அக்டோபர் 8-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் இன்றும் விற்பனை செய்யப்படுகிறது. இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,100 ரூபாயாகவும், 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,745 ரூபாயாகவும் உள்ளது. கோவை மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோவை, மதுரை, சென்னை போன்ற நகரங்களில் இன்றைய தினம் 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,100 ரூபாயாகவும், 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,745 ரூபாயாகவும் உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் 56,800 ரூபாயை நெருங்கியுள்ளது. ஒரு சவரன் 24 கேரட் தங்கம் 61,960 ரூபாயை எட்டியுள்ளது. சமீப காலமாக தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை நேற்று சற்று குறைந்தது. அதே விலையில் தான் இன்றும் உள்ளது.

திருமணங்கள், பண்டிகைகள், வீட்டு விசேஷங்கள் என பலவற்றுக்கும் தங்க நகைகளை தான் அணிகின்றனர். நம் நாட்டில் கலாச்சாரத் தொடர்பு தங்கம் மற்றும் வெள்ளிக்கு அதிக அளவில் உள்ளது. புரட்டாசி மாதங்களில் திருமணங்கள் எதுவும் பெரிதாக நடைபெறாது. இதன் காரணமாகவும் தங்கம் விலையில் குறைவு ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இதை வைத்து மட்டுமே நாம் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும் என்பதை கூறிவிட முடியாது. தங்கம் விலை பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறக்கூடும் என்பதை முன்பே சில பதிவுகளில் பார்த்திருப்போம்.
நேற்றும் இன்றும் தங்கம் விலை குறைந்திருப்பதாக தோன்றினாலும், இன்னும் விலை குறைய வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஏனெனில் 24 கேரட் தங்கத்தின் விலை 7,800 ரூபாயை நெருங்கியுள்ளது. 2025-ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை கிராமுக்கு 10,000 ரூபாயை நெருங்கும் என்ற நிபுணர்களின் கூற்று பலித்து விடும் சூழல்தான் தற்போது நிலவுகிறது.
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இந்தியாவில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 102 ரூபாயை எட்டியுள்ளது. தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரை போன்ற பகுதிகளில் வெள்ளி விலை கிலோவுக்கு 1,02,000 ரூபாயை எட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications