தீபாவளி அதுவுமா தங்கம் விலையில் நடந்த மாற்றம்: சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியுமா?

நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கும் நிலையில் தங்கம் விலையில் மாற்றம் நடந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டின் பிரதான நகரங்களான சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை லேசாக விலை உயர்ந்துள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை 20 ரூபாய் உயர்ந்து 13,160 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் 160 ரூபாய் விலை உயர்ந்து 1,05,280 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தீபாவளி அதுவுமா தங்கம் விலையில் நடந்த மாற்றம்: சாமானிய மக்கள் தங்கம் வாங்க முடியுமா?

தங்கம் இந்த வார தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக விலை உயர்ந்தது. நவம்பர் 1 முதல் இன்று வரை இந்த 7 நாட்களில் தங்கம் விலை 5 நாட்கள் விலை உயர்ந்துள்ளது, 1 நாள் விலை சரிந்துள்ளது, ஒரு நாள் விலை மாறவில்லை. கடந்த திங்கள் தொடங்கி வியாழன் வரை சர்ரென உயர்ந்த தங்கம் நேற்று விலை கணிசமாக குறைந்தது. இதனால் தீபாவளிக்கு தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

இன்றைய தேதிக்கு ஒரு சவரன் ஆபரண தங்கம் வாங்க செய்கூலி சேதாரம் ஜிஎஸ்டி சேர்த்து 1.21 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும்.சாமானிய மக்களுக்கு இன்றைய விலைக்கு ஒரு சவரன் நகைக்கே 1.21 லட்சம் ரூபாய் செலவிட வேண்டி இருக்கும் என்பதால் முன் கூட்டியே நகை சீட்டு போட்டிருந்தாலோ அல்லது பணத்தை சேமித்து வைத்திருந்தாலோ தங்கம் வாங்குவது சாத்தியம். ஒரு கிராம் நகை வாங்க வேண்டும் என்றால் கூட 15000 ரூபாயாவது தேவை.

Also Read

24 கேரட் தங்கம் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் 14,357 ரூபாய்க்கும் 10 கிராம் 1,43,570 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் இன்று ஒரு கிராம் 10,768 ரூபாய்க்கும் ஒரு சவரன் 86,144 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Recommended For You

வெள்ளியின் விலை இன்று மாறவில்லை. தமிழ்நாட்டில் இன்று ஒரு கிராம் வெள்ளி 205 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2.05 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. வெள்ளி விலை அதன் வரலாற்று உச்சபட்ச விலையை விட கிலோவுக்கு 2.25 லட்சம் ரூபாய் விலை சரிந்து 2 லட்சமாக தான் இருந்தது. ஆனால் அமெரிக்க தேர்தல் முடிவு வெளியானதை அடுத்து வெள்ளி விலை உயர்வு கண்டது. பின்னர் சரிந்து கிராம் 205 ரூபாய் என விற்கப்படுகிறது.

உலக சந்தையில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 4,065 டாலர்களாக குறைந்துள்ளது. நேற்று முன் தினம் 4100 டாலருக்கு மேல் இருந்து தங்கம் விலை குறைந்துள்ளது. அதற்கு ஏற்ப தங்கம் விலை நேற்று தமிழ்நாட்டில் குறைந்தது, இன்று லேசாக மாற்றம் கண்டுள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+