தங்கம் தற்போது அனைவருக்கும் முக்கியமான முதலீடாக மாறி வரும் வேளையில், தங்கம் விலையின் போக்கை காண்காணிப்பது தினசரி வேலையாக மாறிவிட்டது. இந்த நிலையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயம் செய்வது சர்வதேச சந்தைக்கும், டாலர் மதிப்புக்கும் முக்கியமான இடம் உண்டு. தற்போது தங்கம் விலை முக்கியமான டெஸ்டிங் காலக்கட்டத்தில் உள்ளது என்பதை மக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும், இந்த டெஸ்டிங் விலையை கடந்துவிட்டால் தங்கம் விலை உயருமா..? குறையுமான என்பது முழுமையாக தெரியும்.
சர்வதேச சந்தையில் தங்க விலை செவ்வாய்க்கிழமை ஆசிய வர்த்தகத்தில் 5,200 டாலருக்கு கீழே சென்று சோதனை நிலைக்கு சென்றது. கடந்த நான்கு நாட்களாக தங்கம் விலை தொடர் வஉயர்ந்து ஒரு மாத உச்சமான 5250 டாலரை தொட்டது. இது முதலீட்டு சந்தையில் புதிய நம்பிக்கையை கொடுத்தது.

ஆனால் இந்த விலை உயர்வுக்கு பின்பு தங்கம் முதலீட்டாளர்கள் மத்தியில் சிறு இடைவெளி உருவாகி லாபம் பார்க்க துவங்கியுள்ளனர். இதற்கிடையில் சீனா மற்றும் ஜப்பான் சந்தைகள் நீண்ட விடுமுறைக்கு பின்பு மீண்டும் திறக்கப்பட்டதால் பணப்புழக்கம் அதிகரித்து, அமெரிக்க டாலர் சற்று வலுபெற்றுள்ளது.
ஆனால், டிரம்ப் அரசின் வரி முடிவுகளால் ஏற்பட்ட குழப்பம் மற்றும் ஈரான்-அமெரிக்கா பதற்றம் தங்கத்தின் பாதுகாப்பு தேவையை தொடர்ந்து உயர்த்துகின்றன. இதனால் தங்கம் விலை சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ்-க்கு 5200 டாலர் அளவீட்டை தொடர்ந்து தக்க வைக்குமா என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
தங்க விலை திருத்தத்தின் பின்னணி
கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், இன்று சிறு சரிவை சந்தித்துள்ளது. அமெரிக்க டாலரின் சிறு மீட்சி இதற்கு ஒரு காரணம். வார இறுதியில் டிரம்ப் அரசின் வரி முடிவுகளால் ஏற்பட்ட குழப்பம், வால்ஸ்ட்ரீட் பங்கு சந்தையில் விற்பனையை தூண்டியது. இதனால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்தது.
மேலும், புதன்கிழமை AI துறையில் முன்னோடியாக இருக்கும் Nvidia நிறுவனம் தனது காலாண்டு அறிக்கை வெளியிட உள்ளதால், முதலீட்டாளர்கள் மத்தியில் உருவான எதிர்பார்ப்பும் சந்தையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. தங்கம் தற்போது மாதாந்திர உச்சத்திலிருந்து பின்வாங்கி முக்கிய ஆதரவு நிலையான 5,142 டாலர் அளவை சோதனை செய்து வருகிறது.
அமெரிக்க வரி முடிவுகளின் தொடர் குழப்பம்
அமெரிக்க உச்சநீதிமன்றம் டிரம்பின் ரெசிப்ரோக்கல் வரி திட்டத்தை சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்த பிறகு, சனிக்கிழமை புதிய 15% வரியை உடனடியாக அமல்படுத்தியுள்ளார்.
வால்ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) இன்று காலை வெளியிட்ட செய்தியில், டிரம்ப் நிர்வாகம் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக ஆறு தொழில்துறைகளுக்கு புதிய வரிகளை விதிக்க பரிசீலித்து வருகிறது என தெரிவித்துள்ளது. இந்த தொடர் அறிவிப்புகள் சர்வதேச வர்த்தகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, தங்கம் போன்ற பாதுகாப்பு சொத்துகளின் தேவையை அதிகரித்துள்ளன.
ஈரான் பதற்றம்
அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றம் தங்க விலைக்கு கூடுதல் ஆதரவாக உள்ளது. ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஈரான் உயர் செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பை குறைக்க முன்வருவதாக தெரிவித்துள்ளது. ஆனால் பதற்றமும் அதிகரித்தால், தங்கம் மேலும் உயரும் வாய்ப்பு உள்ளது.
ஃபெட் வட்டி எதிர்பார்ப்பு
இதனுடன், இந்த ஆண்டுக்கு குறைந்தபட்சம் இரண்டு முறை அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பும் தங்கத்தின் விலையை வலுப்படுத்துகிறது. இதனால் தங்கம் தொடர்ந்து சாதகமான முதலீடாகவே திகழ்ந்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விற்கிற விலைக்கு 20 புது ஷோரூம் திறக்கும் மலபார் கோல்ட்.. தமிழ்நாட்டில் மொத்தம் 2..!!

தங்கம் விலை குறைந்ததால் உடனே முதலீடு செய்ய வேண்டாம்.. முதல்ல இதை படிங்க.. உண்மை தெரியும்..!!

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

ஈரான் போருக்கு மத்தியில் தங்கத்தை மறந்த இந்தியர்கள்..!! 15 நாட்கள்ல எல்லாமே மாறிடுச்சு..!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

வீட்டில் 100 கிராமுக்கு மேல் தங்கமா? உஷார்! வருமான வரித்துறை நோட்டீஸ் வரலாம்!



Click it and Unblock the Notifications