அட்சய திருதியை நாளில் தங்கம், வெள்ளி வாங்கினால் வீட்டில் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் அட்சய திருதியை நாளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நகை கடைக்கு சென்று தங்கம் அல்லது வெள்ளி வாங்குவதை ஒரு வாடிக்கையாகவே வைத்துள்ளனர். சிலர் கூட்டம் காரணமாக தங்க காயின் அல்லது பார்களை வாங்குவதும் வழக்கமாக கொண்டு உள்ளனர்.
தங்கத்தை நகையாக வாங்கினாலும் சரி, காயினாக வாங்கினாலும் சரி தங்கம் விலை தான் மக்களின் பர்சேசிங் பவரை காட்டுகிறது. இப்படியிருக்கையில் அட்சய திருதியை நாளில் உள்நாட்டில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகமாக இருந்தாலும் சர்வதேச தங்க வர்த்தக சந்தையில் ஏற்பட்டு இருக்கும் மந்தநிலை இன்றைய தங்கம் விலையில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு அட்சய திருதியை பண்டிகை தினத்தில் நாட்டில் தோராயமாக 12 டன் தங்க விற்பனை இருக்கும் என்றும், இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.12,000 கோடியாகும். இதேபோல் சுமார் 400 டன் வெள்ளி விற்பனை செய்யப்படும் என்றும், சந்தையில் இது ரூ.4,000 கோடி மதிப்புடையது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில், இந்த அக்ஷய திருதியை தினத்தில் ரூ.16,000 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்சய திருதியை தினத்தில் இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் குறைந்து 89,750 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 60 ரூபாய் குறைந்து 97910 ரூபாயாக குறைந்துள்ளது.
இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 40 ரூபாய் குறைந்து 71,800 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை கிலோவுக்கு 2000 ரூபாய் குறைந்து 1,09,000 ரூபாயாக உள்ளது. பிளாட்டினம் விலை 10 கிராம் 270 ரூபாய் குறைந்து 26,630 ரூபாயாக உள்ளது.
சர்வதேச சந்தைகளில் வர்த்தக பதற்றங்கள் தணிந்து, முதலீட்டு நம்பிக்கை மேம்பட்டு வருவதால், தங்கத்தின் விலை புதன்கிழமை ஆசிய சந்தை வர்த்தகத்தில் 3,306 டாலர் அளவிற்கு சரிவை சந்தித்தது. இதனால் பொருளாதாரம் மற்றும் வர்த்தக தடுமாற்றத்தின் போது பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் தேவை குறைந்து வருவதே சர்வதேச சந்தையில் இன்றைய விலை சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
இதேவேளையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கார்களுக்கு விதிக்கப்படும் வரிகள் மற்ற வரிகளுடன் சேர்ந்து அதிகரிப்பதை தற்காலிகமாக நிறுத்துவது அல்லது குறைவான வரி விதிப்பை விதிக்க ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரி மாற்றம் வெளிநாட்டு உதிரிபாகங்களுக்கு பொருந்தும்.
மேலும் அமெரிக்காவின் 18 முக்கிய வர்த்தக கூட்டணி நாடுகள் உடனான வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது, இதில் சீனாவும் அடக்கம். அமெகிக்கா இந்த வர்த்தக ஒப்பந்த கையெழுத்தில் முதல் நாடாக இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவுக்கும், இந்திய வர்த்தக சந்தைக்கும் பெரும் நன்மையை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றமும் குறைந்துள்ளதும் தங்கம் விலை சரிவுக்கு முக்கியமான காரணமாகும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், மே 8 முதல் மே 10, 2025 வரை உக்ரைனில் மூன்று நாட்கள் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளார், இருப்பினும், இந்த போர் நிறுத்தத்தை உக்ரைன் மீறினால், ரஷ்யா "பதிலடி" கொடுக்கும் என எச்சரித்துள்ளது. இந்த அறிவிப்பு, உலகளாவிய போர்பதற்றங்களைக் குறைத்துள்ளது.
More From GoodReturns

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு.. நகைப்பிரியர்களுக்கு குட்நியூஸ்..!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

இந்தியாவில் இன்று தங்கம், வெள்ளி விலை உயர்ந்ததா? குறைந்ததா?: லைவ் அப்டேட்ஸ்

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களில் விலை எப்படி இருக்கும்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?



Click it and Unblock the Notifications