செப்டம்பர் 21-ஆம் தேதி நிலவரப்படி நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் தங்கம் விலை கிராமுக்கு 82 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை செப்டம்பர் 12-ஆம் தேதிக்குப் பிறகு அதிகரித்துக் கொண்டே சென்று தற்போது உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் 22 கேரட் தங்கம் விலை தோராயமாக 7,000 ரூபாயைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளது. இதன் காரணமாக தங்க நகை முதலீட்டாளர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.6,960 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ. 7,593 ஆகவும் உள்ளது.

கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை: கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 75 ரூபாய் அதிகரித்து 6,960 ரூபாய்க்கு விற்பனையாகிறது. தோராயமாக 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை 7,000 ரூபாயை தொட்டுள்ளது. அதேபோல 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 600 ரூபாய் அதிகரித்து 55,680 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 82 ரூபாய் அதிகரித்து 7,593 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 656 ரூபாய் அதிகரித்து 60,744 ரூபாயாக உள்ளது.
1 கிராம் 18 கேரட் தங்கத்தின் விலை 61 ரூபாய் அதிகரித்து 571 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 18 கேரட் தங்கம் விலை 488 ரூபாய் அதிகரித்து 45,608 ரூபாயாக உள்ளது.
கோயம்புத்தூர் மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 50 காசுகள் அதிகரித்து 98 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி விலை சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் 98,000 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை ஏற்றம் கண்டிருப்பது தங்க நகை முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கத்தின் விலை 1 கிராமுக்கு தோராயமாக 7,000 ரூபாயை எட்டியுள்ளது. அதேபோல ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலையும் ரூ.7,500-ஐ எட்டியுள்ளது.
இன்றைய தினம் ஏற்பட்டிருக்கும் இந்த விலை ஏற்றம் இனிவரும் காலங்களிலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செப்டம்பர் மாதம் பிறந்ததிலிருந்து சில தினங்கள் தங்கம் விலை சீராக இருந்தது. அதன் பிறகு ஏறத் தொடங்கிய தங்கம் விலை இன்று உச்சத்தை அடைந்துள்ளது.
More From GoodReturns

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

மதுரை மக்களே தங்கம் வாங்குற பிளான் இருக்கா? உங்களுக்கு தான் இந்த செய்தி

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!



Click it and Unblock the Notifications