மார்ச் மாதம் தொடக்கம் முதல் சரிவிலேயே இருந்த தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி இருக்கிறது. ஈரான் போர் தொடங்கியது முதலே சென்னையில் தங்கத்தின் விலை பெருமளவில் சரிவடைந்து வந்தது. ஆனால் தற்போது போர் நிறுத்த சாத்தியங்கள் தென்படுவதால் தங்கத்தின் விலை உயர தொடங்கி இருக்கிறது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 13, 600 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று கிராமுக்கு 70 ரூபாய் விலை உயர்ந்து 13,670 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் நேற்று 1,08, 800 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று 560 ரூபாய் விலை உயர்ந்து 1,09,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை பொறுத்தவரை தொடர்ச்சியாக சரிவிலேயே இருந்து வந்த தங்கம் நேற்று இன்று என இரண்டு நாட்களாக விலை உயரத் தொடங்கி இருக்கிறது. நேற்று மற்றும் இன்று ஆகிய இந்த இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 420 ரூபாயும் ஒரு சவரனுக்கு 3360 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறத. இதன் மூலம் கிட்டத்தட்ட 23 நாட்களாக தங்கம் விலையில் நடந்து வந்த மேஜிக் முடிவுக்கு வந்துள்ளது.
ஈரான் போர் தொடங்கிய பின்னர் மார்ச் 1ஆம் தேதி சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராம் 15,775 ரூபாயாக இருந்தது இதனை அடுத்து படிப்படியாக சரிந்து வந்த தங்கம் மார்ச் 24ஆம் தேதி அன்று 13,250 ரூபாய் வரை சரிந்து மக்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தது. இந்த மாதத்திலேயே இல்லாத விலை சரிவு இது. இந்த சூழலில் மீண்டும் தங்கத்தின் விலை உயர தொடங்கியிருக்கிறது.
சென்னையில் 24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 76 ரூபாய் உயர்ந்து 14,913 ரூபாய்க்கும் ஒரு சவரன் 68 ரூபாய் உயர்ந்து 1,19,304 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் 60 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,410 ரூபாய்க்கும் ஒரு சவரன் 480 ரூபாய் விலை உயர்ந்து 91,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த ஒரு மாற்றமும் இல்லை. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி 260 ரூபாய்க்கு ஒரு கிலோ விலை 2,60,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை கடந்த இரண்டு நாட்களாக உயர்ந்து வருவதற்கு ஈரான் போரில் நடந்து வரக்கூடிய மாற்றங்களே காரணம். ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்காவும் முன் வந்திருக்கிறது ஈரான் தரப்பிலும் அதற்கான சிக்னல்கள் வந்துள்ளன. எனவே சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கிறது இதன் காரணமாக தங்கம் விலை உயர்வு கண்டு வருகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications