வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையில் விற்பனை செய்யப்படுகிறது. சந்தை விடுமுறைக்கு பிறகு தங்கம் விலை ஏறி இருக்கிறதா? அல்லது இறங்கி இருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள நகை பிரியர்கள் ஆர்வமாக இருப்பீர்கள். இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,277 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மதுரை மற்றும் கோவையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
கோவை மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை: கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,566 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 52,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,163 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 57,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைக்கும் இன்றைக்கும் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஏன் நேற்றைய முன் தினமும் எந்தவித மாற்றமும் இல்லாமல் தான் விற்பனை செய்யப்பட்டது. இன்றுடன் சேர்த்து கடந்த 3 நாட்களாக தங்கம் விலை சீராக உள்ளது.
அதாவது ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குப் பிறகு தங்கம் விலை 95 ரூபாய் வரை ஏறி உள்ளது. ஆகஸ்ட் 17-ஆம் தேதி அன்று மட்டும் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 6,565 ரூபாய்க்கும் 24 கேரட் தங்கத்தின் விலை 7,162 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஆகஸ்டு 7-ஆம் தேதி அன்று நகைப் பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்க நகையின் விலை கணிசமாக குறைந்தது. ஆனால் அதன் பிறகு எப்போது தங்கம் விலை அதே போல குறையும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏனெனில் அன்று ஒரு நாள் தங்கம் விலை வெகுவாக குறைந்து காணப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு இன்று வரை 400 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை நேற்றைய விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு கிராம் வெள்ளி இன்று 91 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் ஒரு கிலோ வெள்ளி 91,000 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications