ஆகஸ்ட் 17-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலையில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை. இன்று தங்கம் விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை சமீப நாட்களாக ஏற்றம் கண்டு வந்த நிலையில் இன்றைய தினம் சற்று சீராக இருக்கிறது. என்னதான் தங்கம் விலை ஏறிக்கொண்டே சென்றாலும்.. மாதத்திற்கு ஒரு கிராம் தங்கத்தை சேமித்து வைக்கும் இந்திய குடும்பங்கள் பல உள்ளன. இதுபோன்ற குடும்பங்களுக்கு தங்க விலையில் ஏற்படும் சிறு மாற்றம் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம்.
பட்ஜெட்டுக்குப் பிறகு பலர் தங்க நகைகளை வாங்கி சேமிக்கத் தொடங்கினர். ஏனெனில் சுங்கக் கட்டணம் குறைக்கப்பட்டதன் காரணமாக தங்க விலை 350 ரூபாய் முதல் 400 ரூபாய் வரை கிராமுக்கு குறைந்திருந்தது.

ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 6,566 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,163 ஆகவும் உள்ளது.
கோவை மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை: கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 1 ரூபாய் அதிகரித்து 6,566 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல 1 சவரன் 22 கேரட் தங்கத்தின் விலை 8 ரூபாய் அதிகரித்து 52,528 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 1 ரூபாய் அதிகரித்து 7,163 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 8 ரூபாய் அதிகரித்து 57,304 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த மாதம் ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று மட்டும்தான் கடந்த மாதத்தை விடவும் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டது
ஆவணி மாதம் பிறந்து விட்ட காரணத்தினால் இனிமேல் திருமண விசேஷங்கள் அதிக அளவில் நடைபெறும். இதனால் டிமாண்ட் அதிகரித்து தங்கம் விலையில் இனிவரும் நாட்களிலும் தொடர் ஏற்றம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தங்க நகை வாங்க திட்டமிடுபவர்கள் விலை குறைவான நாட்களைப் பயன்படுத்திக் கொள்வது சிறந்தது.


Click it and Unblock the Notifications