7200 ரூபாயை நெருங்கும் 1 கிராம் தங்கம் விலை.. முக்கிய நகரங்களில் இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?

தங்கம் வாங்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டாலே வீட்டில் இருக்கும் பெண்களுக்கு குஷி ஆகிவிடும். அந்த அளவுக்கு இந்திய குடும்பங்களில் பெரும் முக்கியத்துவத்தை தங்க நகைகள் கொண்டுள்ளது. பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்காக சிறுவயதிலிருந்தே தங்கத்தை சேமிக்க தொடங்கி விடுவார்கள். பின்னர் தேவைப்படும்போது அவர்களின் திருமணத்திற்காகவோ அல்லது அவர்களின் கல்வி செலவுக்காகவோ பயன்படுத்துவார்கள். "காசை மண்ணில் போடுவதும் பெண்ணில் போடுவதும் ஒன்று" என்ற வாக்கியத்திற்கு இணங்க ஏதேனும் தொகை கைக்கு வந்தால் உடனே தங்க நகைகளை வாங்கி வைப்பது தான் பெரும்பாலான குடும்பங்களின் வாடிக்கை.

ஆனால் அதற்கு சற்று முற்றுகட்டாய் கடந்த இரண்டு மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏறி வருகிறது. இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்க விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் நேற்றைய விலையில் தான் விற்கப்படுகிறது.

 7200 ரூபாயை நெருங்கும் 1 கிராம் தங்கம் விலை.. முக்கிய நகரங்களில் இன்றைய விலை எவ்வளவு தெரியுமா?


ஆகஸ்ட் 18-ஆம் தேதி நிலவரப்படி, தங்கம் விலை நேற்றைய விலையில் இருந்து எந்த வித மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ. 7,163 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை ரூ. 6,566 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதேபோல் 18 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 5,373 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் வாங்க வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருக்கும் நபர்கள் அவ்வப்போது சந்தைகளில் ஏற்படும் மாற்றங்கள்.. நாட்டின் சட்ட திட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள்.. ஆகியவற்றை தெரிந்து கொள்ளும்போது சிறப்பான விலையில் தங்க நகைகளை வாங்க முடியும். இதற்கு உதாரணமாக சமீபத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு தங்கம் விலை வெகுவாக குறைந்தது. இதைப் பயன்படுத்தி பலரும் தங்களுக்கு தேவையான நகைகளை வாங்கி குவித்ததை நம்மால் பார்க்க முடிந்தது.

சாமானிய மக்களாக இருந்தால் இது போன்ற அறிவிப்புகள் வரும்போது நம் கையில் பணம் இருக்காது. அதுவே நம் கையில் சிறிதளவு பணம் இருக்கும்போது இது போன்ற அறிவிப்புகள் எதுவும் வெளிவராமல் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும். இதை வைத்தே நாம் தெரிந்து கொள்ளலாம்.. தங்க விலையை நிர்ணயிக்கும் காரணிகள் அவ்வப்போது மாறுபடும் என்று.

தங்கம் விலை எப்போது ஏறும்? எப்போது இறங்கும்? என்று நம்மால் கூறிவிட முடியாது. இது பல்வேறு காரணிகளைப் பொறுத்து மாறுபடக்கூடும். ஆனால் ஒரு சில காரணங்கள் நமக்கு முன்னரே தெரியும். உதாரணமாக கடந்த மாதம் ஆடி என்பதால் எந்த திருமணமும் நடந்திருக்காது. இதனால் தங்கம் விலை சற்று இறங்கி பின்னர் ஏறி காணப்பட்டு இருக்கும்.

ஆனால் இனி வரும் மாதங்களில் டிமாண்ட் அதிகரிக்கலாம். இதன் காரணமாக தங்கம் உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல பண்டிகைகள் வந்தாலும் தங்க விலையில் மாற்றம் இருக்கலாம். எனவே தங்கம் வாங்க முடிவெடுக்கும் போது விலை குறைவாக இருக்கும் நாட்களை பயன்படுத்திக் கொள்வது லாபகரமானதாக இருக்கும்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை நிலவரம்:
சென்னை - 6,670 ரூபாய்
மும்பை - 6,670 ரூபாய்
டெல்லி - 6,685 ரூபாய்
கொல்கத்தா - 6,670 ரூபாய்
பெங்களூர் - 6,670 ரூபாய்
ஹைதராபாத் - 6,670 ரூபாய்
கேரளா - 6,670 ரூபாய்
புனே - 6,670 ரூபாய்
பரோடா - 6,675 ரூபாய்
அகமதாபாத் - 6,675 ரூபாய்
ஜெய்ப்பூர் - 6,685 ரூபாய்
லக்னோ - 6,685 ரூபாய்
கோயம்புத்தூர் - 6,670 ரூபாய்
மதுரை - 6,670 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 7,277 ரூபாய்
மும்பை - 7,277 ரூபாய்
டெல்லி - 7,292 ரூபாய்
கொல்கத்தா - 7,277 ரூபாய்
பெங்களூர் - 7,277 ரூபாய்
ஹைதராபாத் - 7,277 ரூபாய்
கேரளா - 7,277 ரூபாய்
புனே - 7,277 ரூபாய்
பரோடா - 7,282 ரூபாய்
அகமதாபாத் - 7,282 ரூபாய்
ஜெய்ப்பூர் - 7,292 ரூபாய்
லக்னோ - 7,292 ரூபாய்
கோயம்புத்தூர் - 7,277 ரூபாய்
மதுரை - 7,277 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 சவரன் 22 காரட் தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 53,360 ரூபாய்
மும்பை - 53,360 ரூபாய்
டெல்லி - 53,480 ரூபாய்
கொல்கத்தா - 53,360 ரூபாய்
பெங்களூர் - 53,360 ரூபாய்
ஹைதராபாத் - 53,360 ரூபாய்
கேரளா - 53,360 ரூபாய்
புனே - 53,360 ரூபாய்
பரோடா - 53,400 ரூபாய்
அகமதாபாத் - 53,400 ரூபாய்
ஜெய்ப்பூர் - 53,480 ரூபாய்
லக்னோ - 53,480 ரூபாய்
கோயம்புத்தூர் - 53,360 ரூபாய்
மதுரை - 53,360 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் 1 சவரன் 24 காரட் தங்கம் விலை நிலவரம்:

சென்னை - 58,216 ரூபாய்
மும்பை - 58,216 ரூபாய்
டெல்லி - 58,336 ரூபாய்
கொல்கத்தா - 58,216 ரூபாய்
பெங்களூர் - 58,216 ரூபாய்
ஹைதராபாத் - 58,216 ரூபாய்
கேரளா - 58,216 ரூபாய்
புனே - 58,216 ரூபாய்
பரோடா - 58,256 ரூபாய்
அகமதாபாத் - 58,256 ரூபாய்
ஜெய்ப்பூர் - 58,336 ரூபாய்
லக்னோ - 58,336 ரூபாய்
கோயம்புத்தூர் - 58,216 ரூபாய்
மதுரை - 58,216 ரூபாய்

இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய வெள்ளி விலை நிலவரம் (1 கிலோ):

சென்னை - 91,000 ரூபாய்
மும்பை - 86,000 ரூபாய்
டெல்லி - 86,000 ரூபாய்
கொல்கத்தா - 86,000 ரூபாய்
பெங்களூர் - 86,000 ரூபாய்
ஹைதராபாத் - 91,000 ரூபாய்
கேரளா - 91,000 ரூபாய்
புனே - 86,000 ரூபாய்
பரோடா - 86,000 ரூபாய்
அகமதாபாத் - 86,000 ரூபாய்
ஜெய்ப்பூர் - 86,000 ரூபாய்
லக்னோ - 86,000 ரூபாய்
கோயம்புத்தூர் - 91,000 ரூபாய்
மதுரை - 91,000 ரூபாய்

உலக நாடுகளில் இன்று 22 கேரட் 1 கிராம் தங்கம் விலை:

பஹ்ரைன் - BHD 29 - 6,475 ரூபாய்,
குவைத் - KWD 23 - 6,255 ரூபாய்,
மலேசியா - MYR 350 - 6,623 ரூபாய்,
ஓமன் - OMR 30 - 6,590 ரூபாய்,
கத்தார் - QAR 286 - 6,565 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 286 - 6,392 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 102 - 6,514 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 281 - 6,422 ரூபாய்,
அமெரிக்கா - USD 76 - 6,416 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 281 - 6,422 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 281 - 6,422 ரூபாய்,
துபாய் (UAE) - AED 281 - 6,422 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 281 - 6,422 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 281 - 6,422 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 281 - 6,422 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 286 - 6,565 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 30 - 6,590 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 286 - 6,392 ரூபாய்.

உலக நாடுகளில் இன்று 24 கேரட் 1 கிராம் தங்கம் விலை:
பஹ்ரைன் - BHD 31 - 6,897 ரூபாய்,
குவைத் - KWD 25 - 6,823 ரூபாய்,
மலேசியா - MYR 367 - 6,945 ரூபாய்,
ஓமன் - OMR 32 - 6,949 ரூபாய்,
கத்தார் - QAR 305 - 7,014 ரூபாய்,
சவுதி அரேபியா - SAR 309 - 6,906 ரூபாய்,
சிங்கப்பூர் - SGD 113 - 7,177 ரூபாய்,
ஐக்கிய அரபு அமீரகம் - AED 304 - 6,936 ரூபாய்,
அமெரிக்கா - USD 81 - 6,794 ரூபாய்,
அபுதாபி (UAE) - AED 304 - 6,936 ரூபாய்,
அஜ்மான் (UAE) - AED 304 - 6,936 ரூபாய்,
துபாய் (UAE) - AED 304 - 6,936 ரூபாய்,
புஜைரா (UAE) - AED 304 - 6,936 ரூபாய்,
ராஸ் அல் கைமா (UAE) - AED 304 - 6,936 ரூபாய்,
ஷார்ஜா (UAE) - AED 304 - 6,936 ரூபாய்,
தோஹா (Qatar) - QAR 305 - 7,014 ரூபாய்,
மஸ்கட் (Oman) - OMR 32 - 6,949 ரூபாய்,
தம்மம் (Saudi Arabia) - SAR 309 - 6,906 ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+