U-Turn அடிக்கும் தங்கம் விலை.. திடீர் உயர்வுக்கு என்ன காரணம்..? இப்போ தங்கம் வாங்கலாமா..?

பங்குச்சந்தையில் லாப அளவீடுகள் குறையும் காலத்தில் தங்கம் முக்கியமான முதலீடாக மாறுகிறது, இப்படி கடந்த 3 மாதம் தொடர்ந்து தடாலடியாக உயர்ந்து வந்த தங்கம் அக்டோபர் 17ஆம் தேதி 24 கேரட் 1 கிராம் தங்கம் 13,309 ரூபாய் அளவீட்டை தொட்டது. இதன் பின்பு தொடர்ந்து குறைந்து வரும் தங்கம் விலை இன்று திடீரென உயர்ந்துள்ளது.

இதனால் பலரும் தங்கத்தை வாங்கலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் கண்களை மூடிக்கொண்டு தங்கத்தை வாங்குவதை காட்டிலும் தங்கம் இன்று எதிர்காக உயர்ந்திருகிறது..? இந்த உயர்வு தொடருமான என்பதை தெரிந்துக்கொண்டு வாங்குவது தான் சரியானதாக இருக்கும்.

U-Turn அடிக்கும் தங்கம் விலை.. திடீர் உயர்வுக்கு என்ன காரணம்..? இப்போ தங்கம் வாங்கலாமா..?
d

எப்படி அக்டோபர் 17ஆம் தேதி 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை 13,309 ரூபாய் அளவீட்டை தொட்டதோ, அக்டோபர் 28ஆம் தேதி 12,082 ரூபாய் என்ற குறைவான அளவீட்டை எட்டியுள்ளது. இந்த நிலையில் தான் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.

தங்கம் விலை திங்கள் அன்று MCX டிசம்பர் மாதம் முடியும் ஃப்யூச்சர்ஸ் ஆர்டர் விலை 1.80 சதவீதத்திற்கு மேல் உயர்ந்து 10 கிராமுக்கு ரூ.1,23,244 அளவை தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி ஃப்யூச்சர்ஸ் ஆர்டர் 2.83 சதவீதம் உயர்ந்து 1 கிலோவுக்கு ரூ.1,51,906 ஆக உயர்ந்தது.

இன்றைய திடீர் உயர்வுக்கு மிக முக்கியமான காரணமாக அமைந்திருப்பது 2 விஷயம், அமெரிக்க நுகர்வோர் உணர்வு தரவு பலவீனமடைந்து மற்றும் அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கை மோசமானதால் முதலீட்டாளர்கள் தங்களது பணத்தை பாதுகாக்க சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் தங்கத்தில் முதலீடு செய்துள்ளனர். இதுவே தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

அமெரிக்க பணிநீக்கம் மற்றும் AI தாக்கம்
அமெரிக்காவில் அக்டோபர் மாதம் டிரம்ப் அரசு ஷட்டவுன் காரணமாக அக்டோபர் 1ஆம் தேதி முதல் அரசு பணியில் இருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வந்தது. இதோடு தனியார் துறையில் வர்த்தக செலவு குறைப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றின் காரணமாக 1.5 லட்சம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இவ்விரு தரவுகள் கடந்த வாரம் வெளியான நிலையில் இது பொருளாதார நிச்சயமின்மையை ஏற்படுத்தியது. இதனால் முதலீட்டாளர்கள் 2 வாரத்திற்கு பின்பு மீண்டும் தங்கம் மீது முதலீடு செய்ய தயாராகியுள்ளனர்.

நுகர்வோர் உணர்வு குறைவு
நவம்பர் மாத தொடக்கத்தில் அமெரிக்க நுகர்வோர் அளவுகள் கடந்த 3.5 ஆண்டுகளில் குறைந்த அளவுக்கு வீழ்ந்ததுள்ளது. அமெரிக்க அரசின் 40 நாள் ஷட்டவுன் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என வெள்ளிக்கிழமை வெளியான தரவுகள் மூலம் கணிக்கப்பட்டது.

ஆனால் ஞாயிற்றுக்கிழமை செனட்டில் செலவின மசோதாவுக்கு முதல்கட்ட வாக்கெடுப்பில் சில சீர்திருத்தங்கள் உடன் 60:40 வாக்குகள் வந்துள்ளது. இதனால் ஷட்டவுன் முடிவுக்கு வரும் என தெரிகிறது.

சர்வதேச ஸ்பாட் சந்தை விலை
ஞாயிற்றுக்கிழமை வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான பின்பு இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 4001.27 டாலரில் இருந்து 4080.65 டாலருக்கு உயர்ந்துள்ளது. இதனால் சர்வதேச முதலீட்டாளர்கள் அமெரிக்க சந்தையில் பாதிப்பு தொடரும் என நம்புவதையே இந்த உயர்வு காட்டுகிறது.

ஃபெட் வட்டி குறைப்பு வாய்ப்பு
மேலும் தற்போதைய வர்த்தக சூழ்நிலையில் அமெரிக்காவின் CME ஃபெட்வாட்ச் கருவியின்படி டிசம்பரில் நடக்கும் பெடரல் ரிசர்வ் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகித குறைப்புக்கு 67 சதவீத வாய்ப்பு உள்ளது என கணிக்கப்படுகிறது. வட்டி விகிதம் குறைக்கப்பட்டால் தங்கம் விலை உயரும்.

அமெரிக்க சந்தை கவனம்:
தங்கம் விலை உயர்வுக்கு அமெரிக்க சந்தை நெருங்கி தொடர்பு உள்ளது, இதற்கு முக்கிய காரணம் அமெரிக்க அரசு பத்திரங்கள், பங்குச்சந்தை, பிட்காயின் என அனைத்திலும் வெளிநாட்டு முதலீடுகள் அதிகமாக உள்ளது. இந்த முதலீடு செய்ய முக்கியமான காரணம் டாலர் மதிப்புக்கு எதிராக தங்கள் நாட்டு நாணய மதிப்பை கட்டுப்படுத்த முதலீடுகள் செய்யப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்க பொருளாதாரம் பாதிப்பு அடையும் போதோ அல்லது அமெரிக்க டாலர் மதிப்பு குறையும் போதோ அல்லது பெடரல் ரிசர்வ் வட்டியை குறைத்தாலோ அமெரிக்க சந்தையில் முதலீடு செய்திருக்கும் வெளிநாடுகளும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் தங்கத்தில் முதலீடு செய்வது வழக்கம். இதனால் தங்கம் விலைக்கும் அமெரிக்க சந்தைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

இப்போ தங்கம் வாங்கலாமா..?
அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தையும், நுகர்வோர் சந்தையும், மோசமாக இருக்கும் காரணத்தால் டிரம்ப் அரசு செலவின மசோதாவை விரைவில் ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் இந்த மாற்றங்களை காண்காணித்து நீண்ட கால அடிப்படையில் தங்கத்திலும், வெள்ளியிலும் முதலீடு செய்யலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+