மத்திய கிழக்கில் நிலவும் இஸ்ரேல் - ஈரான் - அமெரிக்கா மத்தியிலான போர் பேச்சுவார்த்தை கட்டத்தில் இருந்தாலும் தாக்குதல்கள் தொடர்ந்து நடப்பது, ராணுவ வீரர்களை குவிப்பதும் அதிகரித்து வருகிறது. இதனால் பேச்சுவார்த்தை தோல்வி அடையும் பட்சத்தில் பெரும் தாக்கம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சூழ்நிலை தற்போது முதலீட்டு சந்தையை தலைகீழாக மாற்றியுள்ளது என்றால் மிகையில்லை, ஒருப்பக்கம் அமெரிக்க அரசு பத்திர முதலீட்டின் மீதான வருமானம் (US Treasury yields) உயர்வு, கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள தடுமாற்றம் மற்றும் வலுவான அமெரிக்க டாலர் ஆகியவை, தங்க விலையை தடுமாற செய்துள்ளது என்றால் மிகையில்லை.

தங்கம் கடந்த ஒரு வாரத்தில் கலவையான போக்கை சந்தித்தது. நாள் வாரத்தின் கடைசி நாளில் ரீடைல் சந்தையில் தங்கம் விலை உயர்ந்துள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் சனிக்கிழமை முடியும் விலை தான் நாளையும் தொடரும். முதலீட்டு சந்தை மந்தமாக இருந்தாலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு தான் இந்திய ரீடைல் சந்தையில் தங்கம் விலை உயர்வுக்கு முக்கியமான காரணமாக உள்ளது.
இன்றைய ரீடைல் சந்தை விலை
24 காரட் தங்கம் விலை ஒரு கிராமுக்கு ரூ.251 அதிகரித்து ரூ.14,902 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.230 வரை ஏற்றம் கண்டு ரூ.13,660 ஆக உயர்ந்துள்ளது. 18 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்வு பதிவாகி ரூ.11,400 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளி விலையும் இன்று உயர்வில் உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 அதிகரித்து ரூ.250 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கிலோவுக்கு வெள்ளி விலை ரூ.5,000 வரை அதிகரித்து ரூ.2,50,000 ஆக உயர்ந்துள்ளது. 2.2 லட்சம் ரூபாய் வரையில் சரிந்து வெள்ளி விலை தற்போது 2.5 லட்சம் வரையில் உயர்ந்துள்ளது.
போர் காரணமாக கச்சா எண்ணெய், அரசு பத்திரம் மீதான முதலீடுகள் அதிகரிப்பதால் தங்கம் மீதான முதலீடுகள் மந்த நிலைக்கு செல்கிறது. ஆனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட சரிவு தான் தங்கம் விலை உயர்வுக்கு அடிப்படை காரணமாக உள்ளது. இந்தியாவில் தங்கம் உற்பத்தி செய்யபாடாத காரணத்தால் மொத்த தங்கத்தையும் வெளிநாட்டில் இருந்து டாலரில் பணம் கொடுத்து தான் வாங்கப்படுகிறது.
மொத்தத்தில், தங்கம் மற்றும் வெள்ளி இரண்டிலும் இன்று விலை உயர்வு காணப்படுவதால், முதலீட்டாளர்கள் மற்றும் நகை வாங்குபவர்கள் சந்தையை கவனமாக கண்காணிக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
எம்சிஎக்ஸ் சந்தையில் தங்கம்
இந்திய சந்தையில், Multi Commodity Exchange of India (MCX) தங்க விலை வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை 1,47,270 ரூபாய் என்ற அளவில் முடிவடைந்தது. இந்த வாரத்தின் குறைவான ரூ.1,29,595 அளவிலிருந்து ரூ.17,500க்கும் மேல் மீண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த உயர்வு, முதலீட்டாளர்கள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக மீண்டும் பார்த்து வருவதை காட்டுகிறது.
சர்வதேச சந்தை நிலை
சர்வதேச சந்தையில், COMEX தங்க விலை ஒரு ட்ராய் அவுன்ஸுக்கு 4,500 டாலருக்கு மேல் முடிவடைந்தது. இருப்பினும், வார அடிப்படையில் 1.85% இழப்பை பதிவு செய்துள்ளது.
இதன் மூலம், தங்கம் உயர்ந்த நிலையில் இருந்தாலும், சந்தை இன்னும் நிலையான திசையை எட்டவில்லை என்பது தெளிவாகிறது. அமெரிக்க டாலர் வலுவாக இருப்பது தங்க விலையை கட்டுப்படுத்தும் முக்கிய காரணியாக உள்ளது. அதே நேரத்தில், கச்சா எண்ணெய் விலையின் அதிர்வுகள் மற்றும் உலக அரசியல் பதற்றம் முதலீட்டாளர்களை பாதுகாப்பான சொத்துகளுக்கு மாற தூண்டுகிறது.
இந்த இரண்டு எதிர்மறை மற்றும் சாதக காரணிகள் இணைந்து, தங்க விலையை ஒரு வரம்புக்குள் வைத்திருக்கின்றன.
கோல்டு அவுட்லுக்
என்ரிச் முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் பொன்முடி தங்கம் விலை குறித்த கணிப்பில், சர்வதேச தங்க விலை $4,600-ஐ தாண்டினால், $4,680 முதல் $4,750 வரை மேலும் உயர வாய்ப்பு உள்ளது. அதன் பிறகு $4,850 அளவிலும் எதிர்ப்பு நிலை காணப்படும் என அவர் கணித்துள்ளார்.
மேலும், $4,300 அளவை விட கீழே சென்றால், தங்க விலை $4,100-$4,150 வரை வேகமாக சரிவடையும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications