நல்ல நல்ல வாய்ப்பினை எல்லாம் விட்டு விட்டோமோ.. இனி தங்கத்தில் அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா?

டெல்லி: தங்கம்(Gold) பாதுகாப்பு புகலிடம் என்ற பெயரினையே கடந்த சில வாரங்களாகவே இழக்கத் தொடங்கியது. ஏனெனில் தொடர்ந்து தங்கம் விலையானது அந்தளவுக்கு சரியத் தொடங்கியது.

இந்த நிலை இப்படியே தொடருமா? என்ற பெரும் கேள்வி எழுந்த நிலையில், அப்படி எல்லாம் இல்லை என்பதை சுட்டிக் காட்டும் விதமாக, கடந்த மூன்று அமர்வுகளாகவே தங்கம் விலையானது மீண்டும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது.

குறைந்த விலையில் வாங்க ஆர்வம்

குறைந்த விலையில் வாங்க ஆர்வம்

இது முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல நல்ல வாய்ப்பினை எல்லாம் மிஸ் செய்து விட்டோமே என்ற எண்ணத்தினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் தங்கத்தின் மீதான ஆர்வம் மிக அதிகம். அதற்கேற்ப தங்கம் விலையும் இரண்டரை வருட சரிவில் காணப்பட்டது எனலாம். தொடர்ந்து அந்த சமயத்தில் குறைந்தது தங்க ஆர்வலர்களின் ஆர்வத்தினை மேற்கொண்டு குறைந்த விலையில் வாங்க தூண்டியது எனலாம்.

பணவீக்கம் ஆதரவு

பணவீக்கம் ஆதரவு

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கம் மேற்கொண்டு உலகளவிலான பல்வேறு பங்கு சந்தைகளில் இருந்து முதலீடுகள் வெளியேற வழிவகுத்தன. இது பங்கு சந்தைகள் பலத்த சரிவுக்கு காரணமாக அமைந்தன. எனினும் இந்த சமயத்தில் முதலீடுகள் அனைத்தும் தங்கத்தில் அதிகரித்தது. இது தங்கம் விலைக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

 20% மேலாக சரிவு

20% மேலாக சரிவு

அமெரிக்க டாலரின் மதிப்பு உச்சம், பத்திர சந்தை ஏற்றம் உள்ளிட்ட சில காரணிகளுக்கு மத்தியில், கடந்த மார்ச் மாதம் தொட்ட உச்சத்தில் இருந்து 20% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இது அவுன்ஸுக்கு 1644 என்ற லெவலை எட்டியது. இது அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், டாலர் மதிப்பு உச்சம் தொட்டதே இதற்கு முக்கிய காரணமாகவும் பார்க்கப்பட்டது.

டாலர் மதிப்பு தடுமாற்றம்

டாலர் மதிப்பு தடுமாற்றம்

எனினும் தற்போது டாலரின் மதிப்பு சற்று சரிய ஆரம்பித்துள்ள நிலையில், தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இது இன்னும் பணவீக்கம் அதிகரிக்கலாமோ என்ற அச்சத்தின் மத்தியில் ஏற்றம் கண்டு வருகின்றது. இந்த போக்கோ தொடரலாமோ என்ற பதற்றமும் இருந்து வருகின்றது. இதற்கிடையில் சர்வதேச நாடுகளில் சில வற்றில் ரெசசன் அச்சம் இருந்து வருகின்றது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 6.80 டாலர்கள் அதிகரித்து, 1675.40 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலையும் கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் தடுமாறினாலும், மீண்டும் ஏற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலையும் தங்கத்தினை போலவே 1.22% அதிகரித்து, 18.948 டாலர்களாக காணப்படுகின்றது. டெக்னிக்கலாக பியரிஷ் என்கல்பிங் பேட்டர்ன் பார்ம் ஆகியுள்ளது. இது மேற்கொண்டு வெள்ளி விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையை, அதிகபட்ச விலையை வெள்ளி விலை உடைக்கவில்லை. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 156 ரூபாய் அதிகரித்து, 50,150 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 475 ரூபாய் அதிகரித்து, 56,645 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று தடுமாற்றத்தில் உள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து, 4697 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 136 ரூபாய் அதிகரித்து, 37,576 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்து காணப்படுகின்றது. இது கிராமுக்கு 19 ரூபாய் அதிகரித்து, 5124 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 152 ரூபாய் அதிகரித்து, 40,992 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 190 ரூபாய் அதிகரித்து, 51,240 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 61.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 615 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 61,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.46,970

மும்பை - ரூ.46,650

டெல்லி - ரூ.45,800

பெங்களூர் - ரூ.46,700

கோயமுத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.46,970

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+