சர்வதேச தங்கம் விலை, இந்தியாவில் வர்த்தகமாகும் எம் சி எக்ஸ் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட் மற்றும் ஆபரணத் தங்கம் விலை மாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது.
சர்வதேச தங்கம் விலை, இன்று தடாலடியாக சரிந்து இருக்கிறது. ஒரு அவுன்ஸ் இண்டர்நேஷனல் தங்கம் விலை என்ன?
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை விவரம் என்ன? மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் வர்த்தகமாகும் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்ட்டின் விலை நிலவரம் என்ன? வாருங்கள் எல்லாவற்றையும் விரிவாகப் பார்ப்போம்.
ஒரு அவுன்ஸ் சர்வதேச தங்கம் விலை
சர்வதேச சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம், நேற்று அதிகபட்சமாக 1,990 டாலர் வரைத் தொட்டு வர்த்தகமானது. ஆனால் இன்று குறைந்பட்சமாக 1,959 டாலர் வரை விலை இறக்கம் கண்டு இருக்கிறது. தற்போது 1,962 டாலரில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது சர்வதேச தங்கம் விலை. இப்படி திடீரென 31 டாலர் விலை சரிந்ததால், இந்தியாவில் எம் சி எக்ஸ் தங்கம் விலையும் இறக்கம் கண்டு இருக்கிறது.
MCX Gold & Silver Future
இந்தியாவின் எம் சி எக்ஸ் சந்தையில் வர்த்தகமாகும், அக்டோபர் மாதத்துக்கான 10 கிராம் தங்க ஃப்யூச்சர் காண்டிராக்டின் விலை, நேற்று 51,502 ரூபாய்க்கு நிறைவடைந்தது. இன்று குறைந்தபட்சமாக 51,200 ரூபாயைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. செப்டம்பர் மாதத்துக்கான 1 கிலோ வெள்ளி ஃப்யூச்சரின் விலை, இன்று 67,200 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்னையில் தங்கம் விலை
சென்னையில் 24 கேரட் 10 கிராம் தங்கத்தை, நேற்று 54,200 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். அதே போல 22 கேரட் 10 கிராம் தங்கத்தின் விலை 49,720 ரூபாய்க்கு விற்று இருக்கிறார்கள். ஆபரணத் தங்கம் விலை, கடந்த 29 ஆகஸ்ட் 2020-ல் இருந்து தொடர்ந்து விலை ஏற்றம் கண்டு வந்தது.
ஆபரணத் தங்கம் விலை சரிவு
அனால் இன்று, அதே 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 53,630 ரூபாய்க்கு விற்கிறார்கள். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 49,160 ரூபாய்க்கு விற்கிறார்கள். மீண்டும் கிட்டத்தட்ட 29 ஆகஸ்ட் 2020 அன்று விற்பனை செய்த (24 கேரட்) 53,580 & (22 கேரட்) 49,120 விலையைத் தொடும் அளவுக்கு சரிந்து இருக்கிறது.
அமெரிக்க உற்பத்தி நடவடிக்கைகள்
கடந்த ஆகஸ்ட் 2020 மாதத்துக்கான, அமெரிக்க உற்பத்தி நடவடிக்கைகள் தொடர்பான தரவுகள் வெளியாயின. கிட்டத்தட்ட, கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அமெரிக்க உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரித்து இருக்கிறதாம். பொருளாதாரம் செயல்படத் தொடங்கிவிட்டது என்றாலே, தங்கம் விலை தடுமாறத் தொடங்கிவிடுமே. அது தான் இங்கும் நடக்கத் தொடங்கி இருக்கிறது.
பங்குச் சந்தைகளின் ஏற்றம்
அமெரிக்காவின் நாஸ்டாக், எஸ் & பி 500 தொடங்கி, பல நாட்டுப் பங்குச் சந்தைகளும், மீண்டும் தங்கள் பழைய உச்சங்களைத் தொட்டு வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன. தங்கத்தை விட, நல்ல வருமானத்தை பல பங்குகள் இந்தியாவிலேயே கொடுத்து இருக்கின்றன. எனவே தங்கத்தின் மீதான ஈர்ப்பு, முதலீட்டாளர்களுக்கு குறையத் தொடங்கி இருக்கிறது எனலாம். இது கூட தங்கம் விலை வீழ்ச்சி ஒரு முக்கிய காரணம் எனலாம்.
கோட்டக் செக்யூரிட்டீஸ்
ஒரு அவுன்ஸ் தங்கம் விலை, 1,900 டாலரை சப்போர்ட் எடுத்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. தங்கம் விலையின் மொமெண்டம் தொடர்ந்து பலவீனமடைந்துக் கொண்டே இருக்கிறது. தங்கம் விலையை மேல் நோக்கித் தள்ளும் விதத்தில் புதிய டிரிக்கர்கள் வரவில்லை என்றால், தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடனேயே வர்த்தகமாகலாம் எனச் சொல்லி இருக்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ்.
தங்கத்தில் புதிதாக முதலீடு செய்யலாமா
தற்போது, தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புபவர்கள், புதிதாக ஒரு லாங் பொசிஷன் எடுக்க விரும்புபவர்கள், ஒரு நல்ல கரெக்டிவ் விலை இறக்கம் வரும் வரை காத்திருக்க வேண்டும். இந்த விலை இறக்கத்தின் போது, புதிதாக ஒரு நல்ல லாங் பொசிஷன் எடுக்கலாம் என அறிவுறுத்தி இருக்கிறது கோட்டக் செக்யூரிட்டீஸ் நிறுவனம்.
தங்கம் விலை என்ன ஆகும்
1. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி, தன் வட்டி விகிதங்களை நீண்ட நாட்களுக்கு குறைவாகவே வைத்திருக்கும்.
2. 500 பில்லியன் டாலருக்கு, அமெரிக்கா அறிவிக்க இருக்கும் ஸ்டிமுலஸ் பேக்கேஜ் தொகை.
3. டாலர் இண்டெக்ஸ் கடந்த மே 2018-க்குப் பின், மிகப் பெரிய சரிவைச் சந்தித்து இருக்கிறது.
இவை எல்லாமே தங்கத்தின் விலையை அதிகரிக்க உதவும் காரணிகளே. எனவே இப்போது இல்லை என்றாலும், தங்கத்தின் விலை எதிர்காலத்தில் அதிகரிக்க நிறைய வாய்ப்பு இருக்கிறது எனலாம்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

Gold Silver Rate Live: தினமும் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம் விலை..! தங்க நகை காதலர்களுக்கு குட்நியூஸ்..!

மதுரை மக்களே இன்று தங்கம் வாங்கலாமா? உங்க ஊரில் ஒரு சவரன் விலை என்ன?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

கோயம்புத்தூர் தங்கம் விலை: தடாலடியாக சரிவு, முதலீட்டு செய்ய நல்ல வாய்ப்பு.. ஆனாலும் பொறுமையாக இருங்க..!!

Gold & Silver Rate LIVE: ஈரான் போரில் டிவிஸ்ட்.. தங்கம் விலை தடாலடி உயர்வு..!!

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் மெகா சரிவு.. ஆனந்த கண்ணீரில் மிடில் கிளாஸ் மக்கள்..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. எல்லாம் கச்சா எண்ணெய் விலையில் நடந்த டிவிஸ்ட் தான் காரணம்..!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு



Click it and Unblock the Notifications