தங்கம் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி.. தொடர் சரிவில் விலை.. இன்று எவ்வளவு?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: தங்கம் (Gold) என்றாலே பிடிக்காத பெண்கள் இருப்பது குறைவு. குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மீதான ஆர்வம் மிக அதிகம். அதிலும் தீபாவளி நெருங்கிக் கொண்டுள்ள நிலையில், வாங்கும் போனஸில் ஒரு கிராம் தங்கமேனும் வாங்கிவிட வேண்டும் என்பது பலரின் ஆசையாக இருக்கும்.

அதற்கேற்ப தங்கம் விலையும் தொடர்ந்து குறைந்து வருவது, தங்க ஆர்வலர்களின் ஆர்வத்தினை மேற்கொண்டு தூண்டலாம்.

எனினும் இந்த சரிவு இனியும் தொடருமா? இன்றைய நிலவரம் என்ன? சர்வதேச சந்தையில் என்ன நிலவரம்? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் நிலவரம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

கேன்சல் செய்த காசோலையை கொடுக்கிறீர்களா? இதோ சில முக்கிய விஷயங்கள்!கேன்சல் செய்த காசோலையை கொடுக்கிறீர்களா? இதோ சில முக்கிய விஷயங்கள்!

தங்கம் விலைக்கு ஆதரவு

தங்கம் விலைக்கு ஆதரவு

தங்கம் விலையானது தற்போது அவுன்ஸூக்கு 1630 டாலர் என்ற லெவலில் காணப்படுகின்றது. இது டெக்னிக்கலாக பார்க்கும்போது தினசரி கேண்டில் பேட்டர்னில் கேம்மர் பார்ம் ஆகியுள்ளது. ஆக 1628 அல்லது 1651 டாலர்களை உடைத்தால் பெரியளவில் மாற்றம் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தங்கம் விலையானது தற்போது இரண்டரை வருட சரிவில் இருப்பதால் நீண்டகால நோக்கில் பலரும் வாங்க நினைக்கலாம். இந்த இடத்தில் வாங்குவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலைக்கு சாதகமாக அமையலாம்.

பணவீக்கம் அதிகரிக்கலாம்

பணவீக்கம் அதிகரிக்கலாம்

தொடர்ந்து அமெரிக்க டாலரின் மதிப்பு உச்சம், பத்திர சந்தை ஏற்றம் என்பது தங்கத்தில் முதலீடுகளை குறைந்தாலும், மறுபுறம் ஐரோப்பிய நாடுகளின் எனர்ஜிகளின் பற்றாக்குறையானது, மேற்கொண்டு பணவீக்கத்தினை தூண்டலாம். இது எரிபொருட்கள் விலையை மீண்டும் தூண்டலாம். ஆக இது நீண்டகால நோக்கில் தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் எனலாம்.

ரெசசன் அச்சம்

ரெசசன் அச்சம்

ஜெர்மனிக்கான எரிபொருள் பைப்லைன் சப்ளையை ரஷ்யா மூடியுள்ளது. இதன் காரணமாக ஜெர்மனியில் ஏற்கனவே எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருகின்றது. இதற்கிடையில் ஐரோப்பா முழுவதும் எண்ணெய் பற்றாக்குறையை ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

எண்ணெய் குழாய் உடைப்பா?

எண்ணெய் குழாய் உடைப்பா?

இதற்கிடையில் பால்டிக் கடலில் ரஷ்ய எண்ணெய் குழாயில் கசிவுகள் உள்ளதாக கூறப்படும் நிலையில், இது ரஷ்யா மிதான கோபத்தால் வேண்டுமென்றே ஏற்படுத்தப்பட்ட நாசவேலையாக இருக்கலாம் என்ற கருத்தும் இருந்து வருகின்றது. ஆக இதுவும் எரிபொருள் சப்ளையை மேற்கொண்டு பாதிக்கலாம். இது பெரியளவில் பணவீக்கத்தினை தூண்டலாம். இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எண்ணெய் நெருக்கடி

எண்ணெய் நெருக்கடி

ரஷ்யா - உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் ரஷ்யா எண்ணெய் குழாய்களில் உடைப்பு, நிரந்தரமாக எண்ணெய் சப்ளையை நிறுத்த கூட வழிவகுக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது.

மொத்தத்தில் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வட்டி விகிதத்தினை அதிகரிக்க, மேற்கண்ட பல காரணிகளும் காரணமாக அமையலாம். இது டாலரின் மதிப்பினை மேற்கொண்டு ஊக்கப்படுத்தலாம். எனினும் இது பொருளாதாரத்தில் வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பங்கு சந்தைகள் சரிவு

பங்கு சந்தைகள் சரிவு

தொடர்ந்து சர்வதேச பங்கு சந்தைகள் சரிவில் காணப்படும் நிலையில், அது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனை மேற்கொண்டு ஊக்குவிக்கும் விதமாக ரூபாயின் மதிப்பும் சரிவில் காணப்படுகின்றது. ஆக இந்தியாவில் தங்கம் விலைக்கு இது ஆதரவாக அமையலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 4.45 டாலர்கள் குறைந்து, 1631.70 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையும், இன்று தொடக்க விலையும் ஒன்றாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் தடுமாற்றத்தில் காணப்படலாம்.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை கிட்டதட்ட 1% சரிவினைக் கண்டு, 18.180 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 229 ரூபாய் குறைந்து, 49,090 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

 இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை குறைந்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 603 ரூபாய் குறைந்து, 54,765 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரண தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 15 அதிகரித்து, 4625 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 37,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து, 5045 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 128 ரூபாய் அதிகரித்து , 40,360 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 160 ரூபாய் அதிகரித்து, 50,450 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 70 பைசா குறைந்து, 60 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 600 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 700 ரூபாய் குறைந்து, 60,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

 முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?


22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.46,250

மும்பை - ரூ.45,800

டெல்லி - ரூ.45,950

பெங்களூர் - ரூ.46,860

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,250

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

gold price on 28th September 2022: gold prices trade nearly 1630 dollar per ounce

gold price on 28th September 2022: gold prices trade nearly 1630 dollar per ounce / தங்கம் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி.. தொடர் சரிவில் விலை.. இன்று எவ்வளவு?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X