இந்திய மண்ணில் ஒரு மனிதன் சொந்த வீடு, கார், நல்ல சம்பளத்துக்கு வேலை எல்லாம் கூட இல்லாமல் வாழ்ந்து விடலாம். ஆனால் தங்கம் என்கிற உலோகத்தை தொடாமல், தங்கத்தை வாங்காமல் தங்கள் வாழ்க்கையை ஓட்ட முடியாது.
இறை வழிபாடு தொடங்கி, குடும்ப விசேஷங்கள் வரை தங்கம், நம் மக்கள் வாழ்வின் ஒரு அங்கம்.
அப்படிப்பட்ட தங்கத்தின் விலை இந்த 2019-ல் கொஞ்சம் அதிக ஏற்றத்துடனேயே விற்பனை ஆகி வருகிறது. 2019-ம் ஆண்டில் தங்கத்தின் விலை போக்கு எப்படி இருந்தது,..?
விலை ஏற்றம்
கடந்த ஜனவரி 01, 2019-ல் 31,650 ரூபாய்க்கு விற்கத் தொடங்கிய 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை பிப்ரவரி 20, 2019 அன்று 35,130 என்கிற புதிய உச்சத்தைத் தொட்டது. பிப்ரவரி முதல் ஜூன் 20, 2019 வரை 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை இந்த 35,130 என்கிற உச்சத்தைக் கடக்கவே இல்லை. ஆக தங்கத்தின் விலை ஏற்றத்தில் இது தான் இந்த 2019-ம் வருடத்தின் முதல் பெரிய ஏற்றம்.
இரண்டாம் முறை
பின், ஜூன் 21, 2019 அன்று தான் மீண்டும் தங்கத்தின் விலை ஏற்றம் காணத் தொடங்குகிறது. ஜூன் 21, 2019 அன்று 24 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 35,380 என்கிற உச்சம் தொடுகிறது. அதன் பின் தங்கத்தின் விலை (Gold Price) நிதானமாக ஏற்றம் கண்டு செப்டம்பர் 04, 2019 வரை 41,070 என்கிற உச்ச விலையில் விற்கப்பட்டது. ஆக 2019-ம் ஆண்டில் மட்டும் சுமாராக 29.7% ஏற்றம் கண்டது தங்கம் விலை.
உச்ச விலை
கடந்த செப்டம்பர் 04, 2019 அன்று தான், 2019-ம் ஆண்டின் உச்ச விலையைத் தொட்டது தங்கம்.
அன்று 24 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,107 ரூபாய் வீதம் 32,856 ரூபாய்க்கு விற்பனையானது.
அதே போல 22 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3,768 ரூபாய் வீதம் 30,144 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
பெரிய விலை இறக்கம்
செப்டம்பர் உச்சத்தில் இருந்து அக்டோபர் 01, 2019 அன்று ஒரு நல்ல இறக்கம் கண்டது. உண்மையாகவே தங்கம் வாங்க நினைத்தவர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. அக்டோபர் 01, 2019 அன்று 24 கேரட் மற்றும் 22 கேரட் என தங்கம் விலை பவுனுக்கு சுமாராக 1,800 ரூபாய் விலை சரிவு கண்டது.
அக்டோபர் 01, 2019 அன்று
24 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3,867 ரூபாய் வீதம் 30,936 ரூபாய்க்கு விற்பனையானது. ஆக 1,920 ரூபாய் விலை சரிவு.
அதே போல 22 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3,545 ரூபாய் வீதம் 28,360 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக 1,784 ரூபாய் சரிவு.
போச்சே
இந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு சமீபத்தில் கூட ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. அக்டோபர் 01, 2019-க்குப் பிறகு நவம்பர் 02, 2019 வரை பெரிய விலை இறக்கங்கள் இல்லை. நவம்பர் 02, 2019 அன்று
24 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 4,041 ரூபாய் வீதம் 32,328 ரூபாய்க்கு விற்பனையானது.
22 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3,705 ரூபாய் வீதம் 29,640 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
நவம்பர் 12, 2019 அன்று
24 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3,951 ரூபாய் வீதம் 31,608 -ரூபாய்க்கு விற்பனையானது. ஆக 720 ரூபாய் விலை சரிவு.
அதே போல 22 கேரட் ஒரு பவுன் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3,622 ரூபாய் வீதம் 28,976 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஆக 664 ரூபாய் சரிவு.
இந்த வாய்ப்பையும் தவற விட்டவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்குமா என பொறுத்திருந்து தான் பார்கக் வேண்டும்.
எப்போது வாங்கலாம்
கடந்த 3 மாதங்களில் ஒரு சில நாட்களைத் தவிர 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு 3,600 ரூபாய்க்குக் கீழ் வந்ததில்லை. அப்படி வந்தால் கண்ணை மூடிக் கொண்டு தங்கத்தை வாங்கலாம். இன்னொரு நல்ல வாய்ப்பு வரும் என நம்பிக்கையோடு காத்திருப்போம். நல்ல காரியங்களுக்காக தங்கம் வாங்க காத்திருப்பவர்களுக்கு வாழ்த்துக்கள்.


Click it and Unblock the Notifications