நம் நாட்டில் பணவீக்கம் அதிகரித்து வருவதால் அதற்கு எதிராக மக்கள் பார்க்கும் முக்கிய முதலீடு என்றால் அது தங்க நகைகள் தான். பிற முதலீட்டு திட்டங்களில் தொடர்ந்து முதலீடு செய்து வந்தால், அதன்பின் அதற்கு கணிசமான வட்டி வழங்கப்படும். ஆனால் தங்கத்தை கையில் வாங்கிய உடனேயே அவற்றை வீட்டில் வைத்துக் கொள்ளலாம், தேவை என்றால் அடமானம் வைக்கலாம் என்ற நம்பிக்கையில் பலரும் தங்கத்திற்கே முன்னுரிமை அளிக்கின்றனர். இதனால் தங்கம் விலை ஏற்றம் பலரையும் கவலைக்கு உள்ளாக்கும் ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. சமீபத்திய பட்ஜெட் அறிவிப்புக்கு பிறகு தங்கம் விலை கணிசமாக குறைய தொடங்கினாலும், கடந்த 3 தினங்களாக மீண்டும் தங்கம் விலை அதிகரித்து வருகிறது. இந்தப் பதிவில் இன்று கோவை மற்றும் மதுரையில் தங்கம் விலை எவ்வளவு? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,470 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,058 ஆகவும் உள்ளது.

கடந்த மாதத்தில் மிகப்பெரிய சரிவை கண்ட தங்கத்தின் விலையில் சில நாட்களாக ஏற்றம் இருந்து வருகிறது. அதன்படி இந்த மாதம்.. அதாவது ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு பிறகு கணிசமாக தங்கம் விலை உயர்ந்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு பிறகு தங்கம் விலை கிராமுக்கு 140 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. கடந்த மாதங்களில் எல்லாம் இல்லாத அளவுக்கு 7-ஆம் தேதி அன்று தங்கம் விலை குறைந்து காணப்பட்டது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை: இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 25 ரூபாய் அதிகரித்து 6,470 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் அதிகரித்து 51,760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 27 ரூபாய் அதிகரித்து 7,058 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதே போல 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 216 ரூபாய் அதிகரித்து 56,464 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இது ஆடி மாதம் என்பதால் திருமண சீசன் எதுவும் இருக்காது. ஆனால் இனி வரும் மாதங்கள் திருமண சீசன் என்பதால் தொடர்ந்து தங்கம் விலை ஏற்றத்தை காணும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. இதனாலும் டிமாண்ட் அதிகரித்து தங்கம் விலையில் ஏற்றம் ஏற்படலாம். எனவே தங்கம் வாங்க விரும்புபவர்கள் முன்கூட்டியே ஆலோசித்து தங்க விலை குறைவாக இருக்கும் சமயத்தை பயன்படுத்திக் கொள்வது சிறந்ததாக இருக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரை மக்களே இன்று தங்க நகை வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம், வெள்ளி விலை கிடுகிடு உயர்வு: முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications