தங்கம் விலை மீண்டும் உயரும்.. அடித்து சொல்லும் Ray Dalio..!!

தங்கம் விலை சர்வதேச சந்தையில் 4,379.13 டாலரை எட்டிய பின்பு பெரும் தடுமாற்றத்துடன் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் 0.2 சதவீதம் சரிந்து 4,118.68 டாலராக இருக்கிறது. அமெரிக்க கோல்டு பியூச்சர்ஸ் விலையும் 0.3 சதவீதம் குறைந்து 4,133.40 டாலராக உள்ளது. இந்த வாரம் மட்டும் தங்க விலை சுமார் 3 சதவீதம் சரிந்து, மே மாதத்திற்கு பிறகு மிகப்பெரிய வாராந்திர வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் மக்கள் தங்கத்தில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா அல்லது வாங்குவதை நிறுத்திவிடலாமா என்ற கேள்வி எழுகிறது. இன்று ரீடைல் சந்தையில் தங்கம் விலை உயர்ந்திருந்தாலும், ஸ்பாட் சந்தையிலும், ரீடைல் சந்தையிலும் தங்கம் விலை சிறிய அளவில் உயர்ந்திருந்தாலும் பியூச்சர்ஸ் சந்தையில் சரிவை சந்தித்துள்ளது.

இந்த தடுமாற்றத்திற்கு அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்பட்ட உயர்வு மற்றும் முதலீட்டாளர்களின் அச்சம் இதற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. இருப்பினும், பிரபல முதலீட்டாளர் ரே டாலியோ, தங்கத்தின் விலை போக்கை குறித்தும், லாப அளவீடுகள் குறித்தும் நம்பிக்கையாக உள்ளதாகக் கூறியுள்ளார்.

தங்கம் விலை மீண்டும் உயரும்.. அடித்து சொல்லும் Ray Dalio..!!

அமெரிக்க டாலரும்.. முதலீட்டாளர் மனநிலையும்..
அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருவது, தங்க விலையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, டாலர் மதிப்பு உயரும்போது தங்க விலை குறையும், ஏனெனில் தங்கம் டாலரில் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

இதேபோல் சர்வதேச முதலீட்டாளர்கள், அமெரிக்க பணவீக்க தரவுகளை எதிர்பார்த்து காத்திரும் வேளையில், ஏற்கனவே செய்த தங்க முதலீட்டில் இருந்து லாபம் பார்க்கும் விதிகமாக தங்கத்தில் இருந்த முதலீட்டை விற்பனை செய்யு மற்ற முதலீடுகளை நோக்கி செல்கின்றனர்.

அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தக பதற்றங்கள் சமீபத்தில் குறைந்திருப்பது, தங்கத்தின் தேவையை குறைத்துள்ளது. இதனால், தங்க விலை இந்த வாரம் 3 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. இதேவேளையில் ரஷ்யா மீது அமெரிக்க விதித்த தடை காரணமாக கச்சா எண்ணெய் உயர்ந்துள்ளது. இதுவும் முதலீடு சந்தையை பாதித்துள்ளது.

ரே டாலியோவின் கருத்து
பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனர் ரே டாலியோ டிவிட்டரில் செய்த பதிவின் படி, தங்கத்தின் நீண்டகால அடிப்படையில் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "வரலாறு மற்றும் லாஜிக் அடிப்படையில் எப்போதெல்லாம் வர்த்தக தடைகள், போர் அச்சம் வருகிறதோ, அப்போதெல்லாம் நாணயங்கள் மற்றும் கடன்களின் தேவையை குறைத்து, தங்கத்தின் மீதான முதலீடுகளையும் மதிப்பையும் ஆதரிக்கின்றன.

வரலாற்றில், போர்களுக்கு முன்பும், போர்களின்போதும், நிதி மற்றும் பொருளாதாரப் பாதிப்புகள் வர்த்தக தடைகள் மூலம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால், தங்கத்தை சேர்த்து வைப்பதும் மற்றும் தங்கத்தின் விலையும் உயர்கிறது, ஏனெனில் இது அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்படாத, உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சொத்து என்பதால் அனைவராலும் நுகரக்கூடிய சொத்தாக உள்ளது" என்று கூறினார்.

அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாடுகள் மற்ற நாடுகள் மீது பொருளாதாரம் மற்றும் வர்த்தக தடைகளை விதிக்கும்போது, அவற்றின் நாணயம் மற்றும் கடன் மீதான மதிப்பு குறைகிறது, இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி திரும்புவதாக டாலியோ விளக்கினார்.

புவிசார் பதற்றங்கள் மற்றும் எண்ணெய் விலை
அமெரிக்காவின் ரஷ்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிரான சமீபத்திய தடைகள், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா விரும்பவில்லை என்று குற்றச்சாட்டி விதிக்கப்பட்டன. இந்த தடைகள், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படுத்தும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலையை கடந்த 3 நாட்களில் உயர்ந்துள்ளது.

எண்ணெய் விலை உயர்வு, பணவீக்க அழுத்தத்தை அதிகரித்து, பொருளாதார நிச்சயமின்மையை உருவாக்கும். இந்த புவிசார் அரசியல் பதற்றங்கள் மத்தியில் முதலீட்டாளர்கள் தங்கத்தை நோக்கி செல்ல வாய்ப்பு அதிகமாக உள்ளது.

இதேவேளையில் அமெரிக்கா - சீனா மத்தியிலான வர்த்தக போர் முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கையும், ரஷ்யா அமெரிக்காவின் முடிவுக்கு எவ்விதமான எதிர்வினையும் ஆற்றாமல் இருக்கும் காரணத்தால் தங்க விலையில் தற்காலிக தேக்கநிலையை உருவாக்கியுள்ளது.

அடுத்து என்ன நடக்கும்..?
அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சுவார்த்தைகளின் முடிவு, தங்க விலையின் எதிர்கால போக்கை பெரிதும் பாதிக்கும். சமீபத்தில் இந்த பதற்றங்கள் குறைந்திருந்தாலும், பேச்சுவார்த்தைகளின் வெற்றி அல்லது தோல்வி தங்கம் விலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும், செப்டம்பர் மாத அமெரிக்க பணவீக்க அறிக்கை, அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் பென்ச்மார்க் வட்டி விகித முடிவை தீர்மாணிக்கும். இது அனைத்தும் தான் முதலீட்டாளர்களின் முடிவுகளை வழிநடத்தும்.

பணவீக்கம் எதிர்பார்த்ததை விட உயர்ந்தால், தங்கத்தின் மதிப்பு மீண்டும் உயரலாம், ஏனெனில் தங்கம் பணவீக்கத்திற்கு எதிரான பாதுகாப்பாக பார்க்கப்படுகிறது. உண்மையான வட்டி விகிதங்கள் குறையும்போது, தங்கத்தின் மதிப்பு பொதுவாக உயரும். இதுவும் முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+