ஆகஸ்ட் மாதத்தின் 7-ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் கடந்த இரு தினங்களாக எந்தவித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆகஸ்ட் 26-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 6,695 ரூபாய்க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,034 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை நிலவரம் வெவ்வேறு நகரங்களிலும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும். எனவே தங்கம் வாங்க விரும்புவோர் அவரவர் வசிக்கும் நகரங்களைப் பொருத்து விலையை தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பதிவில் கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,695 ஆகவும், அதேபோல் 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,304 ஆகவும் உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 53,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 58,432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.92.90 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 92,900 ஆகவும் உள்ளது. சர்வதேச வெள்ளி விலை நிலவரத்தை பொறுத்தே.. இந்தியாவில் வெள்ளியின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. எனவே இதை பொறுத்து வெள்ளியின் விலை உயரலாம் அல்லது குறையலாம். கடந்த 24-ஆம் தேதி அன்று கிலோவுக்கு 93,000 ரூபாய் வரை சென்ற வெள்ளி விலை இன்று 100 ரூபாய் குறைந்து 92,900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நம் நாட்டில் மட்டும் தங்கத்திற்கு அவ்வளவு ஒரு மதிப்பு. திருமணங்கள், பண்டிகைகள் என அனைத்திற்கும் தங்க நகைகள் வாங்குவதைத் தான் முதன்மை நோக்கமாக மக்கள் கொண்டுள்ளனர். நம் பாரம்பரியத்தோடு வேரூன்றிய உறவு தங்க நகைகளுக்கு இருக்கிறது.
அடுத்த 2030-ஆம் ஆண்டுக்குள் தங்கம் விலை 1 லட்ச ரூபாயை எட்டி விடும் என்று சில நிபுணர்கள் கூறியுள்ளனர். இதனால் மக்கள் மாதாமாதம் தாங்கள் சேர்த்து வைக்கும் தொகையில் ஒரு கிராம் தங்கத்தையாவது வாங்கிவிட வேண்டும் என்று எண்ணுகின்றனர். அதற்கு ஏதுவாக கடந்த 2 நாட்களாக தங்கம் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் சீராக உள்ளது.


Click it and Unblock the Notifications