இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்புக்கு மத்தியிலான தாக்குதலில் மத்திய கிழக்கு நாடுகளின் பங்குச்சந்தை வர்த்தகம் பாதிக்கப்படுவது மட்டும் அல்லாமல் கச்சா எண்ணெய் விலையும் உயர்ந்து வருகிறது. இதனால் நேரடியாகவும், மறைமுகமாகவும் சர்வதேச முதலீடு சந்தைகள் அதிகப்படியான ஏற்ற இறக்கங்களை எதிர்கொண்டு வருகிறது.
இதனால் இஸ்ரேல் - ஹமாஸ் தாக்குதல் துவங்கிய காலத்தில் இருந்து பெரும்பாலான முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டை காப்பாற்றும் நோக்கில் தங்கம் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர். குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் கச்சா எண்ணெய் மீதும், தங்கம் மீது முதலீடு செய்துள்ளனர். இந்த முதலீடுகள் மீது பங்குசந்தையில் ஏற்படும் தாக்கத்தை சரி செய்ய முடியும் என்பது முதலீட்டாளர்களின் திட்டம்.

இதன் எதிரொலியாக சர்வதேச சந்தையில் கடந்த 4 நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் மூலம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1832 டாலரில் இருந்து இன்றைய வர்த்தகத்தில் 1867 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.
இதேபோல் எம்சிஎக்ஸ் சந்தையிலும் டிசம்பர் மாதம் முடியும் ஆர்டர்களின் விலை தொடர்ந்து 4 நாட்களாக உயர்ந்து வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.33 சதவீதம் உயர்ந்து 57,820 ரூபாயாக உள்ளது. இதேபோல் ஒரு கிலோ வெள்ளி விலை 1.07 சதவீதம் உயர்ந்து 69,657.00 ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரீடைல் சந்தையில் தங்கம் விலை பல காரணிகள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது, டாலர் மதிப்பு, சர்வதேச சந்தை விலை, டிமாண்ட் அளவு, நகை கடைக்காரர்கள் கொடுக்கும் தள்ளுபடி போன்ற பல காரணிகள் உள்ளது. இதற்கு பின்பு நகை கடைகளில் வாங்கும் நகைகளுக்கு ஜிஎஸ்டி வரி உள்ளது.
இந்த நிலையில் சென்னை ரீடைல் சந்தையில் இன்றைய வர்த்தகத்தில் இன்று 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 80 ரூபாய் குறைந்து 53,720 ரூபாயாக உள்ளது, இதுவே 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 90 ரூபாய் குறைந்து 58,600 ரூபாயாக குறைந்துள்ளது. இதேபோல் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரனுக்கு 64 ரூபாய் குறைந்து 42,976 ரூபாயாக உள்ளது.
மேலும் உள்நாட்டு ரீடைல் சந்தையில் 1 கிலோ வெள்ளி விலை 500 ரூபாய் குறைந்து 75,000 ரூபாயாக உள்ளது. மேலும் பிளாட்டினம் விலை 10 கிராம் 180 ரூபாய் அதிகரித்து 23,580 ரூபாயாக உள்ளது. இதை தொடர்ந்து கோவை, மதுரை, திருச்சி உட்பட நாட்டின் முக்கியமான நகரங்களில் இன்றைய தங்கம் விலை நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 42976 ரூபாய், மும்பை - 42920 ரூபாய், டெல்லி - 43040 ரூபாய், கொல்கத்தா - 42920 ரூபாய், பெங்களூர் - 42920 ரூபாய், ஹைதராபாத் - 42920 ரூபாய், கேரளா - 42920 ரூபாய், புனே - 42920 ரூபாய், பரோடா - 42960 ரூபாய், அகமதாபாத் - 42960 ரூபாய், ஜெய்ப்பூர் - 43040 ரூபாய், லக்னோ - 43040 ரூபாய், கோயம்புத்தூர் - 42976 ரூபாய், மதுரை - 42976 ரூபாய்.


Click it and Unblock the Notifications