சமீப நாட்களாக தங்கம் விலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் தங்கம் விலை கடந்த சில நாட்களில் திடீரென குறைவதும் திடீரென உச்சத்தை தொடுவதும் என மாறி மாறி ஏற்ற இறக்கமாக இருந்து கொண்டிருக்கிறது. பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு 300 முதல் 400 ரூபாய் வரை குறைந்த தங்கம் விலை மீண்டும் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குப் பிறகு ஏறத் தொடங்கியுள்ளது. அந்த வகையில் இன்று மக்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் தங்கம் விலை கிராமுக்கு 95 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்தப் பதிவில் கோவை மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை என்ன என்பது குறித்து பாப்போம்.
ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,565 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,162 ஆகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: நேற்று தங்கம் விலை 20 ரூபாய் அதிகரித்து இருந்த நிலையில்.. இன்று கிராமுக்கு 95 ரூபாய் அதிகரித்துள்ளது. அதாவது 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 95 ரூபாய் அதிகரித்து 6,565 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 104 ரூபாய் அதிகரித்து 7,162 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் 22 கேரட் தங்கம் விலை 760 அதிகரித்து 52,520 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல ஒரு சவரன் 24 கேரட் தங்கம் விலை 832 ரூபாய் அதிகரித்து 57,296 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்று 1 கிராம் வெள்ளி விலை 88.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி விலை 88,500-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலையில் நேற்றைக்கும் இன்றைக்கும் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. நேற்றைய விலையோடு ஒப்பிடும்போது இன்று வெள்ளி விலை 1 ரூபாய் அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் தங்க விலையில் ஏற்பட்ட ஏற்றம் பலரையும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. ஏனெனில் கடந்த 23-ஆம் தேதிக்குப் பிறகு சரிவை சந்தித்த தங்க நகை விலை தற்போது ஏறத் தொடங்கியுள்ளது. இன்று 10 கிராம் தங்கம் விலை தோராயமாக 1040 ரூபாய் வரை அதிகரித்துள்ளது.
இனி வரும் மாதங்களிலும் இதே போக்கு தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது எனவே தங்கம் வாங்க திட்டமிடுபவர்கள் விலை குறைவாக இருக்கும் நாட்களை பயன்படுத்திக் கொள்வது நல்லது


Click it and Unblock the Notifications