பெரும் ஏமாற்றம்.. மீண்டும் தங்கம் விலை உயர்வு.. இன்று எவ்வளவு அதிகரிப்பு தெரியுமா?

டெல்லி: இந்தியாவில் விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில் தங்கம் (Gold) விலையானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கம் விலையானது கடந்த வாரத்தில் இரண்டரை வருட சரிவில் இருந்து, மீண்டும் சற்று ஏற்றம் கண்டு வருகின்றது. இது குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்படுகிறது.

விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்கத்தினை வாங்க தொடங்கியுள்ளனர். இது தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ள நிலையில், இனி தங்கம் விலை எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்து வருகின்றது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து டாலரின் மதிப்பானது வலுவடைந்து காணப்பட்ட நிலையில், தங்கம் விலையானது சில வாரங்களாகவே அழுத்தத்தில் காணப்பட்டது. ஆனால் டாலரின் மதிப்பானது சற்று வலிவிழுந்துள்ள நிலையில், மீண்டும் தங்கம் விலையானது ஏற்றம் காணத் தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தான் தங்கம் விலையானது தற்போது 1673 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது.

முக்கிய காரணிகள்

முக்கிய காரணிகள்

தற்போது சர்வதேச அளவில் நிலவி வரும் காரணிகளுக்கு மத்தியில் பணவீக்கம், தேவை என பல காரணிகளும் கவனிக்க வேண்டிய லிஸ்டில் உள்ளன.இது வரவிருக்கும் நாட்களில் தங்கம் விலையில் பிரதிபலிக்கலாம்.

இதனுடன் தற்போது சர்வதேச பங்கு சந்தைகளும் தடுமாற்றத்தில் இருந்து வருகின்றன. ஆக இதுவும் தங்கம் விலையில் எதிரொலிக்கலாம்.

வட்டியில்லா முதலீடு

வட்டியில்லா முதலீடு

வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகள் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அமெரிக்க மத்திய வங்கி உள்பட பல்வேறு நாட்டின் மத்திய வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரித்து வருகின்றன. இது வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீடுகளை குறைக்கலாம். இது தங்கம் விலையில் அழுத்தத்தினை குறைக்கலாம். இந்தியாவினை பொறுத்த வரையில் வரவிருக்கும் விழாக்கால பருவத்தில் தேவை அதிகரிக்கலாம் என்ற நிலையில், இந்தியாவில் தங்கம் விலை குறையாமல் இது தடுக்க வழிவகுக்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 3.60 டாலர்கள் அதிகரித்து, 1631.70 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சரிவில் காணப்படுகின்றது. இது மேற்கொண்டு கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக தங்கம் விலை தற்போது சற்று குறைந்திருந்தாலும், மீடியம் டெர்மில் சற்று குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 2.40% அதிகரித்து, 19.503 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 259 ரூபாய் அதிகரித்து, 50,452 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 1117 ரூபாய் அதிகரித்து, 57,985 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை சற்று அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 15 அதிகரித்து, 4705 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்து, 37,640 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 17 ரூபாய் அதிகரித்து, 5133 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 136 ரூபாய் அதிகரித்து , 41,064 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 170 ரூபாய் அதிகரித்து, 51,330 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை சற்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 50 பைசா அதிகரித்து, 62.50 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 500 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 625 ரூபாய் அதிகரித்து, 62,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,050

மும்பை - ரூ.46,850

டெல்லி - ரூ.47,000

பெங்களூர் - ரூ.46,900

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,050

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+