தங்கம் விலை எரிமலையாய் வெடிக்கப்போகிறது.. எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

தங்கம் விலை ஆகஸ்ட் மாத இறுதியில் இருந்து தொடர்ந்து மந்த நிலையில் இருக்கும் வேளையில், அடுத்த சில நாட்களில் பெரிய அளவில் உயரப்போகிறது என சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர். இதனால் தங்க நகை வாங்குவோர் தற்போது இருக்கும் மந்தநிலையைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டு வாங்கிக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 7276 ரூபாயாக உள்ளது, இதுவே 22 கேரட் தங்கம் விலை 6669 ரூபாயாக உள்ளது. மேலும் ஒரு சவரன் தங்கம் விலை நேற்றைய விலையான 53,352 ரூபாயாக இன்றும் தொடர்கிறது. இதோடு ஒரு கிராம் வெள்ளி விலை 90 ரூபாயாகவும், 1 கிராம் பிளாட்டினம் விலை 14 ரூபாய் அதிகரித்து 2454 ரூபாயாக்கு தமிழ்நாட்டில் விற்கப்படுகிறது.

தங்கம் விலை எரிமலையாய் வெடிக்கப்போகிறது.. எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

சர்வதேசச் சந்தையில் நேற்று ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 2471 டாலர் வரையில் சரிந்த நிலையில் இன்று காலை ஆசியச் சந்தை வர்த்தகத்தில் தங்கம் விலை 2500 டாலருக்கு மேல் மீண்டும் உயர்ந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுவது சீன மத்திய வங்கியின் வட்டி குறைப்பிற்கான அறிவிப்புகள் தான். ஆனாலும் இது ரீடைல் சந்தையில் எதிரொலிக்காமல் தங்கம் விலை நேற்றைய விலைக்கே இன்றும் வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

சென்னை, மும்பை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய நாட்டின் முக்கியமான நகரங்களில் தங்கம் விலையில் மாற்றமில்லாமல் தொடர்ந்து நேற்றைய விலைக்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இன்று காலை முதல் எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏறுமுகத்துடனே உள்ளதால், இதன் தாக்கம் நாளை எதிரொலிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

சரி தங்கம் விலை உயரும் என நிபுணர்கள் கூற 2 முக்கிய காரணங்களை முன்வைக்கின்றனர். இதில் முதலும் முக்கியமாக அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித குறைப்பு, நேற்று வெளியான வேலைவாய்ப்பு தரவுகள் அந்நாட்டு அரசு கணிக்கப்பட்ட அளவை விட குறைவாக இருக்கும் காரணத்தால் செப்டம்பர் 17-18 ஆம் தேதி நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் 0.25 சதவீதம் முதல் 0.50 சதவீதம் வரையில் வட்டி விகிதம் குறைக்கலாம் என கணிக்கப்பட்டு உள்ளது.

இந்த வட்டி குறைப்பு மூலம் பத்திர சந்தையில் இருக்கும் அதிகப்படியான முதலீடுகள் வெளியேறும், இதனால் தங்கம் மீது அதிகப்படியான முதலீடுகள் குவிய வாய்ப்புள்ளது, இதன் வாயிலாகத் தங்கம் விலை அதிகரிக்கும்.

இதைத் தொடர்ந்து நிபுணர்கள் கூறும் 2வது முக்கிய காரணம் என்னவென்றால் இது இந்தியாவில் பண்டிகை மற்றும் திருமணங்கள் அதிகம் நடக்கும் காலம் என்பதால் தங்க நகை வாங்குவது நாடு முழுவதும் அதிகரிக்கும். டிமாண்ட் அதிகமாகும் போது தங்கம் விலை பெரிய அளவில் உயரும் வாய்ப்புகள் உள்ளது. சொல்லப்போனால் பண்டிகை காலத்திற்கு முன்பு தங்கம் விலையில் ஏற்பட்டு உள்ள மந்த நிலை தங்கம் வாங்குவோருக்கு மிகவும் சாதகமாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+