நவம்பர் 15-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை 10 ரூபாய் அதிகரித்திருக்கிறது. கடந்த மூன்று நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. இதனால் 1300 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்ட 22 கேரட் தற்போது 7,000 ரூபாய்க்கும் கீழ் குறைந்தது. ஆனால் இன்று மீண்டும் கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 6945-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7576-க்கும் விற்பனையாகிறது.
கோவை, மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: தமிழகத்தின் முக்கிய நகரங்களான சென்னை, கோயம்பத்தூர், திருச்சி, சேலம் போன்ற நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 10 ரூபாய் அதிகரித்து ரூ.6945-க்கு விற்பனையாகிறது. நேற்று ரூ.6935 ரூபாயாக இருந்தது. 1 சவரன் 22 கேரட் தங்கம் 80 ரூபாய் அதிகரித்து ரூ. 55,560-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் 100 ரூபாய் அதிகரித்து ரூ. 69450-க்கும் விற்பனையாகிறது.

1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.11 அதிகரித்து ரூ. 7576-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் 88 ரூபாய் அதிகரித்து ரூ.60,608-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் 110 ரூபாய் அதிகரித்து ரூ.75,760-க்கும் விற்பனையாகிறது.
கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இதே நிலை இனிவரும் நாட்களிலும் தொடருமா? என்பதை நம்மால் கணித்து கூறி விட முடியாது. ஏனெனில் தங்கம் விலை மத்திய மாநில அரசு வரி, தங்கத்திற்கான தேவை போன்றவற்றை பொறுத்து மாறுபடலாம். தங்கத்திற்கான மிகப்பெரிய நுகர்வோராக சீனா உள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் தான் இந்தியா இருக்கிறது.
சீனாவில் தங்கத்திற்கான தேவை குறையும் பட்சத்தில் அது உலக அளவில் குறைந்ததாக கருதப்படும். இதன் காரணமாக தங்கம் விலை குறைய வாய்ப்பிருக்கிறது. ஒருவேளை தொடர்ந்து தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்தால் அதன்போது விலை அதிகரிக்கலாம். அதோடு மத்திய மாநில அரசு வரியும் தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஏற்ப இந்த வரி மாறுபடும் இதனால் தான் இந்தியாவின் பல்வேறு நகரங்களிலும் வெவ்வேறு விலைகளில் தங்கம் விற்பனையாகிறது. மேலும் மேலே கூறப்பட்டுள்ள விலை தங்கத்திற்கானது மட்டுமே. இதோடு உள்ளூர் நகைக்கடை சங்கங்களின் விலை, தங்க நகைகளின் மேக்கிங் சார்ஜஸ், ஜிஎஸ்டி போன்ற அனைத்தையும் கருத்தில் கொண்டு தான் இறுதியாக நுகர்வோரிடம் தங்கம் விற்பனையாகிறது.
வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. 1 கிராம் 99 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.99,000 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

Gold price: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ் வருமா? 3வது நாளாக குறைந்த தங்கம் விலை மீண்டும் குறையுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!



Click it and Unblock the Notifications