தங்கம் விலை டபுள்.. தங்கத்தை வாங்க சரியான சான்ஸ்.. 2027 பொறந்தா ஜாக்பாட் தான்! நிபுணர்கள் சொல்வது என்ன?

தங்கம் விலை ஜனவரி மாதம் ஒரு கிராம் 16,800 ரூபாயில் இருந்து தற்போது 13,400 ரூபாய் வரையில் குறைந்துள்ளது வெறும் டிரண்ட் மாற்றமில்லை, முதலீட்டு சந்தையின் கரெக்ஷன் மட்டுமே. அதாவது ஒவ்வொரு முறையும் தங்கம் விலை தாறுமாறாக உயரும் போது அடுத்த சில மாதத்தில் 30-40 சதவீதம் வரையில் சரிவது இயல்பான ஒரு நடைமுறை.

இது பல சமயங்களில் நடந்துள்ளது, ஆனால் அந்த சரிவுக்கு பின்பு ஒவ்வொரு முறையும் உயர்ந்துள்ளது முதலீட்டாளர்கள் மறக்க கூடாது. இதனால் 2026ஆம் ஆண்டின் 2வது பாதையில் தங்கம் விலை குறையும் போது வாங்கி வைத்தால் 2027ஆம் ஆண்டின் துவக்கத்தில் இதன் விலை உயரும் என கோட்டக் செக்யூரிட்டீஸ் தனது கணிப்பை வெளியிட்டுள்ளது.

தங்கம் விலை டபுள்.. தங்கத்தை வாங்க சரியான சான்ஸ்.. 2027 பொறந்தா ஜாக்பாட்! நிபுணர்கள் சொல்வது என்ன?

தங்கம் விலை

கோட்டாக் செக்யூரிட்டிஸ் வெளியிட்டுள்ள கோல்டு அவுட்லுக் ரிப்போர்ட்டின் படி, 2026ஆம் ஆண்டின் 2ஆம் பாதியில் அதாவது ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 3400 முதல் 4400 டாலர் வரையிலேயே ஸ்பாட் சந்தையில் வர்த்தகமாகும். ஒருவேளையில் தங்கம் விலை தொடர்ந்து குறைந்தால் அதற்கான சப்போர்ட் நிலை 3900, 3600, 3400 டாலர் நிலைகளில் உள்ளது.

ஆனால் விலை உயர்ந்தால் 4400 டாலருக்கு மேல் உயராது. தற்போது ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை 4066 டாலரில் உள்ளது. இத்தகைய சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கம் வாங்க வேண்டும் என்றால் 3900 - 3600 டாலருக்கு மத்தியில் வரும் போது வாங்கலாம் என கோட்டாக் செக்யூரிட்டீஸ் தனது கணிப்பில் தெரிவித்துள்ளது.

வெள்ளி விலை

இதேபோல் வெள்ளியை பார்க்கும் போது, இந்தாண்டு பெரிய மாற்றத்தை எதிர்கொண்ட உலோகமாக உள்ளது. இந்திய சந்தையில் 4 லட்சத்திற்கு மேல் உயர்ந்த வெள்ளி விலை தற்போது 50 சதவீதம் வரையில் குறைந்து முதலீட்டாளர்களை பயமுறுத்தி வருகிறது. இந்த நிலையில் வெள்ளியை எப்போது வாங்க வேண்டும் என்பதையும் கோட்டாக் செக்யூரிடீஸ் தனது கணிப்புகளை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

2026ஆம் ஆண்டின் 2வது அரையாண்டில் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 60-88 டாலர் வரையில் வர்த்தகமாகும். தங்கத்தை போலவே வெள்ளிக்கு 2 சப்போர்ட் நிலை உள்ளது, 70 டாலர் மற்றும் 64-65 டாலர் அளவீட்டில் உள்ளதாக கணித்துள்ளது.

எப்போது உயரும்

இந்த ஆய்வின் படி, 2027 மற்றும் அதன் பிற்பகுதியில் இருந்து தங்கம் விலை உயர துவங்கும் என அறிவித்துள்ளது. இந்த உயர்வை உருவாக்கப்போவது அமெரிக்க மத்திய வங்கயான பெட்ரல் ரிசர்வின் நாணய கொள்கையல் ஹாக்விஷ் டூ டோவிஷ் நிலை மாறும் போது தங்கம், வெள்ளி விலை உயரும் என கணிக்கப்பட்டு உள்ளது.

ஒவ்வொரு முறையும் தங்கம் பெரிய அளவில் சரிந்த பின்பு அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு Bull Run காலம் இருந்துள்ளதாகவும், இக்காலக்கட்டத்தில் தங்கம் விலை 2 மடங்கு உயர்ந்துள்ளது என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. அப்படி பார்த்தால் தங்கம் விலை தற்போதை 4000-4500 டாலரில் இருந்து 9000 டாலர் வரையில் உயர வாய்ப்புள்ளது. இதேபோல் வெள்ளியும் ஒரு அவுன்ஸுக்கு 150 டாலர் வரையில் உயரும் வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது.

முதலீட்டாளர்களுக்கு ஒரு அட்வைஸ்

தங்கமும், வெள்ளியும் எந்த அளவுக்கு உயர்ந்தாலும் சரி, அனைவரும் தங்களுடைய ரிஸ்க் அளவுகளை ஆய்வு செய்து அதற்கு ஏற்ப முதலீடு செய்யுங்கள். மேலும் இரு உலோகத்திற்கும் நீண்ட கால அடிப்படையில் உயர்வதற்கான வாய்ப்புகள் சிறப்பாக இருப்பதை ஆனந்த் ஸ்ரீனிவாசன் முதல் அனைத்து முதலீட்டு நிபுணர்களும் தொடர்ந்து உறுதி செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+