தங்கம் விலை ஏற்கனவே, படு பயங்கரமாக அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இதற்கு மத்தியில், இந்திய தங்க டீலர்கள் வேறு, ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு 18 டாலர் வரை தள்ளுபடி கொடுப்பதாகச் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
இந்திய மக்களில், பெரும் பகுதியினரால், இனி தங்கம் வாங்கக் முடியாத தூரத்துக்கு சென்று கொண்டு இருக்கிறது என நகைக் கடைக்காரர்களும் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து இருக்கிறார்கள்.
போதாக்குறைக்கு கொரோனா வைரஸ் பிரச்சனை வேறு தங்கத்தை சகட்டு மேனிக்கு விலை அதிகரிக்க வைத்துக் கொண்டு இருக்கிறது. சரி சென்னையில் Gold rate என்ன? நாம் எதற்கு பயந்தோம் என்ன நடந்துவிட்டது? வாருங்கள் பார்ப்போம்.
சென்னை தங்கம் விலை
ஒரு காலத்தில் சென்னையை நோக்கி படை எடுத்த மக்கள், இன்று சென்னையை விட்டு தக்கள் சொந்த ஊருக்கு ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். காரணம் கொரோனா வைரஸ். அப்படிப்பட்ட சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 50,390 ரூபாய்க்கு விற்பனை செய்து இருக்கிறார்கள். கிராமுக்கு 5,039 ரூபாய் மேனிக்கு பவுனுக்கு 40,312 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள்.
22 கேரட் தங்கம் விலை என்ன
அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 46,180 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். 22 கேரட் 1 கிராம் தங்கத்தின் விலை 4,618 ரூபாய் மேனிக்கு 36,944 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். இனி தங்கத்தை சாமானியன் வங்கியது போலத் தான். இதை எல்லாம் விட நாம் பயந்தது நடந்துவிட்டது.
சர்வதேச தங்கம் விலை
சர்வதேச தங்கம் விலை, அதிகம் ஏற்றம் கண்டு விடக் கூடாது என்று தான், நாம் பயந்தோம். ஆனால் அதுவும் நடந்துவிட்டது. இந்த ஜூன் மாதத்தில், முதல் 3 வாரங்களில், தங்கம் விலை, 1,685 முதல் 1,750 டாலருக்குள்ளேயே வர்த்தகமாகிக் கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஒரு வாரத்தில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1750 டாலருக்கு மேலேயே வர்த்தகமானது. நேற்று 1,772 டாலரைத் தொட்டு வர்த்தகமானது.
அது ஏறினால், இது எகிறும்
சர்வதேச அளவில் தங்கம் விலை ஏறினால், அது சென்னையின் தங்கம் விலையில் கடுமையாக எதிரொலிக்கும் என முன்பே சொல்லி இருந்தோம். இங்கு அதே போல விலை எகிறிக் கொண்டு இருக்கிறது. 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கம் விலை 50,580 ரூபாயைத் தொட்டு வரலாற்று சாதனை படைத்து இருக்கிறது.
எம் சி எக்ஸ் தங்கம் விலை
இது போக, ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, 48,315 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது. ஆக சர்வதேச தங்கம் விலை ஏற்றத்துடன், இந்தியாவின் கமாடிட்டி எக்ஸ்சேஞ்சிலும் தங்கம் விலை அதிகரித்து இருக்கிறது. இது இந்தியாவில் தங்கம் விலை ஏற்றத்தை உறுதி செய்கிறது.
எதிர் காலத்தில் தங்கம் விலை
இன்னும் சில நாட்களில், ஒட்டு மொத்த உலகில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடி பேரைத் தாண்டும். அமெரிக்கா சீனா குழாய் அடிச் சண்டை தினம் தினம் புதிய வடிவத்தை எடுத்துக் கொண்டு இருக்கிறது. சீனாவின் கொட்டத்தை அடக்க, அமெரிக்கா, தன் துருப்புகளை பல நாடுகளுக்கு அனுப்ப இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. ஆக உலக பொருளாதாரம் கலக்கத்தில் தான் இருக்கிறது. எனவே தங்கம் விலை இதே விலையில் நீடிக்கவும், விலை அதிகரிக்கவுமே நிறைய வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
More From GoodReturns

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

Today Gold Silver Rate Live: தங்கம், வெள்ளி விலை கடும் சரிவு!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications