சமீபத்திய தினங்களில் அதிரடியாக குறைந்து வந்த தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நவம்பர் 18-ஆம் தேதியான இன்று தங்கம் விலை கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் அளித்துள்ளது. 1 கிராம் 22 கேரட் தங்கம் 60 ரூபாய் அதிகரித்து விற்பனையாகிறது. ஒரு கிராம் 24 கேரட் தங்கம் 66 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இன்று ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் 6,995 ரூபாயாகவும், 1 கிராம் 24 கேரட் தங்கம் 7,631 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர் மற்றும் மதுரையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் 60 ரூபாய் அதிகரித்து ரூ.6,995-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் 480 அதிகரித்து ரூ.55,960-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் 600 ரூபாய் அதிகரித்து, ரூ.69,950 விற்பனையாகிறது.

கடந்த மாதம் அக்டோபர் 31-ஆம் தேதி தங்கம் விலை வெகுவாக அதிகரித்து இருந்தது 22 கேரட் தங்கம் 7,000 ரூபாயை கடந்து ரூ.7,445 என்ற விலையில் விற்பனையானது. 24 கேரட் தங்கம் 8,000 ரூபாயை விஞ்சியது. அதன் பிறகு படிப்படியாக குறைந்தது. இந்நிலையில் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
நம் நாட்டில் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்கள் திருமண சீசனாகும். பண்டிகை கால விற்பனையை தொடர்ந்து வரும் இந்த மாதங்களிலும் நகை விற்பனை அதிகரிக்கும். நகைக்கடைகள் மட்டுமின்றி அனைத்து வணிகமும் இந்த மாதங்களில் நல்ல லாபம் பார்க்கும். 2024-ஆம் ஆண்டின் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் சுமார் 48 லட்சம் திருமணங்கள் நடைபெற இருப்பதாக கணக்கெடுப்பு கூறுகிறது. இதன் காரணமாகவும் டிமாண்ட் அதிகரித்து தங்கம் விலை உயரலாம். தங்கம் விலையை பாதிக்கும் பல்வேறு காரணிகளில் டிமாண்டும் ஒன்று.
மேலே கூறப்பட்டுள்ள விலை தங்கத்திற்கானது மட்டுமே. நகையாக வாங்க வேண்டும் என்றால் அதற்கு மேக்கிங் சார்ஜஸ் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு கட்டணங்களை சேர்த்து தான் வாடிக்கையாளரிடம் கடைக்காரர் வசூலிப்பார். ஆனால் 24 கேரட் தங்கம் வாங்கும்போது உங்களுக்கு மேக்கிங் சார்ஜஸ் சற்று குறைவாக இருக்கும். ஏனெனில் 24 கேரட் தங்கத்தில் நகைகள் செய்ய முடியாது. கோல்ட் காயின்கள், கோல்ட் பார்கள் போன்றவற்றை மட்டுமே செய்யலாம். அதுவே 22 கேரட் தங்கம் என்றால் விதவிதமான டிசைன்களில் நகைகளை வாங்க முடியும். நீங்கள் வாங்கும் மாடலுக்கு ஏற்ப 40 சதவீதம் வரை மேக்கிங் சார்ஜஸ் இருக்கும்.
வெள்ளி விலை நிலவரம்: இன்று வெள்ளி விலை கிராம் ஒன்று 99 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சென்னை, கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி ரூ.99,000 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

டிரம்ப் கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ்! ஈரானுக்கு 48 மணிநேர கெடு- நாளைக்கு தங்கம் பங்குச்சந்தை என்னவாகுமோ?

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

தங்கம், வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு செக் வைத்த மத்திய அரசு!! வியாபாரிகளின் நூதன மோசடி அம்பலம்!!

மதுரையில் தங்கம் விலை திடீர் உயர்வு..!! இன்று தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications