2024 ஆம் ஆண்டு தொடங்கி ஆறு மாதங்கள் முடிவடைந்துள்ளன. நடப்பாண்டில் சர்வதேச தங்கத்தின் விலை ஆனது கிட்டத்தட்ட 12 சதவிகிதம் என உயர்ந்துள்ளது ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மற்ற முதலீடுகளை எல்லாம் ஒப்பிடும்போது தங்கத்தில் செய்த முதலீடு கணிசமான லாபம் தந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து தற்போது வரை அமெரிக்க பங்குகளின் மதிப்பு சராசரியாக 15 சதவீதம் அதிகரித்துள்ளது அதற்கு அடுத்ததாக தங்கம் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. உலக தங்க கவுன்சிலானது அமெரிக்க பங்கு சந்தையுடன் தங்கத்தின் மதிப்பை ஒப்பீடு செய்து இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. தங்கத்தின் மதிப்பு 2024ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் தற்போது வரை 12.74 சதவிகிதம் என உயர்ந்துள்ளது.

இந்தியாவிலேயே கூட ஒரு கிராம் தங்கத்தின் விலை ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும் போது தற்போது 30% வரை உயர்ந்துள்ளது. இந்தியாவில் 2024 ஆம் ஆண்டின் முதல் நாளான ஜனவரி 1ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை 5 ஆயிரத்து 910 ரூபாயாக இருந்தது.
6 மாதங்கள் முடிந்து ஜூலை 4ஆம் தேதி ஒரு கிராம் தங்கத்தின் விலை என்பது 7,670 ரூபாய் என உயர்ந்துள்ளது . அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை சுமார் 30 % என உயர்ந்திருப்பதை காண முடிகிறது.
எனவே மற்ற முதலீடுகளுடன் ஒப்பிடுகையில் தங்கத்தின் மதிப்பு வேகமாக வளர்ந்துள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய வங்கிகள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி வைப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்கின்றனர். அதுமட்டுமின்றி இந்தியாவில் நுகர்வோர் தேவை என்பதும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.
சர்வதேச அளவில் நிலவக்கூடிய போர் பதற்றங்கள் காரணமாக பாதுகாப்பான முதலீடு எனக்கு அருதி பெரும்பாலானவர்கள் தங்கத்தை நோக்கி செல்கின்றனர். இதுவே நடப்பாண்டில் தங்கத்தின் விலை இந்த அளவு உயர காரணம் என தெரியவந்துள்ளது.
குறிப்பாக சீனாவில் தங்கத்தை வாங்கி குவிப்பவர்களின் என்ணிக்கை அதிகரிக்க வண்ணம் உள்ளது. இதனிடையே தங்கத்தின் விலை ஏற்றம் நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு நிபுணர்கள் உலக போக்கை பொறுத்து இது மாறும் என்கின்றனர்.
உலகப் பொருளாதார வளர்ச்சிக்கான குறியீடுகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கின்றன. சில நாடுகளில் இன்னமும் பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே வட்டி விகித குறைப்புகள் தொடர்பான அறிவிப்புகளை உலக நாடுகளின் மத்திய வங்கிகள் வெளியிடும் பட்சத்தில் தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது என சொல்லப்படுகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை உயர்வால் மதுரை மக்கள் சோகம். ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications