உலகளவில் ஏற்பட்ட பல பொருளாதார நெருக்கடிகள் காரணமாக கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் தங்கத்தின் விலை உச்சம் தொட்ட நிலையில், மே மாதத்தில் ஏற்ற இறக்கத்தைக் கண்டது. அதேபோல், ஜூன் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கத்தின் விலை சற்று சரிந்தது. ஆனால், கடந்த வாரம் விலை அதிகரித்து காணப்பட்டது. இப்படியே சென்றால், விரைவில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை எட்டும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால், நகை வாங்க வேண்டும் என்ற நடுத்தர மக்களின் ஆசையும் எட்டாக்கனியாக மாறி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இந்நிலையில் தான், தங்கத்தை இரண்டு வழிகளில் முதலீடு செய்யலாம் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1 லட்சம் என்ற வரம்பை நெருங்கி விட்டாலும், உலகளாவிய நிச்சயமற்ற சூழ்நிலையில், தங்கத்தில் முதலீடு செய்வதை நிபுணர்கள் இன்னும் பரிந்துரை செய்கின்றனர். குறிப்பாக Exchange-Traded Funds (ETF) அல்லது மல்டி-ஆசெட் ஃபண்ட்கள் வழியாக முதலீடு செய்ய பரிந்துரைக்கின்றனர். ஜூன் 13ஆம் தேதியன்று 99.9% தூய தங்கத்தின் விலை 1.6% உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.99,058 ஆக உயர்ந்ததாக இந்திய தங்கம் மற்றும் நகைக்கடைக்காரர்கள் சங்கம் (IBJA) தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு மாதமாக ரூ.95,000 முதல் ரூ.97,000 வரை ஏற்ற இறக்கமாக இருந்தது.

குறிப்பாக, சில்லறை முதலீட்டாளர்களுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய தங்க பரிமாற்ற வர்த்தக நிதிகள் (ETF) மூலம் படிப்படியாக முதலீடு செய்வது நல்லது என்று ஆனந்த் ரதி பங்கு மற்றும் பங்கு தரகர்களின் பொருட்கள், நாணயங்கள் மற்றும் சர்வதேச வணிக இயக்குனர் நவீன் மாத்தூர் கூறியுள்ளார். தங்க ETF என்பது ஒரு செயலற்ற முதலீடாகும். இது தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் இயற்பியல் தங்கத்தின் விலையைக் கண்காணிக்கிறது. மார்ச் மாத நிலவரப்படி, ரூ.58,885 கோடி மதிப்புள்ள நிகர சொத்துக்களை நிர்வகித்து வந்த நிலையில், இது சில ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 88 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சங்கத்தின் (AMFI) தரவுகளின்படி, "SIP முறையில் ETF-க்களில் முதலீடு செய்வது சிறந்தது என நவீன் மாதூர் தெரிவித்துள்ளார். தங்கம் ஒரு முதலீட்டாளரின் போர்ட்ஃபோலியோவில் சுமார் 10% இருக்க வேண்டும் என அவர் பரிந்துரை செய்கிறார். மேலும், அவர் கூறுகையில், டாலர் குறையும் போது, தங்க விலை உயரும். தற்போது டாலர் குறைந்த நிலையை (98-99) தொட்டுள்ளது. இது இந்திய ரூபாய் கூட பலவீனமடைந்ததால், தங்கத்தின் உள்ளூர் விலை மேலும் அதிகரித்து காணப்படுகிறது. அமெரிக்காவின் மந்தநிலை, கடன் சுமை மற்றும் அரசியல் மாற்றங்கள் காரணமாக முதலீட்டாளர்களை தங்கம் போன்ற பாதுகாப்பான சொத்துகளுக்கு திருப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் டாலர் வீழ்ச்சியடையும் சாத்தியக்கூறு காரணமாக கடந்த ஒரு வருடமாக தங்கம் விலை உயர்ந்திருந்தாலும், இது மேலும் உயரக்கூடும் என்று எச்சரித்துள்ளார். தங்கம் எப்போதுமே பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்பட்டு வருகிறது. கட்நதாண்டு அமெரிக்க பொருளாதாரம் வலுவாக இருக்கும் என்றும் உலகை வழிநடத்தும் என்றும் பலர் நம்பியிருந்தனர். ஆனால், அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றப் பிறகு, அந்த நம்பிக்கை பலவீனமடைந்துள்ளன.
ஒரு வருடத்திற்கும் மேலாக, உலகளாவிய நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் தங்கத்தின் விலை உயர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டில் MCX இல் 38.3% உயர்ந்துள்ளது. டிரம்ப் வரி விதிப்புப் போரை தொடங்கிய பிறகு தங்கம் மிகவும் கவர்ச்சிகரமானதாக மாறியுள்ளது. இது அதிக நிச்சயமற்ற தன்மைக்கு வழிவகுத்தது என்று அகில இந்திய ரத்தினம் மற்றும் நகைகள் கவுன்சிலின் தலைவர் ராஜேஷ் ரோக்டே கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications