அக்டோபர் 19-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் தந்தது. தங்க நகையின் தொடர் அதிகரிப்பு பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளது. இந்தியாவின் ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கத்தின் விலை 7,280 ரூபாயாகவும், 1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,942 ரூபாயாகவும் உள்ளது. இந்தப் பதிவில் கோயம்புத்தூர், மதுரை மற்றும் சென்னையில் இன்றைய விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்றைய தங்க விலை நிலவரம்: தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 40 ரூபாய் அதிகரித்துள்ளது. 1 கிராம் 22 கேரட் 7,280 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 58,240 ரூபாயாக உள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று சவரனுக்கு 320 ரூபாய் அதிகரித்துள்ளது.

1 கிராம் 24 கேரட் தங்கம் இன்றைய தினம் 44 ரூபாய் அதிகரித்து 7,942 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 352 ரூபாய் அதிகரித்து 63,536 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கம் தூய்மையான தங்கம். மேலும் இது மிகவும் மென்மையாக இருக்கும். இதை வைத்து தங்க நகைகள் செய்ய முடியாது. எனவே தூய்மையான தங்கத்தை வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கோல்ட் பார், கோல்டு காயின்கள் போன்றவற்றை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இன்றைய தினம் சவரனுக்கு 350 ரூபாய் அதிகரித்துள்ளதால், இது நகைப் பிரியர்களுக்கு பேரதிர்ச்சியாக மாறியுள்ளது. 1 கிராம் 8,000 ரூபாயை நெருங்கியுள்ளது.
நாட்டில் பணவீக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தங்க நகைகள், மளிகை பொருட்கள், நாம் பிறரிடமிருந்து பெரும் சேவைகள் என அனைத்தும் 1 வருடத்திற்கு முன்பு இருந்த விலையை விட தற்போது அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். பணம் வீக்கத்திற்கு எதிராக செயல்படும் தங்க நகைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதனால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அதுவும் அக்டோபர் மாதம் மற்றும் நவம்பர் மாதங்களில் பொதுவாகவே தங்க நகைகளுக்கு டிமாண்ட் அதிகரித்து விலை உயரும். ஏனெனில் இந்த இரண்டு மாதங்களும் பண்டிகை காலங்கள் அதிகம் இருக்கும் மாதங்களாகும். இதன் காரணமாகவும் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். ஒரு வேலை இதே விலை உயர்வு தொடர்ந்து நாளையும் ஏற்பட்டால் தங்கம் விலை ரூ.8000 ரூபாயை எட்டி விடும்.
கோவை, மதுரை மற்றும் சென்னையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: அக்டோபர் 19-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 1,07,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த திடீர் டிவிஸ்ட்!! 6 மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?



Click it and Unblock the Notifications