அக்டோபர் 13-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி, தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நேற்றைய விலையில் தான் விற்பனை ஆகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சந்தைகள் மூடப்பட்டிருக்கும். இதன் காரணமாக நேற்றைய விலையில் இருந்து துளியும் மாறாமல் 7,120 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,120-க்கு விற்பனை ஆகிறது. அதேபோல 24 கேரட் தங்கம் விலை 7,767 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோயம்பத்தூர், சென்னை மற்றும் மதுரையில் இன்று தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது. 1 கிராம் 22 கேரட் 7,120-க்கும், 1 சவரன் 22 கேரட் 56,960 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் 7,767 ரூபாய்க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் 62,136 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்றைய தினம் தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. ஆனால் நேற்று கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்திருந்தது. 2 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை குறையத் தொடங்கியது. இதன் காரணமாக முன்பை போல விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் அதிகரித்துள்ளது. பண்டிகை காலங்கள், சுபமுகூர்த்த தினங்கள் போன்ற காரணங்களாலும் தங்கம் விலையில் ஏற்றம் இருக்கும். அதே போல இந்த மாதம் முழுவதுமாக தங்கம் விலை ஏறும் போக்குதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து தங்கம் விலை குறையவே இல்லை. அக்டோபர் 1-ஆம் தேதி மட்டும் குறைந்து காணப்பட்டது. அதன் பிறகு அக்டோபர் 9, 10 ஆகிய தினங்களில் குறைந்து இருந்தது. ஆனால் மீண்டும் நேற்றைய தினம் வரலாற்று உச்சத்தை எட்டி 7,120 ரூபாயாக அதிகரித்தது, அதேபோல 24 கேரட் தங்கமும் 7,767 ரூபாயாக அதிகரித்தது.
அக்டோபர் 31-ஆம் தேதி அன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் தங்கத்திற்கு தனி மதிப்பு உண்டு. பிறவற்றில் முதலீடு செய்வதை விட மக்கள் அதிக அளவில் தங்க நகைகளை வாங்க வேண்டும் என்றுதான் எண்ணுவர். அதற்கு ஏதுவாக பண்டிகை காலங்களிலும் வியாபாரம் அதிக அளவில் இருக்கும். இதன் காரணமாகவும் விலை உயர வாய்ப்புள்ளது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை: சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. கிராமம் 103 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் 1,03,000 ரூபாயாக உள்ளது.


Click it and Unblock the Notifications