இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை, சென்னையில் மட்டுமின்றி, பல மாநிலங்களிலும் தன் வாழ்நாள் உச்ச விலையைத் தொட்டுக் கொண்டு இருகிறது.
உதாரணமாக டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களைச் சொல்லலாம். இந்த விலை ஏற்றத்தால், தங்கத்துக்கான டிமாண்டும் கணிசமாக குறைந்து இருக்கிறது என்பதை மறுப்பதற்கு இல்லை.
எனவே, தங்கத்தை விற்கும் டீலர்கள் தங்கத்தை தள்ளுபடி விலையில் விற்கிறார்களாம். அது போக, மேலும் தங்கத்தின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள் சந்தை நிபுணர்கள்? என்ன காரணம்? வாருங்கள் பார்க்கலாம். அதோடு Gold விலை நிலவரத்தையும் பார்க்கலாம்.
தள்ளுபடி விலையில் தங்கம்
தங்கத்தை வாங்குவதற்கான டிமாண்ட் குறைந்து இருப்பதால், தங்க டீலர்கள், அதிகார பூர்வமாக விற்க வேண்டிய விலையை விட, ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு 22 டாலர் குறைவாக விற்கிறார்களாம். கடந்த வாரத்தில் இதே ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கான விலையை 18 டாலர் குறைத்து விற்றதும் இங்கு நினைவு படுத்திக் கொள்ள வேண்டி இருக்கிறது. டீலர்கள் தள்ளுபடி கொடுப்பது ஒரு பக்கம் நல்ல செய்தி என்றாலும், மற்ற இடங்களில் தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே போகிறதே.
அடுத்த MCX டார்கெட் 49,000
உதாரணமாக, இந்தியாவின் கமாடிட்டி சந்தையான மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஆகஸ்ட் 2020-க்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சரின் விலை நேற்று 48,825 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. தற்போது 48,921 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக எம் சி எக்ஸ் தங்கத்தின் அடுத்த டார்கெட் 49,000 ரூபாய் போலிருக்கிறதே! உள்ளூர் தங்கம் இப்படி என்றால், வெளி நாடுகளில் தங்கள் டாப் கியரில் பறக்கிறது.
டாப் கியரில் சர்வதேச தங்கம் விலை
ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை சர்வதேச அளவில் 1,789 டாலரைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. 18 ஜூன் 2020-ல் இருந்து இன்று வரை, சர்வதேச தங்கம் விலை 1,722 டாலரில் இருந்து 1,789 டாலரைத் தொட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. அதான் 2,000 டாலர் வரைத் தொடலாம் என கோல்ட் மேன் சாக்ஸ் எல்லாம் சொல்லி இருக்கிறார்களே, பிறகு என்ன? என மனதை தேற்றிக் கொள்ள வேண்டியது தான். இப்படி வெளிநாடுகளில் தங்கம் விலை அதிகரித்தால், சென்னையிலும் தங்கம் விலை அதிகரிக்கத் தானே செய்யும்..? இதோ சென்னையில் தங்கம் விலை விவரங்கள்.
சென்னை தங்கம் விலை
சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று
50,490 ரூபாய்க்கு விற்கிறார்கள். 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 46,280 ரூபாய்க்கு விற்கிறார்களாம். கடந்த 20 ஜூன் 2020-ல் இருந்து, 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 50,000 ரூபாய்க்குக் கீழ் வரவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் தங்கம் விலை, பல காரணங்களால் இன்னும் விலை ஏறலாம் என்கிறார்கள்.
ஒரே நாளில் 1 லட்சம்
ஏற்கனவே உலகில், ஒரு கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அமெரிக்காவில் கொரோனா வைரஸை இன்னும் முறையாக கட்டுப்படுத்தவில்லை என்றால், ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு கொரோனா பரவும் நிலை வரலாம் என சில அமெரிக்க அதிகாரிகள், நேற்று எச்சரித்து இருக்கிறார்கள். இதுவும் கொரோனா வைரஸ் மீதான பயத்தை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. எனவே தங்கத்தை நோக்கி மீண்டும் ஓடத் தொடங்கி இருக்கிறார்கள் முதலீட்டாளர்கள்.
அமெரிக்கா சீனா பஞ்சாயத்து
கொரோன பிரச்சனை போதாது என, அமெரிக்காவும் சீனாவும் அவ்வப் போது வார்த்தைப் போரில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அமெரிக்கா உய்கர் இஸ்லாமியர் பிரச்சனையை வைத்து சீன அதிகாரிகள் அமெரிக்காவில் நுழையும் அனுமதியை மறுக்கிறது என்றால், சீனா அமெரிக்காவை திருப்பி அடிப்பேன் என வெளிப்படையாகச் சொல்லி மிரட்டுகிறது. ஹாங்காங் விவகாரத்தை அமெரிக்கா கையில் எடுத்தால், சீனா அமெரிக்கர்களின் விசாக்களை ரத்து செய்வேன் என்கிறது. இந்த பிரச்சனைகளால், முதலீட்டாளர்கள் மீண்டும் தங்கத்தில் தஞ்சமடைகிறார்கள். தங்கம் விலை அபாரமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது.
பாதுகாப்பு தான்
அமெரிக்காவில் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவர் "பொருளாதாரத்தில் ஒரு அசாதாரணமான, நிலையற்ற தன்மை (Extraordinary Uncertainity) நிலவுகிறது" சொல்லி இருக்கிறார். சர்வதேச பன்னாட்டு நிதியம் (IMF) உலக பொருளாதாரம் 2020-ல் 4.5% வீழ்ச்சி காணும் எனக் கணித்து இருக்கிறது. இந்த செய்திகள் எல்லாம், முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி ஓட வைத்துக் கொண்டே இருக்கிறது. தங்கத்தின் விலையும் விண்ணைத் தொட்டுக் கொண்டே இருக்கிறது.
55,000 ரூபாயைத் தொடலாம்
அமெரிக்கா சீனா சர்வதேச அரசியல் பிரச்சனைகள், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகம், பன்னாட்டு நிதியத்தின் பொருளாதார கணிப்பு, அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் தலைவரின் எச்சரிக்கை... போன்ற காரணங்களால், தங்கத்தை வாங்குவதைத் தவிர முதலீட்டாளர்களுக்கு வேற வழி இல்லை போலத் தெரிகிறது. "2020-ம் ஆண்டு முடிவுக்குள் தங்கம் 10 கிராமுக்கு 55,000 ரூபாயைத் தொடலாம்" என India Bullion and Jewellers Association (IBJA) தலைவர் பிரித்விராஜ் கோத்தாரி சொல்லி இருக்கிறார்.
More From GoodReturns

கச்சா எண்ணெய் சரிவு: இந்தியாவில் தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு! டிரம்ப், ஈரான் மோதல் என்ன ஆனது?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

மதுரை மக்களே.. தங்கம் விலை குறைந்தது.. உடனே நகை கடைக்கு கிளம்புங்க..!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!



Click it and Unblock the Notifications