அக்டோபர் 12-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. சமீபத்திய நாட்களில் தங்கம் விலை அதிகரித்து 1 கிராம் 7,100 ரூபாயை கடந்து சென்றது. ஆனால் 3 நாட்களுக்கு முன்பு தங்கம் விலை தொடர்ந்து சரியத் தொடங்கியது. அதேபோல தொடர்ந்து குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்றைய தினம் மீண்டும் அதிகரித்து ஷாக் தந்தது.
ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,120 ஆகவும், 1 கிராம் 24 கேரட் தங்கம் 7,767 ரூபாயாகவும் உள்ளது.

கோயம்புத்தூர் மதுரையில் இன்றைய தங்கம் விலை: சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை போன்ற முக்கிய நகரங்களில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 25 ரூபாய் அதிகரித்து 7,120 ஆக உள்ளது. 1 சவரன் 22 கேரட் தங்கம் 200 ரூபாய் அதிகரித்து 56,960 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 27 ரூபாய் அதிகரித்து ரூ.7,767 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 216 ரூபாய் அதிகரித்து 62,136 ரூபாயாக உள்ளது.
2025-ஆம் ஆண்டுக்குள் 1 கிராம் தங்கம் விலை 10,000-த்தை எட்டி விடும் சூழல் நிலவுகிறது. ஏனெனில் இதுவரை இல்லாத அளவில் 24 கேரட் தங்கம் 7,800 ரூபாயை நெருங்கியுள்ளது. தங்கம் விலை கணிசமாக உயர்ந்து வருவது தமிழ்நாட்டு மக்களை வெகுவாக பாதித்துள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட சுங்கக் கட்டண குறைப்புக்கு பிறகு தங்கம் விலை சரசரவென குறையத் தொடங்கியது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்கள் பெரும்பாலானோர் நகைக்கடைகளில் குவிந்தனர். மக்கள் மட்டுமின்றி நகை கடை வியாபாரிகளும் அந்த அறிவிப்பை பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு தேவையான நகைகளை ஸ்டாக் வாங்கி வைத்தனர். இதன் காரணமாக நகைக்கடை வியாபாரிகளின் வருவாய் இந்த ஆண்டு அதிகரிக்கலாம் என முன்பே ஒரு பதிவில் பார்த்திருந்தோம்.
பட்ஜெட் அறிவிப்பு அன்றே தங்கம் விலை கிடுகிடுவென குறைந்து 1 கிராம் 22 கேரட் தங்கம் 6,500 ரூபாயையும், 1 கிராம் 24 கேரட் தங்கம் 7,100 ரூபாயையும் எட்டியது. ஆனால் அதிலிருந்து பார்க்கும்போது இன்றுவரையில் கிராமுக்கு 600 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. தங்கத்தையே முதன்மை முதலீடாக கருதும் குடும்பங்களுக்கு இந்த விலை ஏற்றம் பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: சென்னை, கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை 1 ரூபாய் அதிகரித்து 103 ரூபாயை எட்டியுள்ளது. 1 கிலோ வெள்ளி 1,03,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி!!

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர காரணம் என்ன? இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்?



Click it and Unblock the Notifications