தங்கம் விலை இன்று எப்படி இருக்கு.. வாங்க சரியான தருணமா?

டெல்லி: இந்தியாவில் விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில் தங்கம் (Gold) விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது கிட்டதட்ட இரண்டரை வருட சரிவில் இருந்து, சற்று ஏற்றம் கண்டிருந்தாலும், இது இன்னும் குறைந்த விலையிலேயே இருந்து வருகின்றது.

ஆக விழாக்கால பருவத்திற்கு வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தங்க டீலர்களுக்காக விலையானது தள்ளுபடி விலையில் கொடுக்கப்பட்டு வருகின்றது. இது மேற்கொண்டு ஆபரணத் தங்கம் விலையானது குறைய வழிவகுக்கலாம்.

அதெல்லம் இன்று தங்கம் விலை எப்படியிருக்கு? இது வாங்க சரியான தருணமா? வரவிருக்கும் வாரத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? வரவிருக்கும் நாட்களில் எப்படியிருக்கும்? நிபுணர்களின் கணிப்பு என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

டாலர் Vs தங்கம்

டாலர் Vs தங்கம்

தங்கம் விலையானது தொடர்ந்து டாலரின் மதிப்பானது வலுவடைந்து காணப்படும் நிலையில், தங்கம் விலையானது அழுத்தத்தில் காணப்படுகின்றது. டாலரின் மதிப்பானது கடந்த வாரத்தில் சற்றே வலிவிழந்த நிலையில், மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இது 114.77 என்ற லெவலில் காணப்படுகின்றது. இது ஒரு வாரத்தில் மட்டும் 1.61% என்ற அளவுக்கு ஏற்றம் கண்டுள்ளது.

ரூபாய் ஏற்றம்

ரூபாய் ஏற்றம்

இது கடந்த அமர்வில் இந்திய சந்தையில் 10 கிராமுக்கு 50,027 ரூபாயாகவும், தங்கம் விலை அவுன்ஸுக்கு 1660 டாலர்களாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வரும் நிலையில், ரிசர்வ் வங்கியும் வட்டி விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில, இது மேற்கொண்டு தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இனியும் அதிகரிக்கலாம்

இனியும் அதிகரிக்கலாம்

ஏற்கனவே கடந்த 5 மாதங்களில் 4 முறை வட்டி விகிதத்தினை அதிகரித்துள்ள நிலையில், வரவிருக்கும் கூட்டத்திலும் கட்டாயம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் அமெரிக்க மத்திய வங்கியும் வரவிருக்கும் கூட்டத்தில் கட்டாயம் வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாமென நிபுணர்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

சர்வதேச நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது மந்த நிலையில் இருந்து வரும் நிலையில், சில நாடுகளில் ரெசசன் அச்சமும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் தங்கம் விலையானது தீபாவளிக்குள் டாலரில் அவுன்ஸூக்கு 1710 என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே இந்திய சந்தையில் 52,500 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீடியம் டெர்மில் எப்படி?

மீடியம் டெர்மில் எப்படி?

முதலீட்டாளர்கள் மீடியம் டெர்மில் வாங்க நினைத்தால் வாங்கி வைக்கலாம். இதனை தீபாவளி வரைக்கும் பொறுத்திருந்த் பார்க்கலாம். இது நிச்சயம் நல்ல லாபம் கிடைக்கலாம். இது 10 கிராமுக்கு 49,500 என்ற லெவலுக்கு கிடைத்தால் வாங்கி வைக்கலாம். இது மீடியம் டெர்மில் 50,700 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையானது இன்று விடுமுறை என்ற நிலையில்,ஆபரண தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 7 ரூபாய் குறைந்து, 4690 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 56 ரூபாய் குறைந்து, 37,520 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து, 5116 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 64 ரூபாய் குறைந்து, 40,928 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து, 51,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை மாற்றமில்லாமல் காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 62 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 62 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 62,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.46,900

மும்பை - ரூ.46,500

டெல்லி - ரூ.45,650

பெங்களூர் - ரூ.46,550

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,900

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+