விற்பனை அதிகரிக்கும். எனவே ஒவ்வொரு வருடமும் தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை சந்தைக்கு இது முக்கியமான வர்த்தக காலக்கட்டமாக விளங்குகிறது. இதேபோல் உள்நாட்டில் டிமாண்ட் அதிகரிக்கும் காரணத்தால், சர்வதேச சந்தை வர்த்தகத்தை தாண்டி இதன் விலை அதிகரிக்கும் வாய்ப்பை கொண்டுள்ளது.

தங்கம் இப்போ வாங்கினால்.. தீபாவளிக்கு செம லாபம்? நிபுணர்கள் கணிப்பு..!!

இன்றைய விலை நிலவரம்
சனிக்கிழமை (அக்டோபர் 4) வர்த்தக முடிவில் ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் உயர்ந்து 1,09,500 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 440 ரூபாய் உயர்ந்து 1,19,460 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 440 ரூபாய் உயர்ந்து 95,568 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 3000 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 1,65,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 1290 ரூபாய் உயர்ந்து 45,760 ரூபாயாக உள்ளது.

தற்போது மல்டிகம்மாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (எம்சிஎக்ஸ்)யில் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,18,000-ஐத் தாண்டியுள்ளது. இந்த உயர்வு தான், தீபாவளி பண்டிகை காலத்தில் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சந்தை சூழ்நிலை
சந்தை நிபுணர்களின் கணிப்பின் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வில் தற்போது இருக்கும் தங்கம் விலை ஏற்றம் தொடர்ந்து நீடிக்கலாம் என்று கூறுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக விளங்குவது உலகளாவிய மற்றும் உள்நாட்டு இருக்கும் டிமாண்ட் தான்.

இந்திய மக்கள் பொறுத்தவரையில் குறிப்பாக வட இந்திய மாநிலங்களில், தீபாவளி காலத்தில் தங்கம் வாங்குவது ஒரு முக்கியமான பழக்கமாக உள்ளது. இதனால் உள்நாட்டு ரீடைல் சந்தையில் தங்கத்திற்கான டிமாண்ட் இந்த மாதம் அதிகரிக்கும் என்பது உறுதி.

செப்டம்பர் மாதத்தில் தங்கம் விலை 10 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்தது, வெள்ளி 15 சதவீதம் ஏற்றம் கண்டது. தற்போது வெள்ளி கிலோவுக்கு ரூ.1.44 லட்சத்திற்கும் மேல் விற்கப்படுகிறது. இந்த உயர்வு தீபாவளி பண்டிகை கால டிமாண்டின் மூலம் கூடுதலாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் இப்போ வாங்கினால்.. தீபாவளிக்கு செம லாபம்? நிபுணர்கள் கணிப்பு..!!

தங்கம் - வெள்ளி விலை உயர்வின் கணிப்பு
சந்தை நிபுணர்களின் கணிப்பின் படி தீபாவளி வரை தங்கம் 10 கிராமுக்கு ரூ.1.22 லட்சத்தை அடையலாம் என்று கணிக்கின்றனர், இதேபோல் இந்த ஆண்டு முடியும் போது ரூ.1.25 லட்சத்திற்கு உயரலாம்.

இதேபோல் வெள்ளி விலை தீபாவளி வரை கிலோவுக்கு ரூ.1.50 லட்சத்தை தொடலாம், டிசம்பர் வரை ரூ.1.58 முதல் ரூ.1.60 லட்சம் வரை ஏறலாம் என உலகளாவிய சந்தை ஏற்றத்தை அடிப்படையாகக் கொண்டு கணித்துள்ளனர். ஆனால் தீபாவளி மற்றும் திருமண சீசன் இந்த இலக்கை விரைவாக அடையவும் வழிவகுக்கும் என தெரிவித்துள்ளனர்.

சர்வதேச சந்தையில், தங்கம் ஒரு அவுன்ஸுக்கு 3,940 முதல் 4,000 டாலர்களை தொடலாம், வெள்ளி 48.40 முதல் 50 டாலர்கள் வரை உயரலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதலீட்டாளர்களுக்கு அட்வைஸ்:
இந்த கணிப்புகள், பண்டிகை காலத்தை டார்கெட் செய்து தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வோருக்கு ஜாக்பாட் ஆக இருக்கும். ஆனால் முதலீடு செய்யும் முன் சந்தை ஏற்ற இறக்கங்களை கவனிக்க வேண்டும்.

அடுத்த 3 மாதங்களில் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வை சப்போர்ட் செய்யும் வகையில் தீபாவளி மற்றும் திருமண கால டிமாண்ட் உள்ளது, உலகளவிய மத்திய வங்கிகளின் மந்தமான நாணய கொள்கைகள், அரசியல் நிலையற்ற தன்மை, தொடர்ந்து அதிகரிக்கும் கோல்டு ஈடிஎஃப் (ETF) முதலீடுகள் ஆகியவையும் தங்கம் வெள்ளி உயர்வுக்கு ஆதரவாகவும் உள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+