செப்டம்பர் 24ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 21 ரூபாய் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் 22 ரூபாய் அதிகரித்திருந்த தங்கம் விலையில் இன்று 21 ரூபாய் அதிகரித்துள்ளது. நாளுக்கு நாள் அதிகரித்தே கொண்டே செல்லும் தங்கம் விலையால் நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். செப்டம்பர் 12-ஆம் தேதி வரையில் சீராக 10 ரூபாய், 20 ரூபாய் என அதிகரித்திருந்த தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம் செப்டம்பர் 13ஆம் தேதி அன்று காணப்பட்டது. அதன்படி தங்கம் விலை 120 ரூபாய் வரை அதிகரித்தது. அதிலிருந்து தொடர்ந்து இன்றைய நாள் வரை தங்கம் விலை படிப்படியாக ஏறிக்கொண்டே வருகிறது.
இந்தியாவில் ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 7,000 ரூபாயாக உள்ளது. அதேபோல் ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை 7236 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 20 ரூபாய் அதிகரித்து 7,000 ரூபாயை எட்டியுள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 160 ரூபாய் அதிகரித்து 56,000 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 21 ரூபாய் அதிகரித்து 7,636 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 168 ரூபாய் அதிகரித்து 61,088 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
1 கிராம் 18 கேரட் தங்கம் விலை 16 ரூபாய் அதிகரித்து 5,734 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 18 கேரட் தங்கம் விலை 128 ரூபாய் அதிகரித்து 45,872 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
20 ஆண்டுகளுக்கு முன்பு 1 கிராம் தங்கம் 585 ரூபாயாக இருந்தது. அப்படியானால் 1 சவரன் 4,464 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் இன்றைய தினம் விலையை சற்று யோசித்துப் பாருங்கள். ஒரு கிராம் தங்க நகையே 7,000 ரூபாயை நெருங்கி உள்ளது. தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது நாட்டு மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்களுடைய எதிர்கால முதலீடாக பலரும் தேர்ந்தெடுப்பது தங்க நகைகளை தான். இது போன்ற குடும்பங்களுக்கு தங்கம் விலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 98 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 கிலோ வெள்ளி விலை சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் 98,000 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்க நகை அடகு வச்சி கடன் வாங்க போறீங்களா? முதல்ல இத படிங்க!! இல்லனா அதிக வட்டி செலுத்தனும்!!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம் விலை எங்கோ போகப்போகுது!16,000 கிலோ தங்கத்தை சொந்தமாக வைத்திருக்கும் ஜாம்பவானின் கணிப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!



Click it and Unblock the Notifications