ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வந்த தங்கம் விலை கடந்த 4 நாட்களாக தண்ணீரில் போட்ட கற்களை போல் மளமளவென சரிந்து வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் மக்கள் எப்போது தங்கம் வாங்கலாம்..? இப்போது தங்கம் வாங்கினால் எவ்வளவு உயரும்? என பல கேள்விகளுக்கு மத்தியில் குழம்பி வருகின்றனர். இந்த நிலையில் தான் முக்கியமான சந்தை ஆய்வுகள் வெளியாகியுள்ளது.
தங்கத்தின் விலை அடுத்த ஆண்டு அதாவது 2026க்குள் ஒரு அவுன்ஸுக்கு 4,000 டாலராக உயரும் என பேங்க் ஆஃப் அமெரிக்கா (BofA) கணித்துள்ளது, இது தற்போதைய 3,330 டாலர் அளவை ஒப்பிடுகையில் சுமார் 20% உயர்வாகும். தங்கம் விலை 2025nd 40% வரையில் உயர்ந்துள்ளது, இது கடந்த 2 ஆண்டுகளில் பதிவான 20 சதவீத உயர்வை காட்டிலும் அதிகமாகும். மேலும் கடந்த 10 ஆண்டுகளில் 180% லாபத்தை அளித்துள்ளது தங்கம்.

பொதுவாக போரின் காரணமாக தான் தங்கம் விலை உயரும், தற்போது இஸ்ரேல் - ஈரான் போர் முடிந்த காரணத்தால் தான் தங்கம் விலை கடந்த 4 நாட்களாக குறைந்து வருகிறது. இப்படியிருக்கையில் தங்கம் விலை எப்படி அடுத்த வருடத்தில் 4000 டாலர் வரையில் உயரும்..?
அமெரிக்காவில் அதிகரிக்கும் நிதி பற்றாக்குறை மற்றும் மத்திய வங்கிகளின் தங்க கொள்முதல், இந்த உயர்வுக்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை மற்றும் வர்த்தக மோதல்களும் தங்கத்தின் தேவையை அதிகரிக்கின்றன என பேங்க் ஆஃப் அமெரிக்கா கணித்துள்ளது.
தங்கம் விலை உயர்வுக்கான முக்கிய காரணங்கள்
பேங்க் ஆஃப் அமெரிக்கா தனது ஆய்வில், தங்க விலை உயர்வுக்கு அமெரிக்காவின் 'பிக் அண்ட் பியூட்டிஃபுல்' மசோதாவை முக்கிய காரணமாக குறிப்பிடுகிறது. இந்த திட்டம், அமெரிக்காவின் நிதி பற்றாக்குறையை எதிர்காலத்தில் கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2025-ல் அமெரிக்க டாலர் 10% மதிப்பு இழந்த நிலையில், தங்கம் யூரோவை முந்தி, உலகின் இரண்டாவது பெரிய அந்நிய செலாவணி இருப்பு சொத்தாக மாறியுள்ளது. இதேவேளையில் வோர்டு கோல்டு கவுன்சில் கணக்கெடுப்பின்படி, புவிசார் அரசியல் நிச்சயமின்மை மற்றும் வர்த்தக மோதல்கள், வளரும் பொருளாதாரங்களில் மத்திய வங்கிகளை தங்க கொள்முதலை அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளது.
போர் அச்சம்: கடந்த மூன்று ஆண்டுகளில், ரஷ்யா-உக்ரைன் மற்றும் இஸ்ரேல்-ஈரான் போர் உலகளாவிய பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த மோதல்கள், தங்கத்தின் டிமாண்ட்-ஐ அதிகரித்தது. ஆனால், பேங்க் ஆஃப் அமெரிக்கா, இந்த மோதல்கள் நீண்டகால விலை உயர்வுக்கு முக்கிய காரணமல்ல என்று கூறுகிறது. மாறாக, அமெரிக்க பொருளாதார நிலைமைகள் மற்றும் உலகளாவிய மத்திய வங்கிகளின் தொடர்ச்சியான தங்க கொள்முதல் தான் தங்கம் விலை உயர்வை தூண்டும் முக்கிய காரணிகளாக தெரிவித்துள்ளது.
தங்கத்தின் விலை உயர்வு, இந்திய முதலீட்டாளர்களுக்கு முக்கியமானது, ஏனெனில் தங்க நகைகள் மற்றும் முதலீட்டு சொத்தாக பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இதனால் தங்கம் விலையில் ஏற்படும் சிறிய மாற்றமும் அதிகப்படியான மக்களை பாதிக்கும்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 850 ரூபாய் குறைந்து 89,850 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 930 ரூபாய் குறைந்து 98,020 ரூபாயாக உயர்ந்துள்ளது. தங்கம் விலை கடந்த 7 நாளில் கிராமுக்கு 300 ரூபாய் குறைந்து ஒரு மாத சரிவை எட்டியுள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் விலை மதுரை: இன்று அதிரடி உயர்வு! நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்த சர்வதேச காரணங்கள்..!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!



Click it and Unblock the Notifications