செப்டம்பர் 15-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் விலை நேற்றைய விலையில் தான் விற்பனை செய்யப்படுகிறது. போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள், வங்கிகளில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்கள் என எண்ணற்ற திட்டங்கள் இருந்தாலும், சிறிது பணம் சேர்ந்தால் நகையாக வாங்குவது தான் பல இல்லத்தரசிகளின் முதன்மை நோக்கம். என்னதான் தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் அவற்றை விரும்பி வாங்கும் பெண்களின் எண்ணிக்கை ஒருபோதும் குறைவதே இல்லை. இந்தப் பதிவில் கோவை மதுரையில் தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.6,865 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.7,489 ஆகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: இன்று 22 கேரட் தங்கம் விலை 6,865 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 54,920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,489 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 59,912 ரூபாயாக உள்ளது.
இன்று 1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 5,623 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 18 கேரட் தங்கம் விலை 44,984 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 97 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை, மதுரையில் இன்று வெள்ளி விலை கிலோவுக்கு 97,000 ரூபாயாக உள்ளது.
இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றாலும்.. நேற்றும் அதற்கு முன்தினமும் சேர்ந்து 1300 ரூபாய் சவரனுக்கு அதிகரித்துள்ளது. இது மக்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
புரட்டாசி மாதம் வருவதால் அதற்குள் இருக்கும் முகூர்த்த தினங்களில் தங்க நகையின் விற்பனை அதிகரிக்கும். இதன் காரணமாகவும் விலை உயரலாம். அதேபோல தை மாதம் வந்துவிட்டால் போதும்.. அப்போதும் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் இருக்கும். எனவே தங்க நகை வாங்குபவர்கள் இது போன்ற முகூர்த்த தினங்கள், பண்டிகைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு விலை குறைவான நாட்களைப் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.


Click it and Unblock the Notifications