பாயத் தயாராகிறதா தங்கம் விலை? பவுன் விலை சரிவைக் குறித்து Standard Chartered சொன்னது என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தங்கம் விலை, மீண்டும் ஏற்றம் காண, தன்னை தயார்படுத்திக் கொள்வது போலத் தெரிகிறது.

ஆகஸ்ட் 2020 உச்சத்தில் இருந்து, செப்டம்பர் மாதத்தில், கடந்த வாரத்தில் ஒரு பெரிய விலை வீழ்ச்சியைக் கண்டது தங்கம். தற்போது தங்கம் விலை யூடேர்ன் எடுக்கத் தொடங்கி இருக்கிறது.

சென்னை ஆபரணத் தங்கம் விலை என்ன? எம் சி எக்ஸ் தங்கம் விலை என்ன? சர்வதேச தங்கம் விலை என்ன? தங்கம் விலை பாயத் தயாராகிறதா? ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் & க்ரெடிட் சூசி தங்கம் விலை குறித்து சொன்னது என்ன? வாருங்கள் பார்ப்போம்.

24 கேரட் 10 கிராம் சென்னை ஆபரணத் தங்கம் விலை

24 கேரட் 10 கிராம் சென்னை ஆபரணத் தங்கம் விலை

01 செப்டம்பர் 2020 அன்று 24 கேரட் 10 கிராம் சென்னை ஆபரணத் தங்கம் விலை 54,200 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 24 செப் 2020 அன்று 51,870 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கோயம்பேடு கொண்ட சென்னையில், 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்று 52,040 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக தங்கம் விலை மெல்ல ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. ஆனால் செப்டம்பர் உச்சத்தை இதுவரை கடக்கவில்லை.

22 கேரட் 10 கி சென்னை ஆபரணத் தங்கம் விலை

22 கேரட் 10 கி சென்னை ஆபரணத் தங்கம் விலை

அதே போல, சென்னையில் 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை, கடந்த 01 செப் 2020 அன்று 49,720 ரூபாய்க்கு விற்பனை ஆனது. 24 செப் 2020 அன்று இதே 22 கேரட் 10 கிராம் தங்கம் விலை 47,550 ரூபாய்க்கு விற்பனை ஆனது. நேற்று (28 செப் 2020) 47,700 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சரிவில் இருந்து ஏற்றம் காணத் தொடங்கி இருக்கிறது. ஆனால் 01 செப் 2020 விலையைத் தொடவில்லை.

MCX Gold price 05 அக்டோபர் 2020 ஃப்யூச்சர் காண்டிராக்ட்

MCX Gold price 05 அக்டோபர் 2020 ஃப்யூச்சர் காண்டிராக்ட்

இந்தியாவின் மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சான எம் சி எக்ஸ் சந்தையில், அக்டோபர் 2020 மாதத்துக்கான 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 16 செப் 2020 அன்று 51,824 ரூபாய்க்கு வர்த்தகமானது. 23 செப் 2020 அன்று 49,508 ரூபாய்க்கு விற்பனை ஆனது. இன்று 50,250 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

MCX Silver price - 04 டிசம்பர் 2020 ஃப்யூச்சர் காண்டிராக்ட்

MCX Silver price - 04 டிசம்பர் 2020 ஃப்யூச்சர் காண்டிராக்ட்

எம் சி எக்ஸ் சந்தையில் வர்த்தகமாகும், டிசம்பர் மாதத்துக்கன 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சர் விலை, கடந்த 01 செப் 2020 அன்று 70,890 ரூபாய்க்கு வர்த்தகமானது. 23 செப் 2020 அன்று 58,488 ரூபாய்க்கு வர்த்தகமானது. இன்று 60,350 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

இண்டர்நேஷனல் தங்கம் விலை XAU USD

இண்டர்நேஷனல் தங்கம் விலை XAU USD

ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை, 01 செப் 2020 அன்று 1,970 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. 25 செப் 2020 அன்று இதே ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,861 டாலருக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று 1,881 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

தங்கம் விலை பாயத் தயாராகிறதா?

தங்கம் விலை பாயத் தயாராகிறதா?

சென்னை ஆபரணத் தங்கம் விலை தொடங்கி, எம் சி எக்ஸ் தங்கம் விலை, சர்வதேச தங்கம் விலை என எல்லாமே, செப்டம்பர் விலை வீழ்ச்சியில் இருந்து மெல்ல அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. ஆனால் எந்த தங்கமும், செப்டம்பர் 2020 உச்ச விலையை இதுவரைக் கடக்கவில்லை என்பதும் இங்கு கவனிக்கத் தக்கது. எனவே தங்கம் விலை செப்டம்பர் உச்சத்தைக் கடக்கும் போது, உறுதியான ஏற்றத்தை காணும் என எதிர்பார்க்கலாம்.

Standard Chartered சொன்னது நினைவிருக்கா?

Standard Chartered சொன்னது நினைவிருக்கா?

இந்த வாரத்தில் தங்கம் விலை 1,840 டாலரை சப்போர்ட் எடுத்து வர்த்தகமாக வேண்டும். அப்படி இல்லை என்றால் 1,800 டாலர் வரை விலை சரியலாம் எனச் சொல்லி இருந்தது. இந்த விலை சரிவு 1,760 டாலர் வரை போகலாம் எனவும் கணித்து இருந்தது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட். இந்த வாரத்தின் முதல் இரண்டு வர்த்தக நாட்களிலும் தங்கம் விலை 1,840 டாலரை வலுவாக சப்போர்ட் எடுத்து வர்த்தகமாகி வருகிறது. இதே போல 1,840 டாலருக்கு மேலேயே தங்கம் விலை வர்த்தகமானால், விலை ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Credit Suisse கணிப்பு

Credit Suisse கணிப்பு

குறுகிய காலத்தில், தங்கம் விலையில் இறக்கம் தொடர்ந்தால், 1,726 டாலர் வரைத் தொடலாம் எனக் கணித்து இருக்கிறது க்ரெடிட் சூசி. ஆனால் தங்கத்தின் விலை சரிவு, கடந்த 25 செப் 2020 உடன் நின்றுவிட்டது. அடுத்த இரண்டு வர்த்தக நாட்களிலும் தங்கம் விலை ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. எனவே ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். தங்கம் விலையை நீண்ட காலத்துக்கு பார்க்கும் போது 2,300 டாலர் வரைத் தொடலாம் எனவும் க்ரெடிட் சூசி கணித்து இருப்பது, இங்கு குறிப்பிடத்தக்கது.

பட்டையைக் கிளப்பிய பங்குச் சந்தைகள்

பட்டையைக் கிளப்பிய பங்குச் சந்தைகள்

ஐரோப்பிய பங்குச் சந்தைகள், இன்று (29 செப் 2020) தடுமாற்றத்தில் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. அதே போல டாலர் இண்டெக்ஸ் 94.25 புள்ளிகளில் விடாபிடியாக நிற்கிறதே ஒழிய புதிய ஏற்றம் காணவில்லை. தங்கத்தில் முதலீடுகள் லேசாக அதிகரித்து இருக்கிறது என SPDR Gold Trust-ன் தரவுகள் சொல்கின்றன. எனவே தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதையே இது காட்டுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Gold price preparing itself to surge? What standard chartered said about gold price?

Gold Price: Is Gold price preparing itself to surge? What standard chartered said about gold price? Gold price prediction by standard chartered and Credit Suisse.
Story first published: Tuesday, September 29, 2020, 13:20 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X