அக்டோபர் 23-ஆம் தேதியான இன்றைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது. இன்றைய தினம் 24 கேரட் தங்கம் 8,000 என்ற மிகப்பெரிய விலையை எட்டியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்குள் ஒரு சவரன் தங்கம் ஒரு லட்ச ரூபாயை எட்டு விடும் என்ற நிபுணர்களின் கருத்து பலித்து விடும் சூழல் தான் தற்போது நிலவி வருகிறது. இன்றைய தினம் ரீடைல் சந்தையில் 1 கிராம் தங்கம் விலை 7,340 ரூபாயாகவும், அதேபோல 1 கிராம் 24 கேரட் தங்கம் விலை 8,007 ரூபாயாகவும் உள்ளது.
கோவை மதுரையில் இன்றைய தங்கம் விலை நிலவரம்: கோவை மற்றும் மதுரையில் இன்று 1 தங்கம் விலை 40 ரூபாய் அதிகரித்துள்ளது. 1 கிராம் 22 கேரட் தங்கம் 7,340-க்கும், 1 சவரன் 22 கேரட் தங்கம் 58,720-க்கும் விற்பனையாகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று 1 சவரன் 22 கேரட் தங்கம் ரூ.320 அதிகரித்துள்ளது.

1 கிராம் 24 கேரட் தங்கம் 43 ரூபாய் அதிகரித்து 8,007 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 1 சவரன் 24 கேரட் தங்கம் 64,056 ரூபாயாக உள்ளது. நேற்றோடு ஒப்பிடுகையில் இன்று சவரனுக்கு 344 ரூபாய் அதிகரித்துள்ளது.
பொதுவாக 22 கேரட் தங்கம் மென்மையாக இருக்கிற காரணத்தினால் இதை வைத்து நகைகள் செய்ய முடியாது. 24 கேரட், 23 கேரட் போன்றவற்றில் மட்டுமே நகைகள் செய்யப்படுகிறது. ஆனால் இந்த விலைதான் இறுதி விலையா? என்று கேட்டால் அது கிடையாது.
நகைகள் செய்வதற்கு மேக்கிங் சார்ஜஸ், ஜிஎஸ்டி போன்ற இதர கட்டணங்களும் சேர்த்து தான் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று 24 கேரட் தங்கத்தின் 10 கிராம் விலை 80,000 ரூபாயை எட்டியுள்ளது. இதோடு மேக்கிங் சார்ஜஸ், ஜிஎஸ்டி போன்ற கட்டணங்களையும் சேர்த்து வாங்கும்போது மக்களுக்கு மிகவும் விலை உயர்ந்ததாக தோன்றலாம். சாமானியர்களுக்கும் சங்கடம் தரும் வகையில் தங்கம் விலையில் இன்று மிகப்பெரிய ஏற்றம் உள்ளது.
பட்ஜெட்டில் ஏற்பட்ட சுங்க கட்டண குறைப்பிற்கு பிறகு தங்கம் விலை வெகுவாக குறைந்தது. அதன் பிறகு மீண்டும் ஏறத் தொடங்கியது. ஆனால் அப்போதே நகை கடைக்காரர்கள் சிலர் நகைகளை வாங்கி ஸ்டாக் செய்து கொண்டனர். இதன் காரணமாக 2024-ஆம் ஆண்டில் தங்கத்தின் சில்லறை விற்பனை 22 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை அதிகரிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்: வெள்ளி விலை இன்றைய தினம் 2 ரூபாய் அதிகரித்து கிராம் ரூ.112 ரூபாயை எட்டியுள்ளது. இதனால் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 1 கிலோ வெள்ளி விலை 1,12,000 ரூபாயாக உள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

தங்கத்தைவிட வெள்ளி லாபமா? ரேஷியோ 72-ஐ தாண்டினால் என்னவாகும்?டாட்டா மியூச்சுவல் தரும் அப்டேட்?

துபாயில் தங்கத்தை விற்றுத்தள்ளும் இந்தியர்கள்.. இதென்ன புது கதையா இருக்கு..?!

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

Dubai: தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்.. துபாயில் மட்டும் ஏன் இப்படி..?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!



Click it and Unblock the Notifications