தங்கம் சாமானிய மக்களின் நீண்ட கால சேமிப்பு கருவியாக இருக்கும் வேளையில் தொடர்ந்து அதிகரித்து வரும் விலை காரணமாக ரீடைல் சந்தையில் தங்கம் வாங்குவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்தாலும் தங்கம் வாங்கப்படும் அளவுகள் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா மற்றும் இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள வேளையில் டாலர் மதிப்பு சரிந்தது மட்டும் அல்லாமல் பத்திர முதலீட்டு மீதான முதலீட்டின் லாபம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இதனால் பத்திர சந்தையில் இருந்து வெளியேறிய முதலீடு பங்குச்சந்தையிலும், தங்கம் மீது குவிந்துள்ளது.

மேலும் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் பணிவீக்க உயர்வு, வேலைவாய்ப்பு எண்ணிக்கையில் சிறு தடுமாற்றம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு ஜூலை 26 ஆம் தேதி தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்ததை 0.25 சதவீதம் உயர்த்தும் என கணிக்கப்பட்டு உள்ளது.
வட்டி உயர்வின் மூலம் பணவீக்கம் குறைந்தால் தங்கம் விலையும் குறையும், இதனால் அடுத்த சில நாட்களுக்கு தங்கம் விலையில் அதிகளவிலான தடுமாற்றம் இருக்கும் என்பதால் தங்கம் வாங்குபவர்கள் தங்களுடைய டிமாண்ட் மற்றும் தேவையை பொருத்து தங்கத்தை வாங்குவது சிறந்த முதலீட்டு முடிவாக இருக்கும்.
இன்று சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 1933 டாலரில் இருந்து 1941 டாலர் வரையில் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. மேலும் இது ஆசிய சந்தையில் ஏற்பட்ட தாக்கத்தின் எதிரொலி மட்டுமே ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தை துவக்கத்தில் கூடுதலாக உயரவும் வாய்ப்புகள் உள்ளது.
இதேவேளையில் இன்று MCX சந்தையில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 0.04 சதவீதம் உயர்ந்து 58,799 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல் 1 கிலோ வெள்ளி விலை 0.26 சதவீதம் அதிகரித்து 71,305 ரூபாயாக உள்ளது. இது இரண்டுமே பியூச்சர்ஸ் சந்தையின் விலை நிலவரங்கள்.
இன்று ரீடைல் சந்தையில் 10 கிராம் 22 கேரட் தங்கம் விலை 200 ரூபாய் உயர்ந்து 54,650 ரூபாயாக உள்ளது, இதுவே 24 கேரட் தங்கம் விலை 210 ரூபாய் உயர்ந்து 59,620 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதேபோல் ரீடைல் சந்தையில் இன்று ஆபரண தங்கம் விலை ஒரு சவரன் 160 ரூபாய் அதிகரித்து 43,720 ரூபாயாக உள்ளது. வெள்ளி விலை 200 ரூபாய் உயர்ந்து 73600 ரூபாயாக உள்ளது.

22 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 55,000 ரூபாய்,
மும்பை - 54,650 ரூபாய், டெல்லி - 54,800 ரூபாய், கொல்கத்தா - 54,650 ரூபாய், பெங்களூர் - 54,650 ரூபாய், ஹைதராபாத் - 54,650 ரூபாய், கேரளா - 54,650 ரூபாய், புனே - 54,650 ரூபாய், பரோடா - 54,700 ரூபாய், அகமதாபாத் - 54,700 ரூபாய், ஜெய்ப்பூர் - 54,800 ரூபாய், லக்னோ - 54,800 ரூபாய், கோயம்புத்தூர் - 55,000 ரூபாய், மதுரை - 55,000 ரூபாய்.
24 கேரட் 10 கிராம் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 60,000 ரூபாய், மும்பை - 59,620 ரூபாய், டெல்லி - 59,770 ரூபாய், கொல்கத்தா - 59,620 ரூபாய், பெங்களூர் - 59,620 ரூபாய், ஹைதராபாத் - 59,620 ரூபாய், கேரளா - 59,620 ரூபாய், புனே - 59,620 ரூபாய், பரோடா - 59,670 ரூபாய், அகமதாபாத் - 59,670 ரூபாய், ஜெய்ப்பூர் - 59,770 ரூபாய், லக்னோ - 59,770 ரூபாய், கோயம்புத்தூர் - 60,000 ரூபாய், மதுரை - 60,000 ரூபாய்.
1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 44000 ரூபாய், மும்பை - 43720 ரூபாய், டெல்லி - 43840 ரூபாய், கொல்கத்தா - 43720 ரூபாய், பெங்களூர் - 43720 ரூபாய், ஹைதராபாத் - 43720 ரூபாய், கேரளா - 43720 ரூபாய், புனே - 43720 ரூபாய், பரோடா - 43760 ரூபாய், அகமதாபாத் - 43760 ரூபாய், ஜெய்ப்பூர் - 43840 ரூபாய், லக்னோ - 43840 ரூபாய், கோயம்புத்தூர் - 44000 ரூபாய், மதுரை - 44000 ரூபாய்.
1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 77000 ரூபாய், மும்பை - 73600 ரூபாய், டெல்லி - 73600 ரூபாய், கொல்கத்தா - 73600 ரூபாய், பெங்களூர் - 73000 ரூபாய், ஹைதராபாத் - 77000 ரூபாய், கேரளா - 77000 ரூபாய், புனே - 73600 ரூபாய், பரோடா - 73600 ரூபாய், அகமதாபாத் - 73600 ரூபாய், ஜெய்ப்பூர் - 73600 ரூபாய், லக்னோ - 73600 ரூபாய், கோயம்புத்தூர் - 77000 ரூபாய், மதுரை - 77000 ரூபாய்.
More From GoodReturns

தங்கத்தில் முதலீடு செய்ய கரெக்டான டைம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்.. பண மழை கொட்டும்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

உகாதி நாளில் தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! தொடர்ந்து 7ஆவது நாளாக நடக்கும் மேஜிக்..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

அது மட்டும் நடந்தால் தங்கம், வெள்ளி, நிஃப்டி என்னவாகுமோ? ஈரான் போர் மத்தியில் நிபுணர்கள் எச்சரிக்கை?

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?



Click it and Unblock the Notifications