நாளைய தினம் பல்வேறு மாநிலங்களிலும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து கிராமுக்கு 65 ரூபாய் அதிகரித்துள்ளது. தந்தேராஸ் பண்டிகைக்காக தங்க நகை வாங்க வேண்டும் என்று திட்டமிடும் மக்களை இது வெகுவாக பாதித்திருக்கிறது. நேற்றைய தினமும் கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்திருந்த நிலையில், இன்றும் அதே விலை ஏற்றத்தோடு தொடர்கிறது.
ரீடைல் சந்தையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 7,440 ரூபாயாகவும், 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 8,116 ரூபாயாகவும் உள்ளது.

கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோயம்பத்தூர் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான கோயம்பத்தூர், மதுரை மற்றும் சென்னையில் இன்று 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை 65 ரூபாய் அதிகரித்து 7,440 ரூபாயாக உள்ளது.
1 சவரன் 22 கேரட் தங்கம் விலை 520 ரூபாய் அதிகரித்து 59,520 ரூபாயாக உள்ளது. 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 71 ரூபாய் அதிகரித்து 8,116 ரூபாயாக உள்ளது. 1 சவரன் 24 கேரட் தங்கம் விலை 568 ரூபாய் அதிகரித்து 64,928 ரூபாயாக இருக்கிறது.
இந்த விலை உயர்வு காரணமாக இந்தியாவில் 10 கிராம் 24 கேரட் தங்கம் விலை ரூ.81,000 என்ற விலையை எட்டியுள்ளது. 24 கேரட் தங்கத்தில் நகைகளை வாங்க முடியாது. இருப்பினும் கோல்ட் பார்கள், கோல்ட் காயின்கள் போன்றவற்றை இந்த தந்தேராஸ் பண்டிகைக்காக வாங்க விரும்பும் வாடிக்கையாளர்களை இந்த விலை ஏற்றம் கடுமையாக பாதித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 23-ஆம் தேதி அன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தங்க இறக்குமதிக்கான சுங்கவரி வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் தங்கம் விலை 400 முதல் 500 ரூபாய் வரை குறைந்தது. ஆனால் அதன் பிறகு மீண்டும் ஏறத் தொடங்கியது. அன்றிலிருந்து இன்று வரை தோராயமாக ரூ.1000 ரூபாய் வரை விலை ஏற்றம் உள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு கிடைக்கும் போனஸ், சேமிப்பு திட்டங்களில் கிடைக்கும் தொகை என பலவற்றையும் பயன்படுத்தி தங்க நகை வாங்கலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த மக்களுக்கு இன்றைய தினம் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
உடனடியாக உயர்ந்து வரும் தங்க விலைக்கு என்னதான் காரணம் என்ற குழப்பம் உங்களுக்கு வரலாம்? பொதுவாக தங்கம் விலை ஏறுவதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது. அதில் ஒன்று டிமாண்ட். எந்த ஒரு பொருளானாலும் சரி அதற்குத் தேவை அதிகமாக இருக்கும் பட்சத்தில் விலை சற்று உயர்வாக இருக்கும். அதேபோல புவிசார் அரசியல் பதட்டங்கள், பொருளாதார மந்த நிலை, மத்திய மாநில அரசு வரி போன்றவையும் இந்த விலை ஏற்றத்திற்கு காரணங்களாக கூறப்படுகிறது.
கோவை மதுரையில் இன்றைய வெள்ளி விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் அதிகரித்து 109 ரூபாயை எட்டியுள்ளது. சென்னை கோவை மற்றும் மதுரையில் இன்று 1 கிலோ வெள்ளி விலை 1,09,000 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

17 ஆண்டுகளுக்குபிறகு கடும் வீழ்ச்சி கண்ட தங்கம்! திடீர் யூ டர்ன் அடித்த காரணம்? அடுத்த இலக்கு?

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

தங்கம் விலை: 100 என்ற நம்பர் செய்யும் மேஜிக்..!! இப்போது நகை வாங்கலாமா?

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?



Click it and Unblock the Notifications