ஆகஸ்ட் 21-ஆம் தேதி அன்று தங்கம் விலை கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்து நகை பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.6,710 ஆகவும், அதேபோல் 24 கேரட் தங்கத்தின் 1 கிராம் விலை ரூ.7,320 ஆகவும் உள்ளது. இன்றைய நிலவரப்படி கோவை மதுரையில் தங்கம் விலை நிலவரம் குறித்து பார்ப்போம்.
கோவை மற்றும் மதுரையில் இன்றைய தங்கம் விலை: கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 50 ரூபாய் அதிகரித்து 6,710 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 400 ரூபாய் அதிகரித்து ரூ. 53,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 55 ரூபாய் அதிகரித்து 7,320 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கத்தின் விலை 440 ரூபாய் அதிகரித்து 58,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: இன்றைய நிலவரப்படி 1 கிராம் வெள்ளி 92 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை நேற்றைய விலையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் சீராக உள்ளது. 1 கிலோ வெள்ளி சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரையில் 92,000 ரூபாயாக உள்ளது.
தங்கம் விலை தொடர்ந்து 3 நாட்களாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதன்படி இந்த மாத ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு பிறகு தொடர்ந்து தங்கம் விலையில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கின்றன. இது நகைப்பிரியர்களுக்கு சற்று வேதனை அளிக்கும் ஒன்றாக மாறியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
பண வீக்கத்திற்கு எதிராக மக்கள் நம்பும் ஒரு முதலீடு என்றால் அது தங்க நகைகள் தான். சிறுசேமிப்பு திட்டங்களில் நீண்ட நாட்கள் முதலீடு செய்வது பணம் வீக்கத்திற்கு எதிராக பலன் தராது என்று எண்ணும் குடும்பங்கள் அதிக அளவில் இருக்கின்றன. இது போன்ற மக்களுக்கு இந்த விலை ஏற்றம் சற்று கவலை அளிக்கும் ஒன்றாகவே உள்ளது.
அதுவும் ஆடி மாதத்தில் எந்த திருமணங்களும் நடந்து இருக்காது. எனவே இனி வரும் மாதங்கள் திருமண சீசன் என்பதால் தங்க நகைகளுக்கு டிமாண்ட் அதிகரித்து.. இதேபோன்று விலை அதிகரிக்கலாம் என்றே கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலையில் நடந்த திடீர் மாற்றம்: நகை வாங்க இது நல்ல நேரமா?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

தங்கம் , வெள்ளி விலை தடாலடி உயர்வு: இனி தங்கம் விலை உயர்வை கட்டுப்படுத்த முடியாது!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?



Click it and Unblock the Notifications