Gold Silver Price Today: இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாராலும் எதிர்பார்க்க முடியாத வகையில் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைக் கண்டு வருகிறது. குறிப்பாக, பல்வேறு நாடுகளுக்கு இடையே ஏற்படும் திடீர் போர் பதட்டங்கள் போன்ற உலகளாவிய காரணிகள், தங்கம் விலையை ஜெட் வேகத்தில் உயர்த்தி, பின்னர் கணிசமாகக் குறைத்து வருகின்றன. இந்த நிலையில், கடந்த மாதம் ஜூன் 14-ஆம் தேதி வரலாறு காணாத வகையில் தங்கம் விலை உயர்ந்து, அன்று ஒரு கிராமுக்கு ரூ.9,320 ஆகவும், ஒரு சவரனுக்கு ரூ.74,560 ஆகவும் விற்பனையானது. அதன் பின்னர் ஜூன் 21-ஆம் தேதி முதல் தங்கம் விலை சற்று சரிவையே சந்தித்து வந்தது.
கடந்த சில நாட்களின் விலை நிலவரம்: கடந்த வாரம், தங்கம் விலை பெரும் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது. கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சவரனுக்கு ரூ.840 உயர்ந்த நிலையில், புதன்கிழமை ரூ.360 ஆகவும், வியாழக்கிழமை ரூ.320 ஆகவும் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.72,840-க்கு விற்பனையானது. அதன் பிறகு, அடுத்த சில நாட்களாக தங்கம் விலை சற்று குறைந்து காணப்பட்டது. எனினும், கடந்த சனிக்கிழமை (ஜூலை 12) ஒரு சவரனுக்கு ரூ.520 அதிகரித்து, நகை வாங்குவோருக்கு அதிர்ச்சியளித்தது. நேற்று திங்கட்கிழமை (ஜூலை 14) ஒரு சவரன் தங்கம் ரூ.120 உயர்ந்து, ரூ.73,240-க்கும், ஒரு கிராம் ரூ.9,155-க்கும் விற்பனையானது.

இன்றைய நிலவரம்: இந்த நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.73,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.9,145-க்கு விற்கப்படுகிறது. இது கடந்த சில நாட்களின் தொடர் ஏற்றத்திற்குப் பிறகு, நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கு ஒரு சிறு ஆறுதலாக அமைந்துள்ளது.
24 காரட் தங்கம்: நேற்று ஒரு சவரன் ரூ.79,904 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.88 குறைந்து ரூ.79,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.9,988 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.11 குறைந்து ரூ.9,977-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் தங்கம்: ஒரு சவரன் 22 காரட் தங்கம் நேற்று ரூ.73,240 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.80 குறைந்து ரூ.73,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று ரூ.9,155 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.10 குறைந்து ரூ.9,145-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
18 காரட் தங்கம்: இன்று ஒரு சவரன் 18 காரட் தங்கம் ரூ.40 குறைந்து ரூ.60,280 ஆகவும், ஒரு கிராம் ரூ.5 குறைந்து ரூ.7,535 ஆகவும் விற்கப்படுகிறது. இதன் நேற்றைய விலை ஆனது ஒரு சவரன் ரூ.60,320 ஆகவும் ஒரு கிராம் ரூ.7,540 ஆகவும் இருந்தது.
வெள்ளி விலை நிலவரம்: சென்னையில் இன்று வெள்ளி விலை சரிந்துள்ளது. இன்று வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி நேற்று ரூ.127 ஆக இருந்தது. இன்று ரூ.2 குறைந்து ரூ.125 ஆக சரிந்துள்ளது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி நேற்று ரூ.1,27,000 ஆக இருந்த நிலையில், இன்று ரூ.2,000 குறைந்து ரூ.1,25,000 ஆக குறைந்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியும் முதலீட்டாளர்களுக்கு ஒரு கவர்ச்சிகரமான விருப்பமாக மாறி வருகிறது. தொழில்துறை பயன்பாடுகளிலும் வெள்ளியின் தேவை அதிகரித்து வருவது அதன் எதிர்கால விலை உயர்வுக்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கிறது.
தங்கத்தின் இந்த தொடர்ச்சியான விலை ஏற்ற இறக்கங்கள், உலகப் பொருளாதார நிலைத்தன்மையின்மை, மத்திய வங்கிகளின் பணவியல் கொள்கைகள், கச்சா எண்ணெய் விலைகளில் ஏற்படும் மாற்றங்கள், அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் போன்ற பல்வேறு உலகளாவிய காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தப் பொருளாதாரச் சூழலில், முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீட்டுப் புகலிடமாகத் தங்கத்தை நாடுவதே இந்தத் தொடர் விலை மாற்றங்களுக்கு முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உயருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். நகை வாங்க நினைப்பவர்கள், சந்தை நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்து முடிவெடுப்பது சிறந்தது.
More From GoodReturns

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்க குழந்தையாக மாறிய சஞ்சு சாம்சன் – இது தான் 'கன்வெக்ஸ்' வெற்றியா? காத்திருந்து கிடைத்த பெரும் லாபம்!



Click it and Unblock the Notifications