நவம்பர் 29-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து நகைப் பிரியர்களுக்கு ஷாக் தந்துள்ளது. இன்று ஒரு நாளில் 1 கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் அதிகரித்திருக்கிறது. 1 கிராம் 24 கேரட் தங்கம் 76 ரூபாய் அதிகரித்திருக்கிறது. இன்றைய தினம் ரீடைல் சந்தையில் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7160-க்கும், 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7811-க்கு விற்பனை ஆகிறது.
நேற்றைய (28/11/24) தினம் 1 கிராம் 22 கேரட் தங்கம் ரூ.7,090-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.56,720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 1 கிராம் 24 கேரட் தங்கம் ரூ.7,735-க்கும். 1 சவரன் 24 கேரட் தங்கம் ரூ.61,880-க்கும் விற்கப்பட்டது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்: இன்றைய தினம் கோவை, மதுரை, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் 1 கிராம் 22 கேரட் தங்கம் 70 அதிகரித்து ரூ.7160-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் 560 அதிகரித்து ரூ.57,250-க்கும், 10 கிராம் 22 கேரட் தங்கம் 700 அதிகரித்து ரூ.71,600-க்கும் விற்கப்படுகிறது.
1 கிராம் 24 கேரட் தங்கம் 76 அதிகரித்து ரூ.7,811-க்கும், 1 சவரன் 24 கேரட் தங்கம் 608 அதிகரித்து ரூ.62,488-க்கும், 10 கிராம் 24 கேரட் தங்கம் 760 அதிகரித்து ரூ.78,110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
1 கிராம் 18 கேரட் தங்கம் 55 அதிகரித்து ரூ. 5,915-க்கும், 1 சவரன் 18 கேரட் 440 அதிகரித்து ரூ 47,320-க்கும், 10 கிராம் 18 கேரட் 550 அதிகரித்து ரூ.59,150-க்கும் விற்கப்படுகிறது.
இந்தியாவில் வெள்ளி விலை நிலவரம்: இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 2 ரூபாய் அதிகரித்து 100 ரூபாயை எட்டியுள்ளது. நேற்றைய தினம் 1 கிராம் 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று சென்னை. கோவை. மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 1 கிலோ வெள்ளி 1 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள விலை தங்கம் மற்றும் வெள்ளிக்கான விலை மட்டுமே. தங்க நகைகள், வெள்ளி நகைகள் போன்றவற்றை வாங்கும் போது நீங்கள் எடுக்கும் டிசைனுக்கு ஏற்ப மேக்கிங் சார்ஜஸ் விதிக்கப்பட்டு. அதோடு பிற கட்டணங்களான ஜிஎஸ்டி, உள்ளூர் வியாபாரியின் கட்டணங்கள் ஆகியவற்றை சேர்த்துதான் விலை நிர்ணயம் செய்யப்படும்.


Click it and Unblock the Notifications