உலகம் முழுவதும் பாதுகாப்பான உலோகமாகப் பார்க்கப்படும் தங்கம் அடுத்த சில மாதத்தில் பெரிய அளவில் உயரப்போகும் அபாயம் உருவாகியுள்ளது. ரஷ்யா மீது உக்ரைன் அமெரிக்காவின் ஆயுதங்களை வைத்து தாக்குதல் நடத்துவது மட்டும் அல்லாமல் பிரிட்டன் நாட்டு ஆயுதங்களை வைத்தும் இன்று தாக்குதல் நடத்த துவங்கியுள்ளது. இதனால் ரஷ்யா - உக்ரைன் மத்தியிலான போர் 1000 நாட்களுக்கு பின்பு பெரிய அளவில் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதேவேளையில் ஈரான் - இஸ்ரோல் - காசா பகுதியில் இன்னும் தாக்குதல்கள் முழுமையாக முடியவில்லை, மேலும் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு சீனா மீது 60 சதவீதம் வரையில் இறக்குமதி விதிக்கப்படும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியிருக்கும் வேளையில் சர்வதேச அளவில் பெரும் வர்த்தக தடுமாற்றம் நடக்கும் காலகட்டம் இது.

பணவீக்கம் மற்றும் வட்டி விகிதங்கள்: மேலும் அமெரிக்காவில் ஏற்கனவே பணவீக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் பெடரல் ரிசர்வ் வங்கியின் அடுத்த நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் குறைப்பதற்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. கடந்த முறை 0.50 சதவீதம் வரையில் குறைக்கப்பட்ட வட்டி விகிதம் இந்த முறை 0.20 சதவீதம் அல்லது எவ்விதமான மாற்றமும் இல்லாமல் அறிவிக்கலாம்.
பிட்காயின் மற்றும் டாலர்: இவை அனைத்தும் முதலீட்டுச் சந்தையில் பெரும் தடுமாற்றத்தை முதலீட்டு சந்தையில் ஏற்படுத்தும் காரணத்தால் தங்கம் விலை அதிகளவில் உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளது. இதேவேளையில் பிட்காயின் மதிப்பு தொடர்ந்து உயர்வதால் தங்கம் மீதான முதலீடுகள் கணிசமாகக் குறைந்துள்ளது, இல்லையெனில் தங்கம் விலை தற்போது தினமும் உயர்ந்து வரும் 30, 60 ரூபாய் அளவீடு 100, 150 ஆக உயரும்.
அமெரிக்கா கடன்: மேலும் அமெரிக்க டாலர் மதிப்பு தொடர்ந்து வலிமை பெற்று வருகிறது, குறிப்பாக டொனால்ட் டிரம்ப் ஆட்சிக்கு வரும் நாள் நெருங்க நெருங்க டாலர் மதிப்பு உயர்கிறது. இதேவேளையில் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எலான் மஸ்க் - விவேக் ராமசாமி தலைமையிலான DOGE அமைப்பு அமெரிக்க அரசின் 35 டிரில்லியன் டாலர் கடனை குறைக்கும் பணிகளைத் துவங்கியுள்ளது.
டொனால்டு டிர்ம்ப் ஆட்சி: இதனால் அடுத்த 1 வருடத்தில் அமெரிக்காவின் ஆட்சியிலும், பொருளாதாரத்திலும், வர்த்தகத்திலும் பெரும் மாற்றம் பதிவாகும் என கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் டாலர் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து, ரூபாய் மதிப்பு அதலபாதாளத்திற்குச் செல்லும் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தியாவில் தங்கம் விலை: அமெரிக்க பொருளாதாரம், டாலர் மதிப்பு அடிப்படையாக வைத்து தான் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யப்படாத காரணத்தால் 95 சதவீத தேவையை இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்யப்படுகிறது. இந்த தங்கத்திற்கான தொகையை டாலராகவோ அல்லது யூரோ, பவுண்ட் நாணயமாக தான் செலுத்தப்படுகிறது.
இதனால் டாலர் மதிப்பும், அமெரிக்கப் பொருளாதார போக்கும், தங்கம் விலை நிர்ணயம் செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாளைக்கே பெடரல் ரிசர்வ் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை ஒரு சதவீதம் உயர்த்தினால் தங்கம் விலை அடுத்த ஒரு வாரத்தில் 3000 முதல் 6000 ரூபாய் வரையில் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தமிழ்நாடு தங்கம் விலை: இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடந்த 4 நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதனால் தங்கம் வாங்கும் அனைவருக்கும் இந்த விலை உயர்வு பெரும் சுமையாக மாறியுள்ளது. தமிழ்நாட்டில் முன்பெல்லாம் சென்னை, கோவை, சேலம், மதுரை என 4 பகுதிகளில் 4 வெவ்வேறான விலை நிலவரம் தினமும் வெளியாகும்.
நகைக்கடைகள்: ஆனால் தற்போது தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான தங்கம் வர்த்தகர்கள், தங்க நகைக்கடைக்காரர்கள் சென்னை விலைக்கே தங்கம் விலையை விற்பனை செய்ய முடிவு செய்திருக்கும் நிலையில், இதற்கு படிப்படியாக மாறி வருகின்றனர். இந்த மாற்றம் அடுத்த 5 வருடத்தில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை: இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 330 ரூபாய் உயர்ந்து 77,950 ரூபாயாக உள்ளது, இதேபோல் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 300 ரூபாய் 71,450 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை மாற்றமில்லாமல் ஒரு கிலோ 1,01,000 ரூபாயாக உள்ளது, பிளாட்டினம் விலை 10 கிராம் 260 ரூபாய் குறைந்து 26,110 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?



Click it and Unblock the Notifications