கிடைச்ச வாய்ப்பை எல்லாம் மிஸ் பண்ணிட்டோமே..தங்கம் விலை மீண்டும் கிடுகிடு உயர்வு.. இன்று எவ்வளவு?

டெல்லி: தங்கம் (Gold) விலையானது சமீபத்திய வாரங்களாகவே தொடர்ந்து சரிவினைக் கண்டு வந்த நிலையில், கடந்த வார இறுதியில் இருந்து தொடர்ந்து மீண்டும் ஏற்றம் காண ஆரம்பித்துள்ளது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமெனில் இரண்டரை வருட சரிவில் இருந்து தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டு வருகின்றது. இது குறைந்த விலையில் வாங்க நல்ல வாய்ப்பாகவும் பார்க்கப்பட்ட நிலையில், தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.

குறிப்பாக இந்தியாவில் விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில் தங்கத்தின் தேவையானது அதிகரிக்கலாம். இது விலையினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே தங்கம் விலையானது மீண்டும் உச்சம் தொட ஆரம்பித்துள்ளது.

தொடர் ஏற்றத்தில் தங்கம்

தொடர் ஏற்றத்தில் தங்கம்

தொடர்ந்து கடந்த சில அமர்வுகளாகவே தங்கம் விலையானது ஏற்றம் கண்டு வரும் நிலையில், இது 1700 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. இது இன்று தொடக்கத்திலும் 1700 டாலர்களுக்கு மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது மீண்டும் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

உற்பத்தி குறித்தான தரவு

உற்பத்தி குறித்தான தரவு

அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவானது எதிர்பார்த்ததை விட சற்றே சந்தைக்கு எதிரான குறைந்துள்ளது. இதனால் அமெரிக்க பத்திர சந்தையானது மீண்டும் சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. இது தங்கம் விலை ஏற்றம் காண வழிவகுத்துள்ளது.

அமெரிக்காவின் உற்பத்தி தரவானது கடந்த செப்டம்பர் மாதத்தில் இரண்டரை வருடத்தில் இல்லாத அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது.

டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்க டாலரின் மதிப்பும் தொடர்ந்து பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றது. ஒரு வேளை இது பெரியளவில் ஏற்றத் தாழ்வுகள் இருந்தால் அது தங்கம் விலையில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம். அமெரிக்காவின் உற்பத்தி குறித்தான தரவானது பாதுகாப்பு புகலிடமான தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம்.

வேலை வாய்ப்பு தரவு

வேலை வாய்ப்பு தரவு

அமெரிக்காவின் வேலை வாய்ப்பு குறித்தான தரவானது மீண்டும் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சந்தைக்கு எதிராக வரும் பட்சத்தில் இது பத்திர சந்தை, டாலரின் மதிப்பில் தாக்கத்தினை ஏற்படுத்த கூடும். இது முதலீட்டாளர்கள் மத்தியில் மிக கவனமாக கவனிக்கப்பட்டு வருகின்றது.

தேவை

தேவை

 

இந்தியாவில் விழாக்கால பருவம் தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தின் தேவையானது தொடர்ந்து அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் தங்கம் விலை பெரியளவில் குறையாமல் தடுக்க வழிவகுக்கலாம்.

காமெக்ஸ் தங்கம் விலை?

காமெக்ஸ் தங்கம் விலை?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அவுன்ஸூக்கு 8.25 டாலர்கள் அதிகரித்து, 1710.25 டாலராக காணப்படுகின்றது. தங்கம் விலை கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று தொடக்க விலை சற்று கீழாக காணப்படுகின்றது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலை, அதிகபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலை மீடியம் டெர்மில் அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

காமெக்ஸ் வெள்ளி விலை?

காமெக்ஸ் வெள்ளி விலை?

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை 1.62% அதிகரித்து, 20.920 டாலராக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த அமர்வின் முடிவு விலையினை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச விலையை உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்தே காணப்படுகிறது. தற்போது 10 கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து, 51,200 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை அதிகரித்துள்ள நிலையில், இந்திய சந்தையில் தற்போது கிலோவுக்கு 454 ரூபாய் அதிகரித்து, 61,371 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையினை காட்டிலும், இன்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் அதிகபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக வெள்ளி விலை மீடியம் டெர்மில் சற்று அதிகரிக்கலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அதிகரித்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலை அதிகரித்து காணப்படுகிறது. சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலையானது, கிராமுக்கு 70 அதிகரித்து, 4775 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 560 ரூபாய் அதிகரித்து, 38,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

இதே தூய தங்கத்தின் விலையும் இன்று அதிகரித்தே காணப்படுகின்றது. இது கிராமுக்கு 77 ரூபாய் அதிகரித்து, 5210 ரூபாயாகவும், இதே சவரனுக்கு, 616 ரூபாய் அதிகரித்து, 41,680 ரூபாயாகவும், 10 கிராமுக்கு 770 ரூபாய் அதிகரித்து, 52,100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி விலை நிலவரம்

ஆபரண வெள்ளி விலை அதிகரித்தே காணப்படுகின்றது. இது தற்போது கிராமுக்கு, 4.20 ரூபாய் அதிகரித்து, 66.70 ரூபாயாகவும், இதே 10 கிராமுக்கு 667 ரூபாய் அதிகரியாகவும், இதுவே கிலோவுக்கு 4200 ரூபாய் அதிகரித்து, 66,700 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

முக்கிய நகரங்களில் விலை என்ன?

முக்கிய நகரங்களில் விலை என்ன?

22 கேரட் தங்கம் விலை (10 கிராம்)

சென்னையில் இன்று - ரூ.47,750

மும்பை - ரூ.47,350

டெல்லி - ரூ.47,500

பெங்களூர் - ரூ.47,400

கோயம்புத்தூர், மதுரை என பல முக்கிய நகரங்களிலும் - ரூ.47,750

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+