குறையாத தங்கம் விலை.. அதிர்ச்சி கொடுத்த வெள்ளி.. அடபோங்கப்பா, சலித்துக்கொள்ளும் சாமானிய மக்கள்..!

இந்தியாவின் பெரும் பகுதி மக்கள் மிடில் கிளாஸ் பிரிவில் இருப்பவர்கள் தான், இப்பிரிவு மக்கள் காலம் காலமாக நம்பும் முக்கிய முதலீடு என்றால் இது தங்கம் தான். படிப்பு செலவு முதல் திருமணம், புதிய வீடு, கார் என அனைத்து முக்கியமான விஷயங்களுக்கு முதலீடாக விளங்குவது தங்கமாக சேமித்த பணம் தான். தென்னிய மக்களின் பொருளாதாரம் தொடர்ந்து வலிமையாக இருக்க தங்கம் முக்கிய அங்கமாக இருக்கிறது என்றால் மிகையில்லை.

இப்படிப்பட்ட தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தால் சாமானிய மக்களால் எப்படி முதலீடு செய்து பணத்தை எதிர்காலத்திற்காக சேமிக்க முடியும். இதுவும் குறிப்பாக கடந்த சில வருடங்களாக மக்களின் வருமானம், வேலைவாய்ப்புகள் மந்தமாக இருக்கும் வேளையில் தங்கம் விலை உயர்வது பெரும் சலிப்பை நடுத்தர மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. இதில் முக்கியமான விஷயம் என்ன வென்றால் வெள்ளி விலை இன்று தடாலடியாக உயர்ந்தது தான்.

குறையாத தங்கம் விலை.. அதிர்ச்சி கொடுத்த வெள்ளி.. அடபோங்கப்பா, சலித்துக்கொள்ளும் சாமானிய மக்கள்..!

இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலர் மதிப்பின் சரிவு, அமெரிக்காவில் உருவாகியுள்ள வங்கி நெருக்கடிகள் மத்தியில் அந்நாட்டு மத்திய வங்கி பென்ச்மார்க் வட்டி விகிதம் உயர்ந்த பின்பும் தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வுடனே உள்ளது. பொதுவாக பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தினால் தங்கம் விலை குறையும் ஆனால் இந்த முறை தங்கம் விலை தொடர்ந்து நிலையாக உள்ளது. இதோடு வெள்ளி விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் விவசாயம் அல்லாத வேலைவாய்ப்பு தரவுகள் வெள்ளிக்கிழமை வெளியாகிறது, இதனால் இன்று சர்வதேச வர்த்தக சந்தையில் மந்தமான வர்த்தகம் பதிவாகியுள்ளது. இதேபோல் அமெரிக்காவின் வங்கி நெருக்கடிகள் குறித்த அச்சம் மற்றும் கடன் வரம்பு குறித்த அச்சமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதேவேளையில் அமெரிக்கா போலவே ஐரோப்பிய மத்திய வங்கியும் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்துள்ளது.

குறையாத தங்கம் விலை.. அதிர்ச்சி கொடுத்த வெள்ளி.. அடபோங்கப்பா, சலித்துக்கொள்ளும் சாமானிய மக்கள்..!

சர்வதேச சந்தையில் வியாழக்கிழமை வர்த்தகத்தை போலவே வெள்ளிக்கிழமை வர்த்தகத்திலும் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2050 டாலர் அளவிலேயே உள்ளது. இது அதிர்ச்சி அளித்தாலும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 81.60 ரூபாய்க்கு உயர்ந்துள்ளதால் எம்சிஎக்ஸ் சந்தையில் ஜூன் ஆர்டர் விலை கணிசமாக குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை எம்சிஎக்ஸ் சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் ஜூன் ஆர்டர் விலை 0.02 சதவீதம் சரிந்து 61,480 ரூபாயாகவும், 1 கிலோ வெள்ளியின் ஜூலை ஆர்டர் விலை 0.12 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து வரலாற்று உச்ச அளவிலேயே உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+