சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக விலை உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருப்பது சாமானிய மக்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,220 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 160 ரூபாய் தங்கம் விலை உயர்ந்துள்ளது.இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,13,760 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை 3 நாட்களில் ஒரு கிராம் 270 ரூபாயும் ஒரு சவரன் 2,000 ரூபாய்க்கு மேலும் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் தங்கம் விலை ஒரு கிராம் 924 ரூபாயும் ஒரு சவரன் 7,712 ரூபாயும் விலை அதிகரித்துள்ளது. மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஒரு கிராம் தங்கம் 14,220 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,13,760 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 22 ரூபாய் விலை உயர்ந்து 15,513 ரூபாய்க்கும் 10 கிராம் 155,130 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 20 ரூபாய் விலை உயர்ந்து 12,000 ரூபாய்க்கும் ஒரு சவரன் 160 ரூபாய் உயர்ந்து 96,000 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. தங்கத்தின் விலை ஆகஸ்ட் மாதத்தில் வேகமாக உயர்ந்து வருகிறது.
வெள்ளியின் விலையில் இன்று மாற்றமில்லை. ஒரு கிராம் 260 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.60 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் இன்று ஒரு கிராம் 260 ரூபாயாக இருக்கிறது. அதாவது இந்த 13 நாட்களில் வெள்ளியின் விலை கிராமுக்கு 25 ரூபாயும் , ஒரு கிலோவுக்கு 25,000 ரூபாயும் விலை உயர்ந்திருக்கிறது.
உலக சந்தையில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப தான் இந்தியாவிலும் தங்கம், வெள்ளி விலைகள் மாறுகின்றன. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டிங் விலை 4,404 டாலர்களை கடந்து வர்த்தகமாகிறது. வெள்ளி 65 டாலர்களாக இருக்கிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,54,661 ரூபாய் என்ற விலையை தொட்டுள்ளது. உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் தங்கம் விலை இன்று லேசாக உயர்ந்துள்ளது.
தங்கம் விலை ஆகஸ்ட் மாதத்தில் திடீரென உயர்ந்து வருகிறது. இதனால் மீண்டும் வரலாற்று உச்சத்தை விலை எட்டுமோ என்ற கவலை எழுந்துள்ளது. இந்நிலையில் தங்கம் விலை குறையட்டும் வாங்கலாம் என காத்திருக்காமல் மக்கள் இப்போதே நீண்ட கால லாப அடிப்படையில் தங்கம் வாங்கலாம் அல்லது முதலீடு செய்து வைக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். இனி வரும் நாட்களில் விலை உயரவே வாய்ப்புல்ளதாக தெரிவிக்கின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

