தங்கம் விலை இன்று எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா.. சாமானியர்களுக்கு சரியான வாய்ப்பு தான்!

டெல்லி: தங்கம் (Gold) விலையானது சர்வதேச சந்தையில் தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு சரியுமா? அல்லது இப்படியே ஏற்றம் காணுமா? தங்கம் விலையானது இரண்டரை வருட சரிவில் இருந்து வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறதா?

தொடர்ந்து அமெரிக்க ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்து வரும் நிலையில், இது பணவீக்கத்தினை கட்டுப்படுத்த வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் பொருளாதார வளர்ச்சியிலும் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாமோ என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

உச்சத்தில் இருந்து சரிவு

உச்சத்தில் இருந்து சரிவு

கடந்த மார்ச் மாதம் 2000 டாலர்களை தொட்ட நிலையில், தற்போது அந்த உச்சத்தில் இருந்து 20% சரிவினைக் கண்டுள்ளது. இது அமெரிக்காவின் தொடர் வட்டி அதிகரிப்பு, பத்திர சந்தை ஏற்றம் என பலவும் தங்கம் விலையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வட்டி அதிகரிப்பால் டாலரின் மதிப்பானது பல வருடங்களில் இல்லாத அளவுக்கு உச்சம் தொட்டுள்ளது.

பணவீக்கம் Vs தங்கம்

பணவீக்கம் Vs தங்கம்

தங்கம் பணவீக்கத்திற்கு திரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் நிலையில், அது தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம். எனினும் தொடர்ந்து அதிகரித்து வரும் வட்டி விகிதம் தங்கத்தினை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. இது மேற்கொண்டு தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தலாம்.

முக்கிய லெவல்

முக்கிய லெவல்

தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று அதிகரித்தாலும், மீண்டும் குறைவதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளது. தங்கத்திற்கான அடுத்த முக்கிய சப்போர்ட் லெவல் 1620 டாலர், அடுத்ததாக 1610 டாலரை தொடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர். எப்படியிருப்பினும் இன்று 1605 - 1645 டாலர்களுக்குள் தங்கம் விலை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 5.95 டாலர்கள் அதிகரித்து, அவுன்ஸுக்கு 1639.15 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்று தொடக்க விலையும் ஒன்றாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலை தடுமாற்றத்தில் காணப்பட்டாலும், மீண்டும் குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை பெரியளவில் மாற்றமின்றி சற்று அதிகரித்து, 18.500 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தற்போது சற்று அதிகரித்திருந்தாலும், இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 38 ரூபாய் அதிகரித்து, 49,188 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்த விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று தடுமாற்றத்திலேயே இருக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 197 ரூபாய் அதிகரித்து, 55,549 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் உள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 41 குறைந்து, 4610 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 328 ரூபாய் குறைந்து, 36,880 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று குறைந்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, 5029 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 360 ரூபாய் குறைந்து, 40,232 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 450 ரூபாய் குறைந்து, 50,290 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 80 பைசா குறைந்து, 60.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 607 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 800 ரூபாய் குறைந்து, 60,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.46,400

மும்பை - ரூ.45,800

டெல்லி - ரூ.45,950

பெங்களூர் - ரூ.46,850

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,100

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+