திடீரென யூடர்ன் எடுத்த தங்கம் விலை: 10 நாட்களில் இத்தனை மாற்றமா?

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் விலை திடீரென உயர தொடங்கியிருக்கிறது. இந்த வாரத்தில் திங்கட்கிழமை தொடங்கி வியாழக்கிழமை காலை வரை படிப்படியாக சரிவடைந்து வந்த தங்கம் நேற்று மாலை முதல் மீண்டும் விலை உயர தொடங்கியிருக்கிறது. அந்த வகையில் ஜூலை 1ஆம் தேதி தொடங்கியதிலிருந்து இன்று வரையிலான இந்த 10 நாட்களில் என்னென்ன மாற்றங்களை சந்தித்து இருக்கிறது, இன்றைய தினம் தமிழ்நாட்டின் பிரதான நகரங்களான சென்னை, கோவை ,மதுரை, திருச்சி ஆகிய ஊர்களில் தங்கம் விலை என்ன என்பதை நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 22 கேரட் ஆபரண தங்கம் இன்று ஒரு கிராமுக்கு 30 ரூபாய் விலை உயர்ந்து 13,350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை 13,320 ரூபாய்க்கு விற்பனையான தங்கம் இன்று காலை விலை உயர்வு கண்டிருக்கிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 240 ரூபாய் விலை உயர்ந்து 1, 06,800 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஜூலை 1ஆம் தேதி அன்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 13,250 ரூபாயாக இருந்தது.

திடீரென யூடர்ன் எடுத்த தங்கம் விலை: 10 நாட்களில் இத்தனை மாற்றமா?

மாதம் முழுவதும் தங்கம் ஏறுவதும் இறங்குவதுமாக இருந்த நிலையில் இன்று ஒரு கிராம் 13,350 ரூபாய் என விலை உயர்ந்துள்ளது. அதாவது ஜூன் 1ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது கிராமுக்கு 100 ரூபாயும் சவரனுக்கு 800 ரூபாயும் விலை உயர்ந்துள்ளது. இந்த வாரத்தில் தொடர்ச்சியாக குறைந்து வந்த தங்கம் வார இறுதி நாளில் மீண்டும் விலை உயரத் தொடங்கி இருப்பது மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.

Also Read

24 கேரட் தங்கத்தை பொருத்தவரை ஒரு கிராம் 14564 ரூபாய்க்கும் 10 கிராம் தங்கம் 1,45,640 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,170 ரூபாய்க்கும் ஒரு சவரன் 89, 360 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் மற்றும் 24 கேரட் தங்கத்தை விட 18 கேரட் தங்கம் தான் அதிக விலை உயர்ந்திருக்கிறது. கிராமுக்கு 90 ரூபாயும் ஒரு சவரனுக்கு 720 ரூபாயும் விலை உயர்வு கண்டிருக்கிறது.

Recommended For You

வெள்ளியை பொருத்தவரை அதன் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2.45 லட்சத்திற்கு விற்பனையாகிறது. ஜூலை 1ஆம் தேதியும் ஒரு கிராம் வெள்ளி 245 ரூபாய்க்கு தான் விற்பனையானது. அதன்பின்னர் ஒரு கிராம் 260 ரூபாய் வரை உயர்ந்து பின்னர் விலை குறைந்தது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+